RSS

Tag Archives: அன்புமணி ராமதாஸ் BCG TT Inj. Tab. Doctor Drugs

அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்


சென்னை, குன்னூர் மற்றும் கசவுலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றியுள்ளதுதனியார் நிறுவனங்களை நம்ப முடியாது என்ற நிலையில் தற்போது இம்மையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது

.

தமிழகத்தின் சென்னை, குன்னூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கசவுலி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மூடுவது என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இம்முடிவினால் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் லாபமடையும் என்றும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன

.

ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி வரைமுறைகளுக்கு உள்ளிட்டு இம்மையங்களில் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்பு மணி உத்தரவிட்டார் ஆனால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை, குறைந்த செலவில் தனியார் நிறுவனங்களினால் வழங்கமுடியாது என்பதை அறிந்து, தற்போது மீண்டும் இந்த 3 நிலையங்களிலும் உற்பத்தியை தொடங்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இங்கே தான் அன்புமணியின் ஊழல் ஆரம்பம் ஆகிறது.

மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார். ஆணை பிறப்பித்த கையோடு இனி இந்த மருந்துகளை தனியார் நிறுவனக்களிடம் அரசு கொல்முதல் செய்யும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த தனியார் நிறுவனம் எது தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா

 

இது யாருடையது தெரியுமா?

பி. சுந்தரபரிபூரணம் 

இவர் யார் தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.

திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.

 

பொது துறை நிறுவங்கள் மூட யார் காரணம் ?

முதலில் இந்த பாஸ்டர் ஆய்வகத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த பாஸ்டர் ஆய்வகம் 1907 ஏப்ரல் 6 அன்று பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் ஸதர்ன் இந்தியா என துவங்கப்பட்டது. பின்னர் 1977 பிப்ரவரி 10ல் பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் இந்தியா (தன்னாட்சி) ஆனது. அப்போது இதை எதிர்த்து பல போராட்டங்கள் அப்பகுதி மக்களால் நடத்தப்பட்டது. கடைசியில் அரசு வென்றது. 1907ல் வெறி நாய்க்கடி மருந்து மூளைத் திசு மூலம் தயாரிக்கப்பட்டது. 1957ல் ஆசிய ப்ளூ வைரஸ் தனித்து எடுக்கப்பட்டது. 1970ல் இந்தியாவில் முதல் முறையாக வெறி நாய்க்கடிக்கானா மருந்து மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகப் படுத்தப்பட்டது. 1970 இந்தியாவில் முதல் முறையாக போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1982ல் தேசிய தடுப்பு மருந்து திட்டதிற்க்காக முத்தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1988ல் வெறி நாய்க்கடிக்கான மருந்து திசு வளர்ப்பு மூலம் தயாரிக்கப்பட்டது.

இத்தனை பெருமையும் பெறுவதற்கான முயற்சிகள் அத்தனையும் இந்திய தொழில் நுட்பத்தினால் மட்டுமே அடைந்தது. இதில் வேறு எந்த நாடும் நமக்கு வழங்கவில்லை.ஆனால், இப்போது பொறுப்பில் வகிக்கும் நிர்வாக இயக்குநர் இலங்கேஸ்வரன் மிக திறமையாக இயங்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு துறையையும் படிப் படியாக முட நிரந்தரமாக மூடி விட்டார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உயிர் வாழும் வெள்ளை எலி கூடத்தை சென்னைக்கு மாற்றினார், இதன் மூலம் 544 வெள்ளை எலிகள் இறந்துவிட்டது. உடனே இந்த ஆய்வு கூடத்தை மூடி விடும் படி உத்தரவு பிறப்பித்தார். சர்வதேச சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற போலியோ சொட்டு மருந்துகளை சோதனை செய்யும் கூடத்தை எந்த காரணமும் இன்றி மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளான டிடிபி எனப்படும் டிப்தீரியா,டெட்டனஸ், பெர்ட்டிசிஸ் ஆகியவை ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான், ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் முத்தடுப்பு மருந்துகளாகும். நாட்டின் தேவையில் 60 % இந்த ஆய்வகம் தயாரிக்கிறது. இப்போது இந்த ஆய்வகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற முக்கியமான ஆலோசனை கூட்டம் (05.02.2008)புது டில்லியில் சுகாதார செயலாளர் முன்னிலையில் கூடிய பொதுகூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்னையில் இலங்கேஸ்வரன் ஓய்வு எடுத்து கொண்டார். அதனால் அக்கூட்டத்தில் இதை வெறும் ஆய்வு கூடமாக வைத்து கொண்டு உற்பத்ியை நிறுத்துவது என முடிவு செயப்பட்டது. 

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி . சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.

தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியா பயனீர் நாளிதழ் வெளியிட்டது.

உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன.

 

சரி, இவர்கள் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு எங்கு இருந்து பணம் வந்தது?

சென்னையில் உள்ள ஒரு வங்கியில் தான் கடன் பெற்றுருக்கிறார்கள். இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது. 

தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.கடந்த 3 காலாண்டுகளாக டிபிடி மற்றும் டிடி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லாபமின்றி தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் தருவதாக உறுதியளித்திருந்த தனியார் நிறுவனங்கள், பின்னர் தங்களது வாக்குறுதியை மீறி விலையை 40 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்தனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பிய பொது அன்பு மணி ராமதாஸ் இந்தியாவில் தடுப்பு ஊசி  மருந்து தட்டுப்பாடு உள்ளது என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்.

இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.

Advertisements
 

குறிச்சொற்கள்: