RSS

Category Archives: மருத்துவம்

மருந்து நிறுவனங்களின் பகல் கொள்ளை


சமீபத்தில் உச்சநீதிமன்றம், மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய மருந்துகள் மத்திய அரசின் விலைக் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றனவா என்றும் ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் உள்ளனவா என்றும் மத்திய அரசை வினவியுள்ளது. இதுநாள் வரையில் மத்திய அரசும், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் இதன்மேல் மௌனம் சாதித்து வருகின்றன. அப்படியென்றால் மருந்துகளின் விலைகள், நிர்ணய விலைக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அதை கட்டுப்படுத்திட மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுத்திட வில்லை என்று தான் அர்த்தமாகும்.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வானளாவிய உயரத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் வேளை யில் மருந்துகளின் விலைகள் என்பது விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியன் வருமானத்தில் மருந்துகளின் செலவு என்பது மாதாமாதம் உயர்ந்து கொண்டி ருக்கிறது. இந்திய அரசின் 2004-05 அறிக்கையின்படி தனி மனித செலவீனத்தில் மருத்துவத்திற்காக கிராமங்களில் 7 சத வீதமும் நகரங்களில் 5 சதவீதமும் செலவிடப்படுகிறது. 2010-11ல் இதில் குறைந்த பட்சம் 150-200 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் தாராளமயக் கொள்கையின் விளைவாக, மருந்துத் துறையில் 100சதவீதம் அந்நிய மூலதனம் அனுமதித்ததன் காரணமாக பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் இந்திய மருந்துத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகி, இந்திய மக்களை, தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது. இதை தடுத்திட வேண்டுமென்று இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு, விலைகள் குறைய வேண்டுமென்றால் சாத்தியமே இல்லை.

348 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ஆனால் 37 மருந்துகள் மட்டும்தான் விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ளன. மற்ற 311 மருந்துகளும் மருந்து நிறுவனங்களின் லாபவெறிக்கு விட்டு விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தத்திற்கான மருந்து மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

மேலும் கே.ஸ்ரீநாத் தலைமையிலான திட்டக் குழுவின் மக்கள் நலன் உபகுழு தனது அறிக்கையில், “மருந்துகளின் விலை நிர்ணயத்தில் இந்திய அரசின் மெத்தனப் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு மருந்துகளை அதிக பட்சமாக விலை உயர்த்தி தனது லாபத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வுக்கு காரணம்தான் என்ன?

1. மருந்து நிறுவனங்களின் லாப வெறிதான் காரணம். தயாரிப்பு விலைகளிலிருந்து பல நூறு மடங்கு வரை அதிகபட்ச விலை (M.R.P) வைத்து நோயாளி தலையில் கட்டுகிறது. நோயாளியும் தன் உயிர் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும் தன் உடமைகளையெல்லாம் விற்று அதில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை!

2. மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரை செய்திட மருத்துவர்களுக்கு அன்பளிப்பு, உபசரிப்பு என்கின்ற தரக் குறைவான யுக்திகளை கையாளுகின்றது.

உதாரணம்: குடல் புண்ணிற்கான ராணிடின் மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 2.33 கோடி ரூபாய் செலவு செய்து 466 மருத்துவர்களை துபாய்க்கு உல்லாச பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றது. அதேபோன்று  எனும், அல்சர் மாத்திரையை பரிந்துரைத்திட மருத்துவர்களுக்கு சராசரியாக ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ளது. அது மட்டுமல்ல, தங்க நாணயங்கள், வெள்ளிக் காசுகள், தொலை காட்சிப் பெட்டிகள், விலை உயர்ந்த ப்ளாக் பெர்ரி செல்போன்கள் என அள்ளிவீசியுள்ளது.

மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் இறுதியாக நோயாளிகளின் தலையில் தான் விழுகின்றது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்தான மெரோபனம் எனும் மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 2300. இது மருத்துவர்களுக்கு அல்லது மருந்துக் கடைக்கு ரூ.470க்கு கொடுக்கப்படுகின்றது. ஆக மருத்துவர்களுக்கு ரூ. 1830 லாபமாக கிடைத்துள்ளது. இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

இது ஒரு பக்கம் இருக்க, புதிய மருந்துகள் அறிமுகம் என்கின்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் சோதனைக்களமாக மாற்றி, கடந்த 2008-10 வரை 1660 அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இதில் பெரும் பாலானோர் மலை வாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் முறையற்ற சோதனையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. அதாவது தடாலில் எனும் மருந்து ஆண்களுக்கு அவர்களின் புணர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்தாகும். இதை ஒரு மருந்து நிறுவனம் இரத்த அழுத்த நோய்க்காக அப்பாவி மக்களிடம் அவர்களுக்கே தெரியாமல் சோதனை செய்தது. இதில் பலர் மடிந்துள்ளனர். இந்த கோர நிகழ்ச்சிக்கு காரணமான மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இது தொடர்கதையாக இருக்கிறது.

இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதே நிறுவனங்கள் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டு சட்டத்தில் உள்ள உரிமைகள், சலுகைகள், சமூக பாதுகாப்பு போன்றவைகளை அளிப்பதே இல்லை.

குறிப்பாக “பிகாசில்ஸ்”(Becosule) எனும் சத்து மாத்திரை தயாரிக்கும் பைசா(Pfizer) எனும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது நிறுவனத்தில் தொழிலாளர்களும், மருந்து விற்பனை பிரதி நிதிகளும் இல்லை என்று தொழிலாளர் ஆணையரிடம் தெரிவித்துள்ளது. ஆனால் தொழிலாளர் அலுவலர் அவர்கள், தனது விசாரணை அறிக்கை யில் 1985 தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள்(Medical Rep) பணிபுரிகின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆக, இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கான சலுகைகள், சட்ட உரிமைகளை மறுத்து, இதுநாள்வரை இந்தியாவில் வியாபாரம் செய்து பல ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மருந்து நிறுவனங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் இந்தியாவில் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டிடவும், மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைத்திடவும், விலை நிர்ணயப் பட்டியலில் அனைத்து மருந்துகளும் கொண்டுவர வேண்டுமெனில், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடவேண்டும்.

மருந்து நிறுவனங்களின் வானளாவிய லாபத்தை குறைத்திட சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மருந்துகளின் அதிகபட்ச விலைகளை நிர்ணயிக்க அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும். அந்த சட்டங் களை அமல் படுத்திடாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருந்து தயாரிப்பு, விநியோகத்தை ஊக்கப்படுத்திட வேண்டும். இதற்கான போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும்

 

குறிச்சொற்கள்:

பன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்!


பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ்இப்போது பன்றிக் காய்ச்சல்! இப்படி ஒவ்வொருவிதமான பெயர் தாங்கிய நோய்களைப் பற்றி பீதியை கிளப்புவதும், அதன் மூலம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் அரசாங்கங்களின் தெளிவற்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பயமுறுத்துவதாக உள்ளது.

பன்றிக்காய்ச்சல் என்பது இன்று புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமல்ல. 1918ல் தோன்றிய ப்ளூ காய்ச்சலில் எச்1என்1 வைரஸின் சாயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1977ல் எச்1என்1, எச்3என்2 போன்ற வைரஸ்கள் காணப்பட்டன. அப்போதிருந்து இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் எவ்விதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது பரிந்துரைக்கப்படும் தமிஃப்ளூ மாத்திரை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படும் சோர்வு, தசைவலி, சளி, இருமல், வாந்தி அல்லது பேதி போன்றவற்றில் ஒன்றிரண்டை போக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அது குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்ல. ஆனால் மருந்துக் கம்பெனிகள் தங்களுடைய சந்தையை துவங்கிவிட்டன. ஒரு தமிஃப்ளூ மாத்திரையின் விலை 300 ரூபாய். பீதியையும் தேவையையும் பொறுத்து இன்னும் விலை கூடினாலும் ஆச்சரியமில்லை.

பன்றிக்காய்ச்சல் பற்றிய ஆய்வுகளின் முடிவுகளும், நடைமுறையும் குழப்பமான வையாக உள்ளன.

* வைரஸ் என்பது உலகிலேயே மிகவும் நுண்ணிய உயிர் என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இது துணி, முகமூடி போன்றவற்றின் நுண்துளைகளை விடச் சிறியது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பிற்காக எந்தவித பயனுமற்ற முகமூடிகளை சந்தையில் உலவவிட்டது யார்?

* பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் காற்றில் பரவுவதாகக் கூறப்படுகிறது. அப்படி காற்றில் அதிவேகமாகப் பரவும் வைரஸ் ஒரு குடும்பத்தில் ஒரு நபரை மட்டும் தாக்குகிறது. ஒரு ஊரில் 5, 10 பேர்களை மட்டும் தாக்குகிறது. இன்னும், இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் சுகாதார வசதியற்றவர்களிடம் ஏன் பரவவில்லை? காய்ச்சல் பற்றிய பீதியும், மருந்து வியாபாரமும் மட்டுமே பரவுகிறது.

* அவ்வப்போது ஏற்படும் பறவைக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் கிருமிகள் எங்கிருந்து வருகின்றன என்பதும், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் எங்கு செல்கின்றன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

* அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கைகளின்படி 2005ம் ஆண்டு முதல் 2009 பிப்ரவரி வரை பன்றிக்காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 12 பேர்தான்! நான்கு ஆண்டுகளில் இல்லாத புதிய வேகம் கிருமிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது புரியாத புதிர்தான்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள எச்1என்1 வைரசில்வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பன்றிகளின் மரபணுக்களும், பறவைகள் மற்றும் மனித மரபணுக்களும் இணைந்து காணப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.

மரபணு மாற்ற தொழில்நுட்ப ஆய்வுகளே எச்1என்1 வைரசின் தோற்றத்திற்கும், பெருக்கத்திற்கும் காரணம் என்று கூறுகிறார் தமிஃப்ளூ ஆய்வுக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஆஸ்ட்ரோ அட்ரியன் கிப்ஸ்.

இவ்வளவு ஆய்வுகளும் அதன் குழப்பங்களும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலானவை. மாற்று மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர் போன்ற மருத்துவங்களை அரசு எப்போதும் போல் இப்போதும் கண்டுகொள்வதில்லை.

காய்ச்சல் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கூறுகளை உடலே வெளியேற்றும் முயற்சியாகும். உடலின் எதிர்ப்பு சக்திக்கும்நோய்க்கூறுகளுக்குமான போராட்டம் தான் வெப்பமாக வெளிப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் என்பதும் நோய்க்கெதிரான உடலின் போராட்டம்தான். உடலிற்கு துணை செய்யும்படியான இயற்கையான சிகிச்சை முறைகளை அரசுகள் பரிந்துரைப்பதுதான் மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் ஒரே வழி! ரசாயனத் தடுப்பு மருந்துகளின் பின்னால் ஓடுவது பன்னாட்டுக்கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சீரழிவிற்கும் வழிவகுக்கும்!

 

குறிச்சொற்கள்:

ராஜாவின் அடுத்த ஊழல்


imagegenerator

மத்திய அமைச்சர் . ராசா மீது மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டைதி பயனீர்நாளிதழ் சுமத்தியிருக்கிறது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் . ராசா மீது 2ஜி மற்றும் 3ஜி வழங்கியது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்கள் மனத்திலிருந்து இன்னும் நீங்காத நிலையில், தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டினைதி பயனீர்நாளிதழ் சுமத்ியிருக்கிறது. இந்த தடவை, BSNL நிறுவனம் சமீபத்தில் வைமாக்ஸ் சர்வீஸ்(WiMax services) தொடர்பாக, அமைச்சரின் தொகுதியான பெரம்பலுரைச் சேர்ந்த அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய நண்பருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அது குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்தியாவில் BSNL நிறுவனத்தின் கீழ் 16 சர்க்கிள்கள் இருக்கின்றன. இவற்றில் வருவாய் அதிகம் வரக்கூடிய ஏழு சர்க்கிள்களுக்கு வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் (Wellcom Communication India Private Ltd) என்னும் நிறுவனம் உரிமங்கள் கோரி விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிறுவனம் உரிமங்களைப் பெற்றபின், முன் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்றது போல், தற்போது விற்றிடலாம் என்று நிறுவனத்தின் முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

BSNL நிறுவனமே நேரடியாக வைமாக்ஸ்சை அளித்திடக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்றிருக்கூடிய சூழ்நிலையில் இதனை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கோருகின்றனர். வைமாக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக வருங்காலத்தில் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களுக்குக்கான ஒயர்லஸ் இண்டர்நெட் வசதி, வாயிஸ் மெயில் வசதிகளைப் பெற்றிடமுடியும். முதலாம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் வைமேக்ஸ் இணைப்புகளுக்கான சந்தாதாரர்கள் கிடைத்து விடுவார்கள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களாக உயர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

2008 நவம்பரில் வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் உரிமங்களுக்கு விண்ணப்பித்தது. சென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறிய அளவிலான இன்ஜினியரிங் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தன. இந்த நிறுவனம் 2006 டிசம்பரில் வெறும் 10 லட்சம் மூலதனத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இது 2008 நவம்பரில் 10 கோடி ரூபாயாக உயந்துவிட்டது. வைமாக்ஸ்க்கான போட்டியில் ஈடுகொட்டுப்பத்தற்காகவே இவ்வாறு இன்நிருவனம் மூலதனம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் கம்பெனியில் டி. சில்வராஜூ என்பவரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. இவருக்கு இக்கம்பெனியில் 15 சதவிதப் பங்குகள் இருக்கின்றன. இக்கம்பெனியின் மற்ற இரு இயக்குநர்கள் டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு மற்றும் டி.குணசேகரன் தியாகராஜன் என்பவர்களாவார்கள். இருவரும் மலேசியப் பிரஜா உரிமை கொண்டுள்ள தமிழர்கள். டாட்டொ விஜயகுமார் ரத்னவேலு இதே பெயரில் மலேசியாவிலும் ஒரு கம்பெனியை நடத்தி வருகிறார்.

சில்வராஜூ அமைச்சர் ராசாவின் பெரம்பலுர் தொகுதியைச் சேர்ந்தவர். அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் டாக்டர் சி. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். அமைச்சர் ராசா, அமைச்சராவதற்கு முன்பு இந்த சி.கிருஷ்ணமூர்த்தியின் கட்டத்தில்தான் தன் வழக்கறிஞ்ர் தொழிலை ஆரம்பித்தார். சில்வராஜூ தற்சமயம் மத்திய பொதுப் பணித்துறையின் (CPWD) கீழ் சப்-கான்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவர் மேற்படி கிருஷ்ணமூர்த்திக்கு, தற்சமயம் என்எச்45 -சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின்கீழ் நடந்துவரும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஒரு குவாரியிலிருந்து ஜல்லி வழங்கிவருகிறார்.

இந்த கிருஷ்ணமூர்த்தி, ராசாவின் அண்ணன் மற்றும் அக்கா மகன்கள் மற்றும் மகள்களுடன் இணைந்து கோவை செல்டர்ஸ் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டெட் கம்பெனியை நடத்திவறுவதாகதி பயனீர்ஏற்கனவே கூறியிருந்தது.

BSNL இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்பே உரிமதாரர்களைக் கோரியிருந்த போதிலும், அதன்மீது இறுதிப்படுத்தும் முறையை, அமைச்சரின் வற்புருத்தலின் காரணமாக BSNL நிறுவனம் தள்ளிப்போட்டுக் கொண்டேவந்தது. அமைச்சர் ராஜாவின் நிர்ப்பந்ததின் காரணமாக நிறுவனத்தின் தலைவரும் மேலான் இயக்குநருமான குல்தீப் கொயல் உரிமங்கள் வழங்கும் பணியினை ஜனவரி மத்தியவாக்கில் தொடங்கினார்.

வெல்காம் கம்யூனீகேஷான்ஸ் சென்னை, கர்நாடகா, ராஜஸ்தான், பிகார், உத்தரப்பிரதேசம் (மேற்கு) அரியானா மற்றும் ஓரிசா சர்க்கிள்களுக்கு விண்ணப்பித்திருக்கின்றன. அநேகமாக அடுத்த வாரத்திற்குள் உரிமதரர்களை BSNL நிறுவனம்உறுதிப்படுத்திவிடும் என்றுதி பயனீர்க்குக் தெரிய வந்திருக்கிறது.

BSNL நிறுவனம் முன்னேப்பொதும் இல்லாத அளவிற்கு தனியார் கம்பெனியான ‘ஸ்வான் டெலிகாம்’ என்னும் நிறுவனத்திற்கு சர்க்கிள்களுக்கு இடையிலான ரோமிங் சர்விசை எந்தவித நிதிப்பயனுமின்றி அளித்தது குறித்து ஏற்கனவே ‘ தி பயனீர்’ வெளியிட்டிருக்கிறது. BSNL நிறுவணத்தைச் சார்ந்த வல்லுநர் குழு, ஒவ்வொரு அழைப்புக்கும் 52 காசுகள் லெவி வசூலிக்கவேண்டும் என்று பரிந்துரைத்திருந்த போதிலும், அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மேலும் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட், மற்றும் ஈக்வாஸ் எஸ்டேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஆகிய கம்பெனிகளும் . ராசா அமைச்சரான பின் உருவாயின. இந்த இரு நிறுவனங்களிலும் அமைச்சர் ராஜாவின் மனைவி பரமேசுவரி ஓர் இயக்குநராக உள்ளார் என்பது கொசுறு செய்தி.

Read in English: http://www.dailypioneer.com/152987/Firm-with-Rs-1-lakh-gets-Rs-380-cr-Swan-shares.html

 

குறிச்சொற்கள்: ,

அன்புமணியின் ஊழல் – சோலை


இந்தியாவிற்கே தேவையான தடுப்பு ஊசி மருந்துக்கள் உற்பத்தி செய்த மூன்று நிறுவனங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மூடினார்.

அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்த மருந்துகளை கோடிக்கணக்கான ரூபாய்களுக்குத் தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்ய ஆரம்பித்தனர். இதனை அந்த நிறுவன ஊழியர்களும் எதிர்த்தனர். இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு ஏதோ காலிக்குட்டங்களின் சலசலப்பு என்றே அன்புமணி கருதினர்.

குன்னூர், சென்னைகிண்டி, இமாச்சலப் பிரதேசம்கஸொலி ஆகிய இடங்களில் இயங்கிய தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களைத் தான் மத்திய சுகாததாரத் துறை மூடியது. இவை மூன்றும் மக்களுக்குச் சொந்தமானஅரசுக்கு சொந்தமான போது துறை நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் மூடப்பட்டத்தைப் பற்றி ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

அந்த நிறுவனங்களின் ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களுக்காக அணி திரண்ட தொழிற்சங்க இயக்கங்களும் எழுப்பிய குரல் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடுமோ என்ற கவலையும் பிறந்தது.

பொதுத்துறையின் மூன்று நிறுவனங்களையும் மூடியதுதனியார் கம்பெனிகளின் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கான சதியே என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ராங்கராஜன் பிரதமரிடம் மனுக்கொடுத்தார். அந்த மனுவை பிரதமரை நேரடியாகச் சந்தித்தே கொடுத்தார். அதன் பின்னர் அசைவுகள் தெரிந்தன.

இப்போது அன்புமணிக்கு கேள்விப் பட்டியிலே பிரதமர் அலுவலகம் அனுப்பியிருக்கிறது. பட்டியலைத் தந்திபோல் பாவித்து தக்க பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

தடுப்புஊசி மருந்துகளைத் தனியாரிடம் வாங்குவதற்காக இதுவரை எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது?

அப்படி வாங்கப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டதா? அன்னிய நிறுவனங்ககள் தயார் செய்ததா? அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா?

மூடப்பட்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் ISO 9002 தரச் சான்றிதழ் பெற்றவை. அப்படி இருக்கும் போது அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் அந்த நிறுவனங்களை ஏன் மூடினீர்கள்?

இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பு ஊசி மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தர நிர்ணாயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும் வாங்கப்பட்டிருக்கிறதா?

மூடப்பட்ட மூன்று அரசு நிறுவங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் தரக் குறைவானது என்றால் அதன் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதா? அத்தனை மத்திய சுகாதாரத் துறை செயல்படுத்தாமல் பகாசுரத் தனியார் நிறுவனங்களிடம் எப்படிக் கொள்முதல் செய்ய முன்வந்தீர்கள்? அதனால் ஏற்ப்பட்ட கூடுதல் செலவு எவ்வளவு?

படமெடுக்கும் இந்தக் கேள்விகெல்லாம் யாரும் எழுப்பிவிட்டதல்ல. மத்திய சுகாதார துரையிடம் பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கும் கேள்விகள்தான் இவை. தொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒரு சிலவற்றைத் தான் தொட்டுக் காட்டி இருக்கிறோம்.

நமது மூன்று தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களும் உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட மத்திய சுகாதாரத் துறைக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். அதனை விடுத்து இன்னும் பலப்பல கோடிகள் அதிகச் செலவில் தனியாரிடம் மருந்துகள் வாங்குவது ஏன்? என்ற கேள்வி நியாயமாகவே எழுந்திருக்கிறது. எனவே, இதில் பெரிய சதி, ஊழல், மோசடி நடந்திருக்கிறது. என்று மார்க்ஸிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன் சுட்டிக் காட்டியிருப்பது பொருள் பொதிந்தாகும்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களை மூடியது மத்திய அமைச்சரவையின் முடிவல்ல. பிரதமர் அலுவலகத்திற்க்கே தெரியாமல் நடந்த காரியம். மூடுவது என்பது சுகாதாரத் துறை எடுத்த தன்னிச்சிசையான முடிவுதான். அந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது அமைச்சருக்குத் தெரிந்திருக்கும். இதுவரை எத்தனை கோடி இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது இனி வெளிச்சத்திற்கு வரும்.

இலங்கைப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்றுக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்டங்களில் ஒன்றாகும். அதனை ஏன் மையஅரசு செயல்படுத்த மறுக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்கிறார். நியாயமான கேள்வி. பாராட்ட வேண்டியவாதம்.

ஆனால், அதேபோல் தான் பொதுத்துறை நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்சசெயல் திட்டம் தான். அதனை மறந்து மத்திய அமைச்சரவைக்கும் தெரியாமல் பிரதமர் அலுவலகத்திற்கும் தெரியாமல் எப்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூடினார்கள்?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இன்னொரு குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன கூறுகிறது? மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும். அதற்கான உததரவதத்தை அரசு செயல்படுத்தும் என்று கூறுகிறது ஏதோ பம்பர் பரிசு மாதிரி அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு குறைந்தப்பட்ச செயல் திட்டத்தைத் தெரியுமா? அதனை எப்படித் தயாரித்தார்கள் என்பது தெரியுமா?

மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் தருவதற்கு உற்பத்திக்கு என்ன செய்ய வேண்டும்? திட்டம் தருக என்று அன்பு மணியை பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கிறது. அந்த மருந்துகளும் பொதுத் துறை நிறுவனங்கள் தான் தயாரிக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

மூன்று பொதுத் துறை நிறுவனங்குகளை மூடிய வேகத்தில் செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து அதே மருந்துகளைத் தயாரிக்க அன்புமணி தயாரானார். அதற்கான அறிவிப்பும் வெளியனாது.

தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கும் மூன்று நிறுவங்ககளும் மூடப்படவில்லை என்று நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சூப்பராயனுக்கு எழுதிய கடிதத்தில் அன்புமணி சுட்டிக் காட்டியிருக்கிறார். மகிழ்ச்சி.

ஆனால், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லையே என்ன காரணம்? அந்த நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் முழுச் சம்பளத்தோடு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதே என்ன காரணம்?

அதே சமயத்தில் இந்திய மருத்துவத் துறையில் அன்புமணி செய்துள்ள சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவேண்டாம். தமிழக அரசு துவக்கிய மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் 100 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். அதே சமயத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். இந்த பாரபட்சம் ஏன் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு ரொம்பத் தாராளம். ஆனால், அந்த வசதி அரசினர் கல்லூரிகளில் இல்லை என்று ஜி.கே. மணி பெயரில் ஓர் விளக்கம் வந்தது. கேழ்வரகில் நெய் வழிகிற தென்றால் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னை நகரச் சுற்றி ஆறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அனைத்தும் தனியருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் தான். இப்படி இந்தியா முழுமைக்கும் தனியருக்கு எத்தனை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றார்? பட்டியல் வெளியிட்டால் சேவையின் சிறப்பு தெரியும்.

ஆதாரம்: ரிப்போட்டார் 12.2.2009 பக்கம் 34,35. 

 

குறிச்சொற்கள்:

அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்


சென்னை, குன்னூர் மற்றும் கசவுலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவது என்ற முடிவை மத்திய அரசு மாற்றியுள்ளதுதனியார் நிறுவனங்களை நம்ப முடியாது என்ற நிலையில் தற்போது இம்மையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது

.

தமிழகத்தின் சென்னை, குன்னூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் கசவுலி ஆகிய இடங்களில் இயங்கி வந்த தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மூடுவது என மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், தொழிற்சங்கங்களும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. இம்முடிவினால் தனியார் தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் லாபமடையும் என்றும், சாதாரண ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன

.

ஆனால், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல், உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி வரைமுறைகளுக்கு உள்ளிட்டு இம்மையங்களில் தடுப்பூசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்பு மணி உத்தரவிட்டார் ஆனால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை, குறைந்த செலவில் தனியார் நிறுவனங்களினால் வழங்கமுடியாது என்பதை அறிந்து, தற்போது மீண்டும் இந்த 3 நிலையங்களிலும் உற்பத்தியை தொடங்க சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இங்கே தான் அன்புமணியின் ஊழல் ஆரம்பம் ஆகிறது.

மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார். ஆணை பிறப்பித்த கையோடு இனி இந்த மருந்துகளை தனியார் நிறுவனக்களிடம் அரசு கொல்முதல் செய்யும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த தனியார் நிறுவனம் எது தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா

 

இது யாருடையது தெரியுமா?

பி. சுந்தரபரிபூரணம் 

இவர் யார் தெரியுமா?

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.

திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.

 

பொது துறை நிறுவங்கள் மூட யார் காரணம் ?

முதலில் இந்த பாஸ்டர் ஆய்வகத்தை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த பாஸ்டர் ஆய்வகம் 1907 ஏப்ரல் 6 அன்று பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் ஸதர்ன் இந்தியா என துவங்கப்பட்டது. பின்னர் 1977 பிப்ரவரி 10ல் பாஸ்டர் இன்ஸ்டியுட் ஆப் இந்தியா (தன்னாட்சி) ஆனது. அப்போது இதை எதிர்த்து பல போராட்டங்கள் அப்பகுதி மக்களால் நடத்தப்பட்டது. கடைசியில் அரசு வென்றது. 1907ல் வெறி நாய்க்கடி மருந்து மூளைத் திசு மூலம் தயாரிக்கப்பட்டது. 1957ல் ஆசிய ப்ளூ வைரஸ் தனித்து எடுக்கப்பட்டது. 1970ல் இந்தியாவில் முதல் முறையாக வெறி நாய்க்கடிக்கானா மருந்து மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகப் படுத்தப்பட்டது. 1970 இந்தியாவில் முதல் முறையாக போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1982ல் தேசிய தடுப்பு மருந்து திட்டதிற்க்காக முத்தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. 1988ல் வெறி நாய்க்கடிக்கான மருந்து திசு வளர்ப்பு மூலம் தயாரிக்கப்பட்டது.

இத்தனை பெருமையும் பெறுவதற்கான முயற்சிகள் அத்தனையும் இந்திய தொழில் நுட்பத்தினால் மட்டுமே அடைந்தது. இதில் வேறு எந்த நாடும் நமக்கு வழங்கவில்லை.ஆனால், இப்போது பொறுப்பில் வகிக்கும் நிர்வாக இயக்குநர் இலங்கேஸ்வரன் மிக திறமையாக இயங்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு துறையையும் படிப் படியாக முட நிரந்தரமாக மூடி விட்டார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உயிர் வாழும் வெள்ளை எலி கூடத்தை சென்னைக்கு மாற்றினார், இதன் மூலம் 544 வெள்ளை எலிகள் இறந்துவிட்டது. உடனே இந்த ஆய்வு கூடத்தை மூடி விடும் படி உத்தரவு பிறப்பித்தார். சர்வதேச சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற போலியோ சொட்டு மருந்துகளை சோதனை செய்யும் கூடத்தை எந்த காரணமும் இன்றி மூடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளான டிடிபி எனப்படும் டிப்தீரியா,டெட்டனஸ், பெர்ட்டிசிஸ் ஆகியவை ரணஜன்னி, கக்குவான், தொண்டை அடைப்பான், ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் முத்தடுப்பு மருந்துகளாகும். நாட்டின் தேவையில் 60 % இந்த ஆய்வகம் தயாரிக்கிறது. இப்போது இந்த ஆய்வகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற முக்கியமான ஆலோசனை கூட்டம் (05.02.2008)புது டில்லியில் சுகாதார செயலாளர் முன்னிலையில் கூடிய பொதுகூட்டத்தை புறக்கணித்துவிட்டு சென்னையில் இலங்கேஸ்வரன் ஓய்வு எடுத்து கொண்டார். அதனால் அக்கூட்டத்தில் இதை வெறும் ஆய்வு கூடமாக வைத்து கொண்டு உற்பத்ியை நிறுத்துவது என முடிவு செயப்பட்டது. 

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி . சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.

தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியா பயனீர் நாளிதழ் வெளியிட்டது.

உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன.

 

சரி, இவர்கள் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு எங்கு இருந்து பணம் வந்தது?

சென்னையில் உள்ள ஒரு வங்கியில் தான் கடன் பெற்றுருக்கிறார்கள். இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது. 

தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.கடந்த 3 காலாண்டுகளாக டிபிடி மற்றும் டிடி தடுப்பூசி மருந்துகளுக்கு இந்தியாவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லாபமின்றி தடுப்பூசி மருந்துகள் குறைந்த விலையில் தருவதாக உறுதியளித்திருந்த தனியார் நிறுவனங்கள், பின்னர் தங்களது வாக்குறுதியை மீறி விலையை 40 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்தனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பிய பொது அன்பு மணி ராமதாஸ் இந்தியாவில் தடுப்பு ஊசி  மருந்து தட்டுப்பாடு உள்ளது என்ற உண்மையை ஒத்துக் கொண்டார்.

இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.

 

குறிச்சொற்கள்:

மனிதகுலத்தின் தோற்றம் புத்தகம் வெளியீடு இன்று உடன் 150 ஆண்டு முடிவடைந்து விட்டது


darwin1

உயிர் வர்க்கங்களின் தோற்றம் புத்தகம் வெளியீடு இன்று உடன் 150 ஆண்டு முடிவடைந்து விட்டது மனிதகுலம் தோற்றம் பற்றி பல்வேறு ஆராய்ட்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் டார்வின்.

குறிப்பாக அன்றைய சமூகத்தில் மனிதனின் எல்லா கஷ்டங்களுக்கும் கடவுள் தான் காரணம், கடவுளின் கருணையால் தான் இப்புவியில் நாம் பிறந்தோம், நம்முடைய அத்தனை இன்ப, துன்பகளுக்கும் நம்
முன் ஜென்ம பலனே என்று முதலாளித்துவம் குறிக்கொண்டு இருந்த அத்தனை புரட்டுகளையும் தனதுஆராய்ட்சி மூலம் இவையெல்லாம் போலிகள் என்று இந்த உலகத்ிர்க்கு எடுத்து கூரியவர். இன்றுவரை
இவைகளை எந்த ஒரு மனிதனும் இவருடைய தந்துவங்கள் பொய்யானவை என்று நிரூபிக்க முடியவில்லை.

டார்வின் எப்படி இருப்பான்? ஆறடி உயரம், ஆனால் பார்வைக்கு அப்படித் தோன்ற மாட்டான். நோயினால் பிடிக்கப்பட்டத்தன் காரணமாகப் வயது ஆக ஆக முதுகு வளைந்து கொடுத்தது. அப்படியிருந்தும் இவன் ஒரு காணமாவது சும்மா இருந்தது கிடையாது. ஆராய்ச்சி செய்யுங்காலங்களில் இவன் காட்டின பொறுமையைக் கண்டு இவன் மக்கள் பொறுமையையிழப்பார்கள்.

டார்வின் நடக்கும் போது கையையும் கலையும் வீசி ஆட்டிக் கொண்டு நடப்பான். கையிலே இரும்புக் பூண் போட்டாத்தடி. அதைப் பூமியின் மீது அடித்துக் கொண்டுதான் செல்வன். எவ்வளவு நோயிலிருந்தபோதிலும்கூட வெளியே உலாவச் செல்வதில் இவன் தவறியாதே கிடையாது. அப்போது இவனைப் பார்க்கிறவர்கள் இவனுக்கு இவ்வளவு பொறுமை இருக்குமாவெனச் சந்தகிக்ககூடும். டார்வினுக்குப் பொதுவாக கருப்பு உடைகளிலே அதிகப் பிரியம். வீட்டில் உலவம்போது கூட மேலே ஒரு கருப்பு சால்வையைப் போர்த்திகொண்டிருப்பான்.

டார்வின் ஆராய்ச்சியெல்லாம் அவனுடைய தோட்டம்தான். தான் முந்திய நாள் வைத்துப் போன செடி கொடிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றிலும் கூர்ந்து கவனிப்பான். பல நிறப் புஷ்பங்க்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்து அவற்றின் அருகே பல மணி நேரம் மவுனமாக நின்றுவிடுவான். “உலகத்திற்கு இந்தப் புஷ்பங்கள் செய்கின்ற நன்மைக்கு அவற்றை ஆதரவோடு பார்ப்பதாகிற நன்றியைக் கூடவா செலுத்தக் கூடாது?” என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.

charles-darwin2

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன.

டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார்.

இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார்.

சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்.

1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.

நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார்.

தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: “இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்” என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.

இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய “இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)” என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார்.

டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: “டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?”. ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: “வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை.” பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் “இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)”, தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)” என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது.

இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.

அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel’s Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.

பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்.

 

 

 

குறிச்சொற்கள்:

அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்


பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடக் கூடாது என்று தடை விதித்து, அவற்றைத் தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்திட அனுமதிக்கப்பட்டிருப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு உள்ள தொடர்பை டில்லியிலிருந்து வெளிவரும் தி பயனீர்நாளிதழ் படம்பிடித்து காட்டியுள்ளது.

இது தொடர்பாகதி பயனீர்நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு மிகவும் நெருங்கிய சகாவான ஒருவரின், சென்னையை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்வதற்கு 14 கோடி ரூபாய் வங்கி ஒன்றின் மூலம் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார்.

இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது.

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர்களும், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.

திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி . சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.

தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியமாக வைத்திருக்கிறோம்.

உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன. இவ்வாறு தி பயனீர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.

 

குறிச்சொற்கள்:

மருத்துவ மிருகங்கள்


அந்நியச் செலவாணி எனும் எச்சில் காசுக்காக இந்திய பெண்களின் மானத்தை விற்கலாம், வாடகைத் தாயாக மாறித் தாய்மையை விலை பேசலாம், நாட்டின் இறையான்மையை அமெரிக்க அணுசக்திக்காக விற்கலாம், நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உயர்கல்வி கற்று நாசாவில் பணிபுரியலாம். இப்படி எல்லாம் உருவாக்கப்பட்டுள்ள இன்றைய சமுதாயத்தில் ஏழைகள் மட்டும் விதி விலக்காக இருக்க முடியாது என்பதை தான் நிரூபித்து இருக்கிறார் டாக்டர். அமீத்குமார்.

மும்பையிலிருந்து அரியானாவின் குர்கான் வரை, 1993லிருந்து நேற்று வரை தன்னுடையமருத்துவ சேவையைசிறப்பாக நடத்தி வந்துள்ளார். இந்த சேவையை பாராட்டி 500 மேற்பட்ட தடவை சட்டத்தில் இருந்து தப்பிக்க வைத்து இருக்கிறது நமது இந்திய அரசு. சட்டம் ஒழுங்கைக் காப்பதாக கூறிக்கொள்ளும் போலீசுநீதித் துறைஅதிகாரவர்கம் அடங்கிய அரசு எந்திரம் அமீத்குமாருடன் சேர்ந்து கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது.

சட்டத்தில் இதற்கு என்ன தண்டனை என்று பார்த்தால் சட்டப்படி குற்றம் நிருபிக்கப் பட்டால் 4 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கிடைக்கும். ஏனென்றால், சட்டத்தை உருவாக்கும் முதலாளித்துவ அரசு சட்டப்படியே தப்பிப்பதற்கும் வழி செய்து வைத்து இருக்கும். சட்டப்படி ஒரு நோயளிக்கு அவரது இரத்த வழி உறவுடைய உடன் பிறந்தவர்கள் உடல் உறுப்பை தானமாக கொடுக்கலாம். இதுதவிர, உணர்வுபூர்வமான கொடையாளியும் மனிதாபிமானத்துடன் தானமாக தனது உடல் உறுப்புகளை வழங்கலாம்.

‘உணர்வுபூர்வமான கொடையாளி’ எனும் பிரிவை பயன்படுத்தித்தான் மருத்துவ வியாபாரிகள் தமது தொழிலை சட்டப்படி நடத்துகின்றனர். தான் கைது செய்ப்படுவோம் என்று தெரிந்தும் தப்பி ஓட முயன்று இருக்கிறார். இவரது முயற்சிக்கு டெல்லி போலீஸார் பணத்தை பெற்றுக் கொண்டு பத்திரமாக நேபாளம் அனுப்பி வைத்தார்கள். பிறகு, வெற்றிகரமாக இந்திய போலீசு அவரை கைது செய்தது. இப்போது மருத்துவமனையை சோதனை செய்கிறது. இவை அத்தனையும் வீர தீர செயல்களாக சித்தரிக்கிறது முதலாளித்துவ ஊடகங்கள்.

தமிழகத்தில் மதுரை, ஈரோடு, திருப்பூர், பள்ளிப்பாளையம், சென்னை போன்ற இடங்களில் சிறு நீரங்கள் விற்ற அவலங்கள் கதை கதையாக வந்த போதிலும் இக்கும்பலை சேர்ந்தவர்களையோ, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்ளையோ இன்று வரை கைது செய்யப்படவில்லை. தேவர் சாதி பிரமுகராமான, மதுரை மீனாட்சி மருத்துவமனை உரிமையாளருமான டாக்டர். சேதுராமன் பற்றி பத்திரிகைகள் எழுதி கிழித்த போதும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இந்தியாவில் கிடைக்கும் மலிவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை உள்ளிட்ட மலிவு விலை மருத்துவ சிகிச்சைகளை காட்டிமருத்துவ சுற்றுலாகளை வளர்க்க அரசு பல்வேறு சலுகைகள் அளித்துவருகிறது.

மனத்தோடு வாழ்ந்த விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலை செய்து கொள்ளமுடியாத விவசாயி தன்னுடைய உடல் உறுப்பையை விற்றுராவது மானத்தோடு வாழ முயல்கிறான். அப்படிபட்ட மக்களையும், சமுதாயத்தில் கடவுளுக்கு சமமாக மருத்துவரை பார்க்கும் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி
எதற்கும் உதவாத பணத்தை பறிகிறது மருத்துவ கும்பல்கள்.

விவசாயத்தையும், நெசவையும், சிறு தொழில்களையும் தாக்கி அழித்துள்ள புதிய பொருளாதார கொள்கை இன்நாட்டு மக்களை உயிர் வாழ்வதற்காக தங்களுடைய உடல் உறுப்பை விற்கும் அவலத்தில் தள்ளி உள்ளது. இன் நிலையில் திரு. அன்புமணியோ அவசியமான திருத்தங்களை செய்து சட்டத்தை இன்னும் கடுமையாக்க போவதாக
பூச்சாண்டி காட்டிக்கொண்டிருகிறார். மக்களின் வரி பணத்தில் படித்து விட்டு இந்த சமுதாயத்தை மேலும் கொள்ளை அடிக்க வரும் மருத்துவ மிருகங்களை என்ன செய்வது?

 

மருந்து உங்கள் சாய்ஸ்


மருந்து விலை புகார்கள் விசாரிக்க சிறப்பு மையங்களை சென்னை, கொல்கத்தா,மும்பை, பாட்னா, அகமதாபாத், போன்ற இடங்களில் மருந்து நுகர்வோர் குறை தீர்ப்பு மையங்களை மைய அரசு நிறுவியது. மேலும் இத்திட்டத்தை பல்வேறு நகரங்கலுக்கு விரிவுபடுத்த முடிவு செயப்பட்டுள்ளது. இந்திய மருந்து தயாரிப்பு சங்கத்ின் பொது செயலாளர் தாரா படேல் கூறுகையில்இது நல்ல முடிவு இது போன்ற மையங்களால் நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும். புதுமையான இந்த முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். எனினும் இதன் மூலம் மருந்து நிறுவனங்களுக்கு தொல்லை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவெண்டும். மருந்து நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகம், அவை ஏற்கனவே நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டே விலையை நிர்னையக்கின்றன, இன்னும் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மேலும் நுகர்வோர் நலனில் அக்கறை காட்ட முடியும்.” என்று தெரிவித்தார்.(தினகரன் 27.02.2008)

சரி இதில் என்ன விஷயம் உள்ளது. பொதுவாக மருந்து துறையில் விலை நிர்னையம் செய்யும் உரிமை மருந்து கம்பெனிகள் தான் வைத்து கொண்டு இருக்கின்றன. இதில் மாநில அரசுக்கு துளியும் சம்பந்தம் இல்லை. சமீபத்தில் மைய அரசு மந்திரி திரு. ராம் விலாஸ் பாசுவான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்திய அரசு சுமார் 786 மருந்துகளை அரசு நீர்னைத்துள்ள விலையில் தான் விற்க வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று எச்சரித்தார். உடனே நானும் சென்று அவற்றை ஆராய்ததில் பாதிக்கு மேற்பட்ட மருந்துகள் இந்திய மருத்துவர்களால் பண்படுத்துவதே இல்லை. மீதி உள்ள மருத்துகள் குறைத்த அளவே உபயோகபடுத்தி வருகின்றனர். அப்போது இந்த சங்கிகத்ின் செயலாளர் இது போன்று மருந்து விலைகளை அரசு கட்டுப் படுத்ினால் நாங்கள் அவ்வகையான மருத்துகளை தயாரிப்பதை நிறுத்தி விடுவோம் என்று அரசுக்கே எச்சரித்தார். அப்படி என்றால், இவர்கள் உள்நொக்கம் தான் என்ன?

பொதுவாக மருத்து துறையில் ஒரு மருத்துக்கு குறைந்த பட்சம் லாபம் 400 சத விதத்திற்கு மேல். இந்த லாபத்தை அரசு குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டு கொண்டதனால் இந்த மருப்பு அறிக்கை. அடுத்தது, மக்கள் நலனில் இவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். எப்படி என்று பார்ப்போம். இந்தியாவில் ராணுவ தாள வாடங்கள் விற்பனை தான் அதிக லாபம் தரும் தொழில், அதற்கடுத்து அதிக லாபம் தரும் தொழில் மருந்து விற்பனை தொழில். வருடத்திற்கு சுமார் 55 ஆயிரம் கோடி அளவிற்கு வியாபாரம் நடக்கிறது. இதில் 400 % லாபம் என்றால் இவர்கள் மூலதனம் எவ்வளவு போட்டு இருப்பார்கள் என்று நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள். இது தான் இவர்கள் சமுதாயத்தின் மீது காட்டும் அக்கறை.

இந்த நாட்டில் தொழிலாளர்கள் மட்டும் தான் சங்கம் வைத்து இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களே, முதலாளிகளும் சங்கம் வைத்து இருக்கிறார்கள். சரி இவர்கள் சங்கம் வைத்து கொண்டு யாரை எதிர்த்து போராட போகிறார்கள்? எனக்கு தெரியவில்லை. அடுத்து “இதன் மூலம் மருந்து நிறுவனங்களுக்கு தொல்லை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவெண்டும்” அப்படியென்றால், மருத்து நிறுவங்களின் மேல் வழக்கோ, போராட்டங்களோ வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். நாம் ஒரு பொருளை நுகரும் போது அப்பொருள் தரமானதா, விலை சரியானதா என்று பார்ப்பது நுகர்வோரின் உரிமை. இந்த உரிமையை தட்டி பறிக்கிறார் இந்த முதலாளிகளின் சங்க தலைவர். அப்படியென்றால் நாம் யாரிடம் முறை இடுவது? இது உங்கள் தலை எழுத்து என்று சொல்லாமல் சொல்கிறார்.

“மருந்து நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகம், அவை ஏற்கனவே நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டே விலையை நிர்யிக்கின்றன, இன்னும் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மேலும் நுகர்வோர் நலனில் அக்கறை காட்ட முடியும்.” இவர்கள் காட்டுகிற அக்கரையை பாருங்கள். முதலாளிக்குல் எத்தனை வித்தியாசங்கள். இந்தியாவில் அதிகமாக விற்பணையகும் உயிர் காக்கும் மருந்தான Amlodipine Besilate பல்வேறு நிறுவங்கள் விற்பனை செய்கின்றன.
அவற்றில் அதிகமாக விற்பனை ஆகும் பெரிய நிறுவங்களின் விலைகளை கீழே கொடுத்து உள்ளேன். நீங்களே
உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

Amologard M.R.P. Rs.77.00 Pfizer Limited

Stamlo-5mg M.R.P. Rs.32.00 Dr.Reddy’s Laboratories

Amlocor-5mg M.R.P. Rs.24.65 Torrent Pharmaceuticals.

Amlodac-5mg M.R.P. Rs.21.00 Zydus Metica

Amlokind-5mg M.R.P. Rs.8.50 Mankind Pharma

{all the values are 10 tablets, inclusive of all taxes, tamilnadu preise}

இதில் Pfizer Limited என்ற கம்பனி (வயக்கார கண்டுபிடித்த கம்பெனி) கம்பனி வெளிநாட்டு நிறுவனம். மற்றவை எல்லாம் இந்திய நிறுவங்கள். விலை அதிகமாக இருப்பதால் தரம் நன்றாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், ஒரு கிராம் தூய தங்கத்தை இந்தியாவில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அதில் கூட கலப்படம்
செய்யமுடியும். அதை கூட கண்டு பிடிக்க முடியும். அவ்வாறு நீங்கள் மருந்தில் கலப்படம் செய்ய முடியாது. மிறினால், அந்த மருந்தை உட்கொண்ட நோயாளி இறந்து விடுவார். பிரத பரிசோதனையில் அது காட்டி கொடுத்து விடும். அதனால், விலை உயர்ந்த மருத்து தரமானதாகவும், விலை குறைந்த மருந்து தரம் அற்றதாகவும் நினைக்க வேண்டாம். எல்லா மருந்தும் ஒரே தரத்துடான் தான் தயாரிக்கப் படுகின்றன. விலை அதிகமான மருந்து நோயை உடனடியாக குணப்படுத்தவும் முடியாது. பிறகு ஏன் இந்த விலை வித்தாயாசம்?

நீங்கள் ஒரு பொருளை வாங்குவது என்று முடிவு செய்தால் உங்களிடம் உள்ள பணத்திற்கு தகுந்தார் போல் நீங்கள்
வாங்க முடிவு செய்வீர்கள். ஆனால், நீங்கள் எந்த விலையில் விற்கும் மருத்தை ஊட்கொள்ள வேண்டும் என்பதை
உங்கள் மருத்துவர் தான் முடிவு செய்வார். இரண்டாவது, பொதுவாக வெளிநாட்டு பொருள் என்றாலே நம்மில்
பலருக்கு எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி விடும் மோகம் உள்ளது. இந்த மோகம் சில மருத்துவரையும் விட்டுவைக்கவில்லை.

இப்படி மக்களை ஏமாற்றும் மருத்து நிறுவங்களை எப்படி தட்டி கேட்பது என்று எனக்கு தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் பிப்ரவரி 28, 2008 in மருத்துவம்

 

குஜால் டாக்டர்களும் குஷிப்படுத்திய கம்பெனியும்


தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ அந்த மாதிரி மேட்டர் என்று நினைக்க வேண்டாம். நம் வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் ஒருவரைப் பற்றிய கட்டுரை. உங்கள் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியிலான உடனே உங்கள் அருகில் உள்ள மருத்துவரை சந்திப்பீர்கள், உடனே அவரும் உங்களை சோதித்துவிட்டு உங்களுக்கு மருந்தை எழுதிக்கொடுப்பார். நீங்களும் அதை எடுத்துக்கொண்டு மருந்துகடைக்கு பிறகு மருந்தை வாங்கி உண்பீர்கள். உங்கள் உடம்பும் சரியாகிவிடும். நம்பில் பல பேர் செய்யும் தவறு இங்கே தான் ஒளிந்திருக்கிறது. மருத்துவர் நாம் வியாதிக்கு சரியான மருந்துகளைத் தான் எழுதுகிறார் என்று நினைத்திருப்போம். மருந்து எழுதிக் கொடுக்கும் மருத்துவரும் இந்த இந்த வியாதிக்கு மருந்து எழுதி தருகிறேன், அவற்றை இப்படி தான் நீங்கள் சாப்பிடவேண்டும் என்று அவரும் சொல்வதில்லை நாமும் அவற்றை கேட்பதும் இல்லை. இப்படி நீங்கள் சாப்பிடும் 5 மாத்திரையில் 2 மாத்திரை தேவை இல்லாதது. ஒரு மாத்திரை மருந்து கம்பெனியின் கட்டாயத்தினால் எழுதுவது. ஏன் அவ்வாறு மருத்துவர் எழுதுகிறார்? எழுத வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்படுகிறது?
அதற்கு காரணம் மருந்து கம்பெனிகள். நமது நாட்டை பொருத்த வரை மருந்துகளை உற்பத்தி செய்வது தனியார் நிறுவனங்கள் தான் அதிகம். பொதுத்துறை நிறுவனமான HAL (Hindustan Antibiotic Limited) மருந்து உற்பத்ியை
குறைத்துக் கொண்டு வருகின்றன. சந்தையில் ஏற்படும் போட்டியின் காரணமாகவும், அதிக லாபத்துக்காகவும் பெரிய மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் மருத்துவருக்கு பல்வேறு சலுகைகள் தருகின்றன.இவற்றை பெற்றுக்கொண்ட மருத்துவர்கள் அவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கின்றனர்.
இதற்கு ஆதாரம் இதோ இந்தியாவை சேர்ந்த Torrent Pharmaceuticals ltd., என்ற கம்பெனி சென்ற வருடம் ஜூலை மற்றும் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் பணிபுரியக் கூடிய 1300 மருத்துவர்களை தேர்ந்து எடுத்து அவர்களை இன்ப சுற்றுலா அழைத்து சென்றது நிர்வாகம். இதற்காக அவர்கள் செலவிட்ட தொகை மட்டும் 10.5 கோடி. மருத்துவர்களை இன்ப சுற்றுலா அழைத்து சென்ற இடங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா, இதோ 4 நாட்கள் புர்க்கேட்( தாய்லாந்து) 5 நாட்கள் பாலீ (இந்தோநெசியா). அங்கே, மருத்துவர்களுக்கு உண்டான போக்குவரத்து, உணவு, தங்கும் இடம் மற்றும் பரிசுப்பொருட்கள் அத்தனை செலவையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். இதில் குடும்பத்துடன் சென்றவர்களும், தான் மட்டும் தனியே சென்ற மருத்துவர்களும் உண்டு. ஒவ்வொரு நாள் மாலையிலும் நிர்வாகத்தின் சார்பாக கூட்டம்
நடைபெறும். அப்போது நிறுவனத்தின் மருந்துகள் மருத்துவர் இடையே அறிமுகப்படுத்தப்படும். மருத்துவர் நாடு திரும்பியதும் அந்த நிறுவனத்தின் மருத்துகளை எழுதி கொண்டேயிருப்பார். அந்த மருந்து நமது உடலில் எவ்வாறு வேலை செய்யும், அதன் பக்க விளைவுகள் என்ன, விலை உயர்ந்ததா? என்பதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படமாட்டார். ஏன் என்றால் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக எழுகிறாரோ, அப்போது தான் அடுத்த வருடம் அவர் சுற்றுலா செல்ல தகுதி படைத்தவர். இதனால் தரமற்ற மருந்துகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதுபோன்ற குற்றச் சாட்டுகள் ஏற்படும் போதெல்லாம் இந்திய மருத்துவ சங்கம் உடனே ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிடும். அதே போல் அகில இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தன் கடமைக்கு ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிடும். இதை பற்றிய செய்திகள் எந்த பத்திரிகையும் வெளியிடுவதில்லை. இந்த நிறுவனம் ஏதோ ஒரு முறை மட்டும் இதைச் செய்யவில்லை. 2006ல் 1291 மருத்துவர்களை இஸ்தாண்புல்(துருக்கி) மற்றும் கென்யா அழைத்துச் சென்றது. 2007 மார்ச் – ஜனவரியில் 30 மனநல மற்றும் நரம்பியல் மருத்துவர்களை பிலிப்பைன்ஸ் அழைத்துச்சென்றது.
இதை பற்றி ஹிந்து நாளிதழ்கு ஆதாரங்கள் கிடைத்தவுடன்(5 நவம்பர் 2007 ஆம் ஆண்டு) தனது தலையாங்கத்தில் ” ஏராளமான மருந்து கம்பெனிகள் மருத்துவரை தங்கள் கைகளில் போட்டு கொண்டு தங்கள் காரியங்களை சாதித்து கொள்கின்றன”. இது போன்ற நடவடிக்கை தடுப்பதற்கு சமீபத்தில் அமெரிக்காவில் சட்டம் ஒன்று(The Physicians Payments Sunshine Act) இயற்ற ப் பட்டது. அதன்படி மருந்துக் கம்பெனிகள் மருத்துவருக்கு அளிக்கப்படும் சலுகைகள் பற்றி ஆண்டு தோறும் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இது போன்ற சட்டம் ஏதும் இல்லை.
இதைப் பற்றி நமது மத்திய அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாசுவான் கேட்ட போது ” இது போன்று பலதகவல்கள் அதாவது மருத்துவருக்கு பணம் அளிப்பது, பயனங்களை ஏற்பாடு செய்வது, கேளிக்கை விடுதிகளுக்கு அழைத்து செல்வது, கார் வாங்கி தருவது பற்றிஆண்டு தோறும் அரசுக்கு தகவல் தெரிவிக்க நாங்கள் MCI Act (Medical Council of India) சட்டத்தில் சேர்ப்பதற்கு ஆலோசித்து வருகிறோம்”.திரு. ராம்விலாஸ் பாசுவான் அறிக்கையை பார்த்தவுடன் இந்திய மருத்துவ சங்கம் (IMA) தனது பாலிசியை வெளியிட்டது “மருந்து கம்பெனிகள் தங்கள் மருந்துகளையோ, மருந்து உபகாரனங்களையோ எழுதும்மாறு கட்டாய படுத்தகூடாது”.
இப்படிபட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சமூகமும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து இருக்கிறது.