RSS

Category Archives: பங்குச்சந்தை

உண்மை-பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வரி சலுகை


பெட்ரோலின் விலையை மீண்டும் உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்திருப்பதை நியாயப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அதே சமயத்தில் கேன்ஸ் நகரிலிருந்துதான் இவ்வாறு அவர்
பேசியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ‘‘பல பண்டங்களின்’’ விலைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் நீக்க வேண்டியதன் தேவை இருப்பதாகவும் அப்போது அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பதை
இதன்மூலம் அவர் மிகவும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆயினும் எதார்த்த நிலைமை என்ன? 2010-11ஆம் ஆண்டு பொருளாதார சர்வே என்ன கூறியிருக்கிறது? தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் வளர்ச்சி விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. மக்கள் எங்கே வளமாக வாழ்கிறார்கள், பிரதமர் அவர்களே?

பிரதமர் நாடு திரும்பிய பின்னர், தன் னுடைய கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பாசாங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரிணாமுல் காங்கிரசின் மிரட்டலுக்கு
அடிபணியாமல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளை மீண்டும் குறைக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, இவ்வாறு பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக நடை பெற்ற அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றதையும் அவர்களின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.

எப்படி இருந்தபோதிலும், மக்களின் மீது சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருப்பதை ஏற்க முடியாது. பெட்ரோல் பணக்காரர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது என்ப தெல்லாம் பழங்கதை. இப்போது கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தில்  பெரும்பாலானவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உண்மையில், பெட்ரோலை வாங்குவதில் அதிகமானவர்கள் இவர்கள்தான். மேலும், பெட்ரோலின் விலையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து சாதனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து, பண வீக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திடும்.

உண்மை என்ன தெரியுமா? இவ்வாறு விலைகள் உயர்த்தப்படுவதன் மூலம் அரசின் கஜானா அதிக அளவில் பயனடைகிறது என்பதுதான். ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கிடைத்திடும் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வரிகளாகவும் தீர்வைகளாகவும் சென்றுவிடுகின்றன. இப்போது 2011-12இன் விலைஉயர்வுடன், மத்திய அரசாங்கம் கலால்
தீர்வையாக மட்டும் சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்திற்கு பெட்ரோலியத் துறையிலிருந்து, அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாகக் கிடைத்த மொத்த வருவாய்
என்பது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 69 ரூபாயாகும். இதில் சுமார் 30 ரூபாய் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாயாகச் சென்று விடுகின்றன. இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து அடைந்திடும் வருவாயில் பெரும் பகுதி அரசாங்கத்தைத் தாங்கி நிற்கிறது என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மக்கள்தான் அரசாங்கத்திற்கு மானியம்
அளித்து வருகிறார்களேயொழிய, அரசாங்கம் மக்களுக்கு மானியம் அளித்திடவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் அவற்றை நியாயப் படுத்தி அரசாங்கத்தின் தரப்பில் இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் ‘‘திரும்பப் பெறுதல்’’ என்ற பெயரில் சர்வதேச விலைகளுடன் ஒப்பிட்டு, ‘‘இழப்புகள்’’ ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு 2010-12இல் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது 2010-11ஆம் ஆண்டில் 78 ஆயிரம் கோடிகளாக இருந்தது. இவ்வாறு ‘‘திரும்பப் பெறுதல்’’ என்றால் என்ன? முந்தைய காலங்களில் நம் நாட்டில் இயங்கி வந்த அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், அவை இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை சர்வதேச விலைகளின் அடிப்படையிலேயே விற்று வந்தன. இது 1976இல் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக நிர்வாக விலை நிர்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் உண்மையான விலையும்  அதனைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவும் மதிப்பிடப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமான லாபமும் சேர்க்கப்பட்டு, அவ்வாறுதான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

எடுத்துக்காட்டாக, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல் இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட்ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக்கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறுதலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.

எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிடவில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி  இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை  49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் – டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள், பிரதமர் அவர்களே.

பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம்,
நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கையாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறையில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங்களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்போது மற்றொரு எதார்த்த நிலையையும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறையில்  பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக
உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்ல் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை  என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர்
அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக  நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.

கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித்திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம்என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக்
குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், விவசாயத்தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும்.

சர்வதேசநிதி மூலதனத்தை குஷிப்படுத்திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கைகளைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.

நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்! – சமஸ்


வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’ வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது.  அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங்களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!

அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சத விகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது. கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.
அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர்புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அமெரிக்கப்பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.

பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத்
தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின்  டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு…
கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!

‘முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப்
போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.

முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு  அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன்
(23.10.2011)

 

குறிச்சொற்கள்:

பிரதமருக்கு எல்லா ஊழலும் தெரியும்


சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

“ஸ்பெக்ட்ரம்’ ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப்பட்டவர்களுமாக இருக்கிறார்களே அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது. 

இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது. 

எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே | 750 கோடியும், | 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்? 

பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. 

பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ்.லைவ் என்கிற நிறுவனத்துக்கு | 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ  எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது. 

ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் | 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், “ஜும்’ என்கிற நிறுவனத்தை | 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு | 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ்.லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து “ஜும்’ காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான். 

மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன்அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான | 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி! 

ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த “மெகா’ கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடிமறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது. 

பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன? 

சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி – “”பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது!” 

 

குறிச்சொற்கள்:

ராசா பேசுகிறேன்.


நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக…. அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…

22.5.2009

மதியம் 2 மணி 29 நிமிடம்

41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்…

நீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்…

நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று….

ராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்…

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…

நீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…

ராசா: ஓ…

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

24.5.2009

காலை 11 மணி

5 நிமிடம் 11 விநாடிகள்

நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்…

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?

நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம்

– நன்றி: அவுட்லுக் 

 

கனிமொழி – நீரா ராடியா உரையாடல் 

22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா…

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று…

கனி: ஆம், ஆனால் யாரும்… யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது…

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.

அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது… உங்களுக்கே தெரியும்… பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..

…சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

22.5.2009

மதியம் 2 மணி 46 நிமிடம்

15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே… அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். “நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது’.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். – உன்னை – (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.

22.5.2009

இரவு 8 மணி 04 நிமிடம்

19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது…

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்…

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.

23.5.2009

காலை 9 மணி 59 நிமிடம்

2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.

– நன்றி: அவுட் லுக். 

 

வீர் சங்வி (பத்திரிகையாளர்) – நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள் 

 

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை.  அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள்.  அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. “எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது’ என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான்  அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் “கவுன்டர் பாயிண்ட்’ பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்…

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்…

23.5.2009

இரவு 10மணி 26நிமிடம்

42விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்…

வீர்: மாறன்.

நீரா: ஆம்… (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)

ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே…

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து…

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: | 600 கோடி சரியா?

நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?

நீரா: இல்லையா?

– நன்றி: “ஓபன்’ வார இதழ். 

 

பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) – நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள் 

 

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?

22.5.2009

காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட

வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும்.  காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.

பர்கா: சரி.

… அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் – அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்…

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?

நீரா:  அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

– நன்றி: “ஓபன்’ வார இதழ்
 

குறிச்சொற்கள்:

புத்தாண்டில் பொதுச் சொத்து விற்பனை


நிதி ஆதாரத்தை திரட்டுவது என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மிகப் பெரிய அளவில் தனியாருக்கு தாரைவார்க்கும் திருப்பணியில் மன்மோகன் சிங் அரசு ஈடுபட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் பங்கு விற்பனை மூலம் ரூ.32 ஆயிரத்து 500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய அனல் மின் கழகம்(என்டிபிசி) மற்றும் என். எம்.டி.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியை அரசு திரட்ட உள்ளது. பொதுத்துறை பங்குகளை எளிதாக விற்பதற்கு வழி செய்வதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் விதிமுறைகளும் தளர்த்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் மின் உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் என்டிபிசி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகள் ரூ.11 ஆயிரம் கோடிக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்.எம். டி.சி. நிறுவனம் கனிமங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை அமைப்பாகும். இதன் பங்குகள் 8.38 சதவிகிதத்தை தனியாருக்கு விற்றுத் தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உருக்கு உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தை வகிப்பது ‘செயில்’ நிறுவனமாகும். இதில் அரசின் பங்கு மூலதனத்தில் உள்ள 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘செயில்’ நிறுவனத்தில் பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.97 ஆயிரத்து 300 கோடியாகும். படிப்படியாக இந்தப்பங்குகளை தனியாரிடம் விற்பதில் அரசு முனைப்பாக உள்ளது.

நீர்மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எச்.பி.சி. பங்குகளை ரூ.2013 கோடிக்கும், ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை ரூ.2247 கோடிக்கும் விற்க அரசு திட்டமிட்டுள்ளது. தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிகட்ட பெருமுதலாளிகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வாரி வழங்கியது. இதனால் அரசின் நிதிப்பற்றாக் குறை மேலும் அதிகரித்தது. பெரு முதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளால் அரசின் செலவினக் கணக்கு அதிகரித்துள்ளது. இதைச் சரிகட்டு வதற்காக மக்களின் பொதுச் சொத்துக்களை சூறையாடும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் லாபம் தரும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற நிறுவனங்களின் பங்குகளை விற்கமாட்டோம் என்று மத்திய அரசு வாக்குறுதி தந்திருந்தது. அந்த வாக் குறுதிகளையெல்லாம் தற்போது அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது.

 

குறிச்சொற்கள்:

மத்திய அரசின் பித்தலாட்டாம்


மத்திய அரசு வாரி வழங்கிய பொருளாதாரச் சலுகைகளால் தொழில்துறை வளர்ச்சி 10.3 சதவீதத்தை எட்டிவிட்டது என்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. நுகர்பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டில் 1.6சதவீதமாக இருந்தது. அது தற்போது 21 சதமாக தாண்டிக் குதித்து வளர்ந்துவிட்டது என்கிறார் அவர்.

நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.5சதவீதமாக இருக்கும் என திட்டக் குழு கணித்திருந்தது. ஆனால் இரண்டாம் காலாண்டில் 7.9சதமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்ததையடுத்து, முந்தைய கணிப்பை திட்டக்குழு மறுமதிப்பீடு செய்யவுள்ளது என்றும் அலுவாலியா கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், வெளிநாடுகளிலிருந்து மூலதனம் வந்து குவிவதால் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், இவ்வாறு வரும் மூலதனம் வெறும் நீர்க்குமிழியாகவே இருக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு தேவையான முதலீடு தான் வந்துகொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் மூவரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதத்தினர் ஏழைகளாக உள்ளனர். இது கணிக்கப்பட்டதை விட 10 சதவீதம் அதிகமாகும் என்று டெண்டுல்கர் குழு அறிக்கை கூறியுள்ளது.

மாண்டேக் சிங் அலுவாலியாவோ நுகர் பொருட்களின் தயாரிப்பு 1.6சதவீதத்திலிருந்து 21சதவீதமாக துள்ளிக் குதித்து ஓடுகிறது என்றார். மறுபுறத்தில் டெண்டுல்கர் அறிக்கையில் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் உயர்ந்து 37 சதவீதம் பேர் பரம ஏழைகளாக உள்ளனர் என்கிறார்.

நுகர்வுப்பொருள் உற்பத்தி அதிகரித்திருந்தால் அது நாட்டு மக்களின் நுகர்வில் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் மூன்றில் ஒரு இந்தியர் உள்ளனர். அப்படியென்றால் நுகர்பொருள் சந்தை என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 41.8சத வீதம் பேரின் சராசரி மாதாந்திர மொத்தச் செலவாக ரூ.447 மட்டுமே உள்ளது. நகர்ப்புற மக்களில் 25.7சதவீதம் பேர், அத்தியாவசியப் பொருட்களுக்காக சராசரியாக மாதம் ரூ.578.8 மட்டுமே செலவு செய்யும் நிலையில் உள்ளனர் என்றும் டெண்டுல்கர் அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநரோ அந்நிய மூலதனம் வந்து குவிகிறது, பொருளாதாரம் ஒளிர்கிறது என்கிறார். திட்டக்குழு துணைத் தலைவரோ தொழிற்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட கடும் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கணக்கு காட்டுகிறார்.

ஆனால் அரசினால் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழு அறிக்கை உண்மையை போட்டு உடைத் திருக்கிறது. பிரதமர் துவங்கி திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் வரை கூறுகிற பொருளாதார வளர்ச்சிக்கும் ஏழை இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏற்கெனவே மூலதனத்தை குவித்து வைத்திருக்கும் முதலாளிகளின் மூலதனம்தான் வளர்ந்துகொண்டே போகிறது. ஏழை மக்கள் மேலும் மேலும் இளைத்துக்கொண்டே போகிறார்கள். இந்த இடைவெளியை தாராளமய துதிபாடிகள் அள்ளிவீசும் புள்ளி விவரங்களால் நிரப்பிவிட முடியாது.

 

குறிச்சொற்கள்:

சுரங்க அரசியல்


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபுலாபுரம் இரும்புத்தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடு மாறு மத்திய அரசை ஆந்திர அரசு கோரியுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்கள் தற்போது ஆந்திர அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஓபுலாபுரத்தில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி குத்தகைக்கு எடுத்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும், ஜெகன்மோகன் ரெட்டியும் தொழில்முறை கூட்டாளிகள் என்றும், ஜெகன் மோகன் ரெட்டியின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெலுங்குதேசக் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஓபுலாபுரம் இரும்புத்தாது தொழிற்சாலை குத்தகை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரியுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார். ஓபுலாபுரம் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதை தாம் வரவேற்பதாகவும், சுரங்க முதலாளிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெயரை தேவையின்றி இழுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இல்லையென்றால் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதற்கு இசையவில்லை. கர்நாடக மாநிலத்தில் கோஷ்டிப்பூசல் காரணமாக தங்களது சுரங்கக்கொள்ளைக்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று ரெட்டி சகோதரர்கள் கலகம் செய்தனர். எம்எல்ஏக்களை கடத்தி வைத்து, மேலிடத்துடன் பேரம் பேசினர். பாஜக மேலிடம் தலையிட்டு, ரெட்டி சகோதரர்களின் கொள்ளைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்ததைத் தொடர்ந்து எடியூரப்பாவின் பதவி தப்பியது. ஆனால் அவரது தீவிர ஆதரவாளரான பெண் அமைச்சர் ஷோபாவின் பதவி பறிக்கப்பட்டது. எடியூரப்பாவினால் மாறுதல் செய்யப்பட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு ஆதவான அதிகாரிகள் மீண்டும் அதே பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த தொழில் அதிபர்களின் செல்வாக்கு மண்டலம் ஆந்திரா வரை பரவியுள்ளதை ஓபுலாபுரம் சுரங்க விவகாரம் உணர்த்துகிறது. அரசியல் என்பது ஜனநாயக முறையில் மக்களுக்கு சேவை செய்யும் பணி என்ற நிலை மாற்றப்பட்டு, முதலாளிகளின் சதுரங்க விளையாட்டு என்ற நிலை உருவாக்கப்படுவது மக்களாட்சியின் மாண்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகும். தேசிய அரசியலிலும் இதன் நிழல் படிகிறது. முந்தைய ஆட்சியின்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசைக் காப்பாற்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கரன்சி விளையாட்டு நாடாளுமன்ற கட்டிடம் வரை நீண்டதை நாடு பார்த்தது. தேசத்தை நேசிப்போர் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று இது.

 

குறிச்சொற்கள்:

ராஜாவின் புதிய ஊழல்


Capture

தகவல் தொலைத் தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்த யூனிடெக் குழுமத்தைச் சேர்ந்த கம்பெனிகள் தங்கள் பங்குகளில் 74 சதவீதத்தை பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இயங்கிவரும் நார்வே டெலிகாம் நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனத்திற்குத் தந்திட பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ‘தி பயனீர்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நார்வே நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனம் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இயங்கி வருவதால், யூனிடெக் குழும கம்பெனிகள் தங்களின் பங்குகளை அதற்கு மாற்றிட, மத்திய உள்துறை அமைச்சகமும் புலனாய்வுக் குழுவும் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வும் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆயினும், பின்னர் உள் துறை அமைச்சகம், எதிர்ப்புகளுக்கான காரணங்களை நீர்த்துப்போகச் செய்து விட்டது. உள்துறை அமைச்சகத்தின் புதிய நிபந்தனைகளின்படி டெலினார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் பணியாற்றியிருப்பின் அவர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் பாகிஸ்தானிலோ வங்க தேசத்திலோ பணியாற்றவில்லை என்பதை எவ்விதம் சோதனை செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

டெலினார் நிறுவனம் மத்திய அரசின் அனுமதியை சிங்கப்பூரில் செயல்படும் தங்கள் கிளையின் வாயிலாக வாங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கடந்த ஞாயிறு அன்று சந்தித்துக் கொண்டதற்கு மறுதினம், திங்களன்று மத்திய அரசு இந்த முடிவினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டெலினார்’ பிரச்சனை, கருணாநிதிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சென்ற ஆண்டு டிசம்பர் 4 அன்று கருணாநிதி புது தில்லி வந்திருந்தபோதே, சோனியா காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ‘டெலினார்’ நிறுவனம் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் ‘‘அவலம்’’ தொடர்பாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் தில்லி வந்திருந்தார். காலையில் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தபின், கருணாநிதி மட்டும் சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத் சாலைக்குப் பயணித்திருக்கிறார். சோனியா கா தியுடன் புகைப்படம் எடுக்கும் வைபவம் முடிந்த பின்னர், தன்னுடன் வந்திருந்த டி.ஆர். பாலுவையும் அவர் வெளியேறச் சொல்லி விட்டார். அவரது மகள் கனிமொழி மட்டும் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது உடன் இருந்திருக்கிறார்.

சென்ற ஆண்டு, ரியல் எஸ்டேட் கம்பெனியாக இருந்த யூனிடெக் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை 1651 கோடி ரூபாய்களுக்குப் பெற்று, அடுத்து ஒருசில வாரங்களுக்குள் அதில் 60 சதவீத பங்குகளை டெலினார் நிறுவனத்திற்கு 6120 கோடி ரூபாய்க்கு விற்றதைத் தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. யூனிடெக் நிறுவனம் பல்வேறு பெயர்களில் டெலிகாம் உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தன. மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றொரு அறிவிக்கையை வெளியிட்டநிலையில், யூனி டெக் நிறுவனங்கள் தாம் பெற்ற அனைத்து உரிமங்களையும் ஒன்றிணைத்து விட்டன. இது தொடர்பாக தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையம், குற்றப்புலனாய்வுக் குழு ஆகியவை விசாரித்து வருகின்றன.

பின்னர், யூனிடெக் நிறுவனம் மீண்டும் தன்னை யூனிடெக் ஒயர்லஸ் (தமிழ் நாடு), யூனிடெக் ஒயர்லஸ் (வடக்கு), யூனிடெக் ஒயர் லெஸ் (தெற்கு), யூனிடெக் ஒயர்லஸ் (கொல்கத்தா), யூனிடெக் ஒயர்லஸ் (தில்லி), யூனிடெக் ஒயர்லஸ் (கிழக்கு), யூனிடெக் ஒயர்லஸ் (மும்பை), யூனிடெக் ஒயர்லஸ் (மேற்கு) என எட்டு கம்பெனிகளாக பிரித்துக் கொண்டது.

Update: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந் நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சஞ்சார் பவன் கட்டத்தி்ல் உள்ள அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தி வருகிறது.

மேலும் சில தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

 

குறிச்சொற்கள்:

அவர்களுக்கு இல்லை எந்த நெருக்கடியும்


பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல மாதங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த அமைச்சர்கள் வெளியேறி,அரசு மாளிகைகளில் தங்கத்துவங்கினர். சோனியாகாந்தி உள்ளிட்டோர் விமானத்தில் சாதாரண வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து நாட்டிற்காக “மகத்தான” தியாகம் செய்து வருகின்றனர்.

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது,மக்களும் இதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்வதுதான் காங்கிரசாரின் வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவரே நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். அவர் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கோ, ஆலைத் தொழிலாளர்களுக்கோ, முறைசாரா தொழிலாளர்களுக்கோ அல்ல; மாறாக நாட்டிலுள்ள மிகப்பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் குரல் கொடுத்திருக்கிறார்.

பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். உழைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முடிந்த வரை குறைக்க நினைக்கும் முதலாளிகள் சங்கம் கூட இந்த ஊதிய உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிக்கி எனப்படும் முதலாளிகள் அமைப்பின் தலைவர் சிங்கானியா, தலைமை நிர்வாகிகளின் ஊதியம் குறைக்கப்படக் கூடாது. மாறாக இப்போதிருப்பதைவிட இன்னமும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாததால்தான் அரிய பெரிய மூளைகளெல்லாம் வெளி நாட்டுக்கு உழைப்பதற்கு சென்றுவிட்டது. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் முன்பு அப்படியே வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு ஓரளவு நியாயமான ஊதியம் கிடைப்பதால்தான் இந்தியாவில் பணியாற்ற “பெருந்தன்மையோடு” முன்வந்துள்ளனர் என்றும் சிங்கானியா கூறியுள்ளார்.

ஐஐஎம், ஐஐடி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில், முழுக்க முழுக்க அரசு செலவில் படிப்பவர்கள் வெளிநாட்டுக்கு பறந்து செல்வதை தடுக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று முதலாளிகள் சங்கம் கூறவில்லை. மாறாக அவர்களை இங்கேயே தக்கவைக்க உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

உலக வங்கியின் தலைவரே, பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகும் என்று அவ்வப்போது அபாயச் சங்கு ஊதுகிறார். ஆனால் அவர் தனது ஊதியத்தை குறைத்துக்கொள்ள முன் வரவில்லை. மாறாக, தனது ஊதியத்தை மேலும் உயர்த்திக்கொண்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. பொருளாதார நெருக்கடியின் மொத்த சுமையும் கிராமப்புற எளிய மக்கள், நகர்ப்புற உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஊருக்குத்தான் உபதேசம், நமக்கு இல்லை என்பதுதான் முதலாளிகளின் சித்தாந்தம்.

 

இந்திய விவசாயிகளை கொள்ளும் மன் மோகன் சிங்


உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர, நீடித்து வந்தமுட்டுக்கட்டைகள் தகர்ந்து விட்டதாக இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்று பேச்சு வார்த்தைகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கின. இந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய அம்சமாக, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பிரதான தொழிலாக விவசாயமே விளங்கி வரும் நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் பொருட்டு விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை பெருமளவு வெட்டிக் குறைக்க வேண்டு மென்று வளர்ந்த நாடுகள் நிர்ப்பந்தம் செலுத்தின. மேலும், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத உற்பத்தி பொருட்களின் சந்தைக்குள் நுழைவதற்கு வளர்ந்த நாடுகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும் நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. அப்படி அனுமதித்தால், வளரும் நாடுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களின் நலன் மிகக் கடுயாக பாதிக்கப்படும்.

எனவே இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் கடுமையாக எதிர்த்தன. இதன் காரணமாக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையை உலக வர்த்தக அமைப்பால் மேலும் தொடர முடியவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாதது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் கொள்ளை லாபத்திற்கு உதவவில்லை. எனவே, எப்படியேனும் இந்தியா போன்ற நாடுகளின் விவசாயத்தை அழிக்கவும், சந்தையை கைப்பற்றவும் தோஹா சுற்றுப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடர மன்மோகன் சிங் அரசுக்கு அமெரிக்காவும், உலக வர்த்தக அமைப்பின் தலைமையும் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன.

உலக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் நாசகர புதிய தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்துவது என்று முடிவெடுத்து செயல்பட்டு வரும் மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு உதவி புரிவதாக உறுதி மொழி அளித்துள்ளது.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு, செப்டம்பர் 3, 4 தேதிகளில் தலைநகர் டில்லியில், நாடாளுமன்றத்திற்கு தெரியாமல், நாட்டு மக்களுக்கு தெரியாமல் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளது வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 35 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். வெள்ளியன்று இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நின்று போயுள்ள உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைகளை மேலும் தீவிரமாக தொடர்வது என்ற ஒப்பந்தத்தை இக்கூட்டத்தில் எட்டியிருப்பதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும், தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து விட்டதாகவும் தெரிவித்தார்.

செப்டம்பர் 14-ம்தேதி ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் தலைமை பேச்சுவார்த்தை குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து, தற்போது எட்டப்பட்டுள்ள ஒத்த கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்றும், பேச்சுவார்த்தையை மேலும் தொடர்வது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் ஆனந்த் சர்மா கூறினார்.

செப்டமப்ர் 14-ம்தேதி ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய விவசாயத்திற்கு அழிவுப் பாதையை உருவாக்கும் உலக வர்த்தக அமைப்பின் இந்தப் பேச்சுவார்த்தைகளில் மன்மோகன் சிங் அரசின் அமைச்சர் ஆனந்த் சர்மாவும் பங்கேற்பார் என்று தெரிகிறது.

இந்திய விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இத்தகைய நாசகர நடவ டிக்கையை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிக் கட்சிகளும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

குறிச்சொற்கள்: , ,