டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர்.
அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். பிறகு ஏன் நீத்தியால் இந்தியாவை மாற்ற முடியவில்லை? ஒரு வேலை எண்ணிக்கை அதிகம் போலும். அவரது செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அவரை விவேகானந்தருடன் ஒப்பிட்டுப் பேசினேன் என்றார். ஐயா உங்கள் நீத்தி போல் ஒரு போதும் விவேகானந்தவர் பாலியல் வழக்கில் சிக்கியத்தில், ஆடி காரில் ஊர் சுற்றியத்தில் இல்லை, தன்னை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டது இல்லை தனக்கு என்று சொந்தமாக சொத்து சேர்த்தது கிடையாது.
மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அதை சில சுயநலவாதிகள் அனுபவித்து வருகிறார்கள்.சரி அப்படி என்றால் நீத்தியிடம் உள்ள சுமார் 2000 கோடி உள்ள சொத்துக்கள் அவர் எப்படி சம்பாதித்தார் அதை பற்றி நீங்கள் சொல்லுவீர்களா? அவர்களிடமிருந்து சொத்துக்களை நித்தியானந்தா மீட்டு விடுவார் என்று பயந்துதான் அந்த சுயலவாதிகள் தூண்டுதலின் பேரில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன என்று கூறுகிறார் டிராபிக்.
சரி நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் உள்ளனவே என்ற கேள்விக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும்தான் இருக்கிறது. மேலும் நித்தியானந்தா மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்படவே இல்லையே என்றார் டிராபிக். ஐயா வழக்கு உன்னாம் முடியவில்லை, தீர்ப்பும் வரவில்லை அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்