RSS

Category Archives: இந்துதுவா

டிராபிக் ராமசாமி என்ற அய்யோக்கியன்


டிராபிக் ராமசாமியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சென்னையைச் சேர்ந்தவரான டிராபிக், பல நல்ல பொது நலன் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்களுக்கு பல பேருதவிகளைச் செய்தவர்.

அப்படியாப்பட்ட டிராபிக் ராமசாமி தற்போது நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் மதுரை ஆதீன மடத்திற்கு விசிட் அடித்த அவர் அங்கு நித்தியானந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டால், விவேகானந்தவர் மிகவும் தைரியமானவர். அவருக்குப் பிறகு அந்தத் தைரியத்தை நித்தியானந்தாவிடம்தான் பார்க்கிறேன். 100 இளைஞர்களைக் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறியவர் விவேகானந்தர். அதேபோல நித்தியானந்தவிடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். பிறகு ஏன் நீத்தியால் இந்தியாவை மாற்ற முடியவில்லை? ஒரு வேலை எண்ணிக்கை அதிகம் போலும். அவரது செயல்களில் நம்பிக்கை ஏற்பட்டதால்தான் அவரை விவேகானந்தருடன் ஒப்பிட்டுப் பேசினேன் என்றார். ஐயா உங்கள்  நீத்தி போல்  ஒரு போதும் விவேகானந்தவர்  பாலியல் வழக்கில் சிக்கியத்தில், ஆடி காரில் ஊர் சுற்றியத்தில் இல்லை, தன்னை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டது இல்லை தனக்கு என்று சொந்தமாக சொத்து சேர்த்தது கிடையாது.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு பல கோடி சொத்துக்கள் உள்ளன. அதை சில சுயநலவாதிகள் அனுபவித்து வருகிறார்கள்.சரி அப்படி என்றால் நீத்தியிடம் உள்ள சுமார் 2000 கோடி உள்ள சொத்துக்கள் அவர் எப்படி சம்பாதித்தார் அதை பற்றி நீங்கள் சொல்லுவீர்களா?  அவர்களிடமிருந்து சொத்துக்களை நித்தியானந்தா மீட்டு விடுவார் என்று பயந்துதான் அந்த சுயலவாதிகள் தூண்டுதலின் பேரில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தூண்டி விடப்படுகின்றன என்று கூறுகிறார் டிராபிக்.

சரி நித்தியானந்தா மீது பாலியல் வழக்குகள் உள்ளனவே என்ற கேள்விக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மீதும்தான் இருக்கிறது. மேலும் நித்தியானந்தா மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்படவே இல்லையே என்றார் டிராபிக். ஐயா வழக்கு உன்னாம் முடியவில்லை, தீர்ப்பும் வரவில்லை அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் 

 

குறிச்சொற்கள்:

மநுவின் வாரிசுகள்


“நாங்கள் வித்தியாசமான கட்சி” என்று ஓயாது பீற்றிக்கொள்ளும் பாஜகவின் லட்சணம் மேலும் மேலும் அம்பலப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருக்கிறபோது மூன்று பாஜக அமைச்சர்கள் அலை பேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சில தொலைக்காட்சிகள் அந்தக் காட்சியை அப்படியே ஒளிபரப்பி விட்டன.நாடே கொந்தளிக்கிறது. வேறு வழியில்லாமல் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த கூட்டுறவு அமைச்சர் லட்சுமண் சவதியும், மகளிர்- குழந்தைகள் நல அமைச்சர் சி.சி. பாட்டீலும், விளையாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ண பலேமரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பண்பாட்டைப் பற்றி வாய்கிழியப் பேசும் பாஜகவின் முகமூடி மட்டுமல்ல உடை முழுமையுமே கழன்று விழ நாட்டு மக்கள் முன்னால் நிர்வாணமாய் நிற்கிறது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தன் மனைவி என்று சொல்லி இன்னொருவர் மனைவியை கூட்டிக்கொண்டு போன அசிங்கம் ஏற்கெனவே அரங்கேறி நாடே காறித் துப்பியது. பொதுவாக பாஜகவை காவிக்கட்சி என கூறுவது வழக்கம். ஆசிரமங்களில் சில போலிச்சாமியார்கள் நடத்துகிற காமக்களியாட்டங்கள் வீடியோ காட்சிகளாய் நாட்டையே உறை யவைத்ததுபோல் காவிக்கட்சியும் தன் பங்கை நிறைவேற்றி இருக்கிறதோ?

காதலர் தினத்தன்று இளைஞர்கள் கொண்டாடுவதை பண்பாட்டு விரோதம் என்று கூப் பாடு போட்டு காதல் ஜோடிகளை தாக்குகிற அயோக்கியத்தனம் கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும். ஒருமுறை காதல் ஜோடிகளை கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறோம் என இந்தக் காலிக்கூட்டம் களத்தில் இறங்கியது. பூங்காவில் பேசிக்கொண்டிருந்த அண்ணன்- தங்கையை கட்டாயத் தாலி கட்ட வைத்த அராஜகத்தை மறந்துவிட முடியுமா? இந்த ஆண்டும் அந்த ‘ராமர்சேனை’ தன் கரசேவையைத் தொடங்கிவிட்டது.

கல்லூரி மாணவிகள் உடை உடுத்துவதில் கூட நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என இந்தக் காலி(வி)க்கூட்டம் செய்கிற அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. இப்போது இவர்களுடைய முழு யோக்கியதையும் கண்டு நாடே சிரிக்கிறது.

அதுமட்டுமல்ல, ஊழலைப் பற்றி இவர்கள் உரக்கப் பேசுவார்கள். ஆனால் பங்காரு லட்சுணன் முதல் கர்நாடக ரெட்டி சகோதரர்கள் வரை பாஜகவுடைய இரட்டை வேடத்தை ஊரறிய படம்பிடித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மதவெறியும், பதவிவெறியும், பணவெறியும், ஒழுக்கக் கேடுகளும் மிகுந்தவர்களுடைய கூடாரம்தான் பாஜக என்பதை ஒவ்வொரு சம்பவமும் நாட்டுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரக்கொள்கையிலும் எந்த விதத்திலும் மாற்றுக்கொள்கை இல்லை. சமூகத் தளத்திலும் மிகவும் பிற்போக்கானவர்களே இவர்கள். பெண்களை வெறும் போகப் பொருளாகவும் ஆணின் அடிமைகளாகவும் பார்க்கிற சனாதன மநுவின் பார்வைதான் இவர்களின் அடிப்படைக் கோட்பாடு என்பதால், இவர்கள் ஆசிரமத்தில் இருந்தாலும் ஆட்சியில் இருந்தாலும் ஆபாசப்படம் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இந்த பஞ்சாங்கத்தனம் அவர்கள் ரத்தத்திலேயே ஊறியவை. மக்கள் இந்த ‘யோக்கிய சிகாமணிகளை’ அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். வெறுத்து ஒதுக்க வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

கர்நாடகாவில் சங் பரிவாரங்கள் தேவாலயங்களைத் தாக்கின அதிகாரிகளும் உடந்தை: விசாரணைக்குழு அறிக்கை


கர்நாடகாவில் 13 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை 2008-ம் ஆண்டில் சங் பரிவாரங்கள் தாக்கின. அதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் உடந்தையாய் இருந்தனர் என்று நீதிபதி பி.கே. சோமசேகரா தலைமையிலான குழு குற்றம் சாட்டி யுள்ளது.

மங்களூரிலும், பிற மாவட்டங்களிலும் தேவாலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் தாக்கப்பட்டதற்கு பஜ்ரங்தள், ஸ்ரீராம சேனை, விஎச்பி மற்றும் பல மதவெறி அமைப்புகளின் உறுப்பினர்களே காரணம் என்று நீதிபதி சோமசேகரா குழு கூறியுள்ளது. பல தேவாலயங்கள் தாக்கப்பட்டதும் உண்மையே என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் தாக்கப் பட்ட சம்பவங்களில் ஈடுபட்ட பஜ்ரங்தள், ஸ்ரீராம சேனை ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு மூத்த காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர் உடந்தையாய் இருந்தனர் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

காவல்துறை அத்துமீறல்

தேவாலயங்கள் தாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடிய கிறிஸ்தவர்கள் மீது, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறிக் கொண்டு தடியடி நடத்திய காவல்துறை, அத்துமீறி நடந்து கொண்டது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை காவல் துறை காயப்படுத்தியது என்றும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

கிறிஸ்தவ மதமாற்றங்கள் பெருமளவில் நடை பெற்றதற்கு கட்டாய வற்புறுத்தல்கள் காரணம் இல்லை. மாறாக மத மாற்றங்களுக்கு சூழ் நிலையும் பணம் உள்ளிட்ட தூண்டுதலுமே காரணம் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் 90 சதவீதம் மட்டுமே செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்று நீதிபதி பி.கே.சோமசேகரா கூறினார். அறிக்கையின் சுருக்கக் குறிப்பை செய்தியாளர்களிடம் அவர் அளித்தார்.

நுட்ப உணர்வு கொண்ட பல அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை என்றும், இறுதி அறிக்கை மார்ச் 31-க்குள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

குறிச்சொற்கள்: , ,

கருநாடகம்


ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்ளைக் கூட்டத்தோடு உறவாடிய பாஜகவினர் இப்போது ஆப்பசைத்த குரங்காய் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். “பாஜக வித்தியாசமான கட்சி” என்ற அவர்கள் பற்றிய விளம்பர வாசகங்கள் அர்த்தமிழந்து பல்லிளித்து நிற்கிறது கர்நாடகாவில் .

முதன் முதலாக தென் மாநிலத்தில் பாஜக வேரூன்றி விட்டது என கர்நாடக வெற்றியை அவர்கள் வருணித்தார்கள். மதச் சார்பற்ற ஜனதா தளம் செய்த கோமாளித்தனங்களாலும்; காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கசந்து போயிருந்த மக்களிடம் பணத்தை அள்ளிவீசி பெறப்பட்ட வெற்றியே அது. அப்போதும் கூட அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் சுயேட்சைகளையும் இதரர்களையும் விலை கொடுத்து வாங்கி (Opreation Loutus) ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார் எடியூரப்பா. ஆக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததே பண பலத்தால் தான்.

கர்நாடக அரசியலை ஊன்றிக் கவனிக்கிற யாரும் அங்கே நடப்பது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியென்று கூறமாட்டார்கள். பெல்லாரி ஜனார்த்தன ரெட்டி குடும்ப பிரைவேட் பார்ட்டி என்றே கூறுவார்கள். அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான கனிம வளத்தை கொஞ்சம் சட்டப் பூர்வமாகவும், மிக மிக அதிகமாக சட்ட விரோதமாகவும் கொள்ளையடித்துவிட்டு, அதில் ஒரு சிறு பகுதியை எலும்புத் துண்டுகளைப் போல மக்களுக்கு வீசுகிற ஸ்டைல்தான் அவர்களுடையது.

தங்கள் வெற்றிக்கும் ஆட்சி அதிகாரப் பசிக்கும் அவர்கள் தயவு தேவை என்பதால் இத்தனை காலம் அந்தக் கொள்ளையை கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆயினும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் சற்று கட்டணம் உயர்த்தியதும் “பாலூட்டுகிற காம தேனு”வாக பாஜகவுக்கு காட்சியளித்தவர்கள் “பாசக் கயிறை”வீசுகிற எமனாக காட்சியளிக்கத் துவங்கிவிட்டனர்.

ரெட்டி சகோதரர்கள், தங்களுக்கு 71 எம்எல் ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிவருகின்றனர். இந்த எம்எல்ஏக்களை சென்னை, ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் அடைத்து வைத்துள்ளதாக எடியூரப்பா கோஷ்டியினர் கூறுகின்றனர்.

ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர்களோடும், கர்நாடகாவில் பாஜகவோடும் உறவாடி தங்கள் கனிமக் கொள்ளையை ஜாம் ஜாம் என நடத்திக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம், ஒரு மாநில ஆட்சிக்கு சவால் விட முடியுமென்றால்; பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை லட்சணம் அவ்வளவுதான்.

அதிகாரிகளை, பத்திரிகைகளை, நீதிபதிகளை, விலைக்கு வாங்கும் பணத் திமிங்கலங்களால் விலைக்கு வாங்கப்பட்ட கட்சிதானே பாஜக! அவர்களுக்கு கொள்கையைப் பற்றி, நேர்மையைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. மதவெறியும் பணத் திமிங்கலங்களும் சேர்ந்து நடத்தும் அரசியல் வியாபாரத்தை மக்கள் புரிந்து கொண்டு விரட்டியடிக்க வேண்டும். இந்த ‘புனிதக் கூட்டணி’ ஆட்சி தொடருமானால் அது மக்களாட்சி மாண்புக்கே தலை குனிவாகும். மக்கள் நலனையும் மதநல்லிணக்கத்தையும் முன்னிறுத்துகிற புதிய அரசியல் கலாச்சாரத்துக்காக போராட வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் என்பதே கர்நாடகா சொல்லும் சேதி.

 

குறிச்சொற்கள்:

அத்வானி ஊசிப்போன ஊறுகாய்


பாஜக கூடாரத்துக்குள் உள்குத்து அதிகரித்து வரும் நிலையில், அத்வானி மீது மேலும் ஒரு முக்கியத்தலைவர் தாக்குதல் தொடுத்துள்ளார். அத்வானி ஒரு ஊசிப் போன ஊறுகாய், அவரது ஆட்டம் முடிந்துவிட்டது என்று கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்வானியின் காலம் முடிந்து விட்டது. அடுத்த இரண்டாண்டு காலத்திற்கு அவர் கட்சியின் கார்டியனாக வேண்டுமானால் செயல் படலாம் என்று பாரிக்கர் கூறினார்.

பாரிக்கர், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ராஜ்நாத் சிங்கிற்கு பிறகு இவர் தலைவராக்கப் படலாம் என்று யூகங்கள் எழுந்த நிலையில், அத்வானி மீது அவர் கடும் தாக்குதல் தொடுத்துள்ளது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்வானி என்னுடைய மதிப்புமிக்க தலைவர், அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரது ஆட்டம் முடிந்து விட்டது. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகத்திலிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்று, அத்வானியும் அரசியலிலிருந்து விலக வேண்டிய தருணம் இது என்று பாரிக்கர் கூறினார்.

ஊறுகாய் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊற வேண்டியது அவசியம். ஆனால் அதே நேரத்தில் அது ஆண்டுக்கணக்கில் ஊறிக்கொண்டிருந்தால் ஊசிப்போய் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும் என்று பாரிக்கர் கூறினார்.

நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று அவர் கூறினார். அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் மீது ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாரிக்கரும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

 
 

குறிச்சொற்கள்:

சரத்குமாருக்கு சில கேள்விகள்?


பாரதிய ஜனதா தலைமையிலான மக்கள் நலன் காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும். சிந்தித்து செயல்படும் வலிமையான அரசு நமக்குத் தேவை, என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், கோவைத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கையில் கூறியுள்ளார். பாஜகவின் நிழலில் ஒண்டியிருக்கும் சரத்குமாருக்கு சில கேள்விகள் இதோ:-

பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்த போது தானே 2002இல் குஜராத்தில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான நர வேட்டை இனப்படுகொலை நடைபெற்றது. இன்னமும் நரேந்திர மோடி ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் இலட்சணமா?

இன்று பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதே, அதான் நமக்குத் தேவை என்று சொல்கிறீர்களா, அது அடுக்குமா?

மாலேகாவ் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகளைப் பாதுகாக்க முனைந்த கட்சி பாஜக, பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையேஇந்து மதத் தலைவருக்கு எதிரான சதி என்று சொல்லி சீர்குலைக்க முற்பட்ட, வடிகட்டிய மதவெறி கட்சிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது ஏன்?

பாஜக ஆட்சிக் காலத்தில்தானே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையா ஆனது! அது இன்றளவும் நீடிப்பதற்கு, பாஜக கூட்டணி ஆட்சி பின்பற்றிய விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள்தானே காரணம்! அப்படியிருக்க பாஜக கூட்டணி ஆட்சிமக்கள் நலன் காக்கும் என்று நீங்கள் எதை நம்பிச் சொல்கிறீர்கள்?

இன்று சுவிஸ் வங்கியில் இந்தியப் பெருந்தலைவர்களும், அரசியல்வாதிகளும் பதுக்கி வைத்துள்ள பணம் பற்றிப் பேசுகிற பாஜகவின் கூட்டணி ஆட்சியில் மொரீஷியஸ் நாட்டோடு ஒப்பந்தம் போட்டு, இந் தியாவில் வரியை ஏய்த்துக் கொள்ளை லாபத்தைக் கொண்டு போக வழி வகுத்தது உங்களுக்கு தெரியாதா?

இந்தியாவில் உணவு தானிய விற்பனையில் ஆன்லைனில் ஊக வர்த்தகத்தை நடத்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத் ததே பாஜக கூட்டணி ஆட்சிதானே?

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்து உணவுகளைப் பதுக்கல் செய்து, கொள்ளை லாபம் கொழிக்கும் வர்த்தக முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் பாஜக கூட்டணி ஆட்சிதானே? இது தான் மக்கள் நலன் காக்கும் செயலா?

கார்கில் யுத்தத்தின்போது சவப்பெட்டி வாங்கியதில் கூட ஊழல் செய்து நமது படை வீரர்களின் உயிர்த்தியாகத்தையே அவமதித்தஉத்தம கட்சியல்லவா பாஜக கூட்டணி அரசு? இதுதான் நமக்கு மீண்டும் தேவையா?

 

குறிச்சொற்கள்:

தயாநிதி, கலாநிதி பற்றி கலைஞர்


20070509152500maduraidemo2031மடியில் தவழ்ந்தும் மார்பில் விளையாடியும் – தோளில் தொத்தியும் நான் தூக்கி வளர்த்த பிள்ளை – அண்ணாவின் அன்புக்கும் என் உயிருக்கு உயிராகவும் விளங்கி – இன்னும் வாழ வேண்டிய வயது இருப்பினும் என்னை மீளா சோகத்தில் ஆழ்த்தி விட்டு, மறைந்து விட்ட மாறன்; அவர் பெற்ற பையன்கள் கலாநிதி தயாநிதி எனும் புகழ், அன்பு என்ற செல்லப் பெயர் கொண்ட இந்த இருவரும் அவரின் வழித் தோன்றல்களாக என்னிரு கரம் பிடித்துத் துளிர்த்துத் தழைத்த காட்சியை அனைவரும் அறிவீர்கள்.

ஆனால் வயது வந்த பிறகு; மாறன் எனும் பாசமிகு மதிற் சுவர் தாண்டி இருவரும் எனக்கெதிராக கிளம்பிடுவர் என்றோ; பகை பாராட்டுவர் என்றோ நான் கனவிலும் கருதிடவில்லை.

அவர்தம் போக்கும் நோக்கும், அவர்கள் “பூமாலை'” எனும் “கேசட்'” வியாபாரம் நடத்தியபோது இருந்ததை விட; அதன் வளர்ச்சி “சுமங்கலி கேபிள் விஷன்'” ஆக, “சன் டி.வி.'”யாக, “சன் நெட்வொர்க்'” ஆக வளர்ந்து மாறியதும் -மாறனின் பிள்ளைகளும் மாறிவிட்டார்கள்.

விரும்பவில்லை

முரசொலி மாறனும் முரசொலி அலுவலக முகப்பில் சிலையாக நின்று விட்டார். அதன் பிறகுதான் “சன் டி.வி.'” பங்குத் தொகை பிரிக்கப்பட்டு எமக்குக் கிடைத்த பங்குத்தொகை 100 கோடி ரூபாயை துணைவியர்க்கும் பிள்ளைகள் பெண்களுக்குமாக பங்கிட்டுக் கொண்டோம்.

சன் தொலைக்காட்சி முறையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று அதனைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது? எதற்காக அவ்வளவு அவசர அவசரமாகப் பிரிக்க முடிவெடுத்தார்கள்? சன் தொலைக்காட்சியின் இலாபம் எவ்வளவு? அதன் கணக்கு எவ்வளவு? என்று எந்த விவரத்தையும் நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அதற்கான பங்கீடு நடைபெற்ற போது கூட அதில் பங்கு பெற்றிருந்தோர், அதிலே கையெழுத்திட முன் வராத நிலையில் நான் தான் அவர்களையெல்லாம் சமாதானம் செய்து, அந்தப் பங்கீடு எந்தவிதமான கசப்புணர்வுகளும் ஏற்படாத வகையில் நடந்தேறிட உதவி செய்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். பின்னர் “தினகரன்'” இதழையும் இவர்கள் வாங்கி விட்டார்கள்.

கருத்துக் கணிப்பு

அதன் தொடர்பாக 7-5-2007 அன்று “தினகரன்'” நாளேட்டில் கருத்துக் கணிப்பு ஒன்று வெளிவரப் போகிறது என்று என் கவனத்திற்கு வந்தபோது, தேர்தல் இல்லாத நேரத்தில் எதற்காக இந்தக் கருத்துக் கணிப்பு, மெகா சர்வே என்றெல்லாம் தேவையற்ற பிரச்சினையைக் கிளப்ப வேண்டும், அது தேவையில்லை, அந்தக் கருத்துக் கணிப்பை தயார்படுத்திவிட்டாலுங்கூட, அதனை வெளியிட வேண்டாமென்று இரண்டு மூன்று முறை நான் நேரிலேயே தெரிவித்திருந்தேன்.

இது துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி இருவருக்கும் கூடத் தெரியும். ஆனால் என் யோசனையை ஏற்றுக் கொள்ளாமல், 2007-ஆம் ஆண்டு மே திங்கள் 7-ஆம் தேதிய “தினகரன்'” நாளேட்டில் அந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

தேவைதானா?

தமிழகத்தின் சார்பில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், “தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறப்பாகச் செயல்படுபவர் யார்?'” என்ற தலைப்பிலே கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்பில் தயாநிதிமாறனுக்கு 64 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும், நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு 27 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும், டி.ஆர். பாலுவிற்கு 7 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும், டாக்டர் அன்புமணிக்கு 1 சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்றும் மக்கள் ஆதரவு இருப்பதாக தினகரன் ஏட்டில் வெளியிட்டார்கள்.

இரண்டு மூன்று கட்சிகளின் சார்பில் மத்தியிலே கூட்டணியில் மந்திரிகள் இருக்கும்போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இல்லாத ஆதரவு தயாநிதி மாறனுக்கு இருப்பதைப் போலக் குறிப்பிடும் இந்தக் கருத்துக் கணிப்பு தேவைதானா?

வரவேற்பார்களா?

குறிப்பாக, தோழமைக் கட்சியிலே இடம் பெற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு 1 சதவிகிதம் பேர்தான் ஆதரவு என்று வெளியிடுவது சரியான முறைதானா? அதன் காரணமாக அந்தக் கட்சியிலே உள்ளவர்கள் தி.மு.கவின் பால் எந்த அளவிற்கு கோபம் அடைய நேரிடும்? அதே நேரத்தில் அகில இந்திய அளவில் பாராட்டுப் பெற்று நீண்ட அனுபவம் பெற்றுள்ள நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு 27 சதவிகிதத்தினர் தான் ஆதரவு என்றும், தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறனுக்கு மட்டும் 64 சதவிகிதம் பேர் ஆதரவு என்றும் வெளியிட்டால், காங்கிரஸ் கட்சியிலே உள்ள தோழர்கள் அதனை வரவேற்பார்களா?

எதற்காக வீண் வம்பை வளர்க்க வேண்டும்? தி.மு.க சார்பிலேயே அமைச்சர்களாக உள்ள பாலுவிற்கு 7 சதவிகிதம் பேர் தான் ஆதரவு என்று எழுதுவதால் என்ன பயன்? இந்தக் கருத்துக் கணிப்பினை வெளியிட்டே இருக்கத் தேவையில்லை என்பது என் கருத்தாக மட்டுமல்ல, அப்போது தமிழகத்திலே உள்ள மூத்த அரசியல்வாதிகள் அனைவராலும் அந்தக் கருத்துக் கணிப்பு தவறாகக் கருதப்பட்டது.

குடும்பத்தில் குழப்பம்

இந்தச் செய்தியைப் படித்து விட்டு பெரிதும் வருந்திய நான், நேரடியாக கலாநிதி, தயாநிதி இருவரையும் அழைத்து, முதலில் இந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடுவதை நிறுத்துங்கள் என்று கோபமாகவே சொன்னேன். என்னுடைய கோபம் அலட்சியப்படுத்தப்பட்டு என் கருத்தும் அப்போது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

9-5-2007 அன்று “தினகரன்'” இதழில் முதல் பக்கத்தில் தலைப்பிலே கட்டம் கட்டி ஒரு செய்தி – “கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? – 11ஆம் பக்கம் பார்க்க'” என்று தலைப்பிட்டு – மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்புக்கு தலைப்பே “கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும்?'” என்பதாகும்.

இதில் தமிழக அளவில் மு.க.ஸ்டாலின் தான் கலைஞரின் அரசியல் வாரிசாக வர வேண்டும் என்று 70 சதவிகிதத்தினரும், மு.க.அழகிரிக்கு ஆதரவாக 2 சதவிகிதத்தினரும், கனிமொழிக்கு ஆதரவாக 2 சதவிகிதத்தினரும் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டார்கள். முதல் கருத்துக் கணிப்பு தோழமைக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கானது என்றால், இந்தக் கருத்துக் கணிப்பு குடும்பத்தாருக்கு மத்தியிலேயே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

வீண் வம்பு

மு.க.அழகிரி ஆனாலும், கனிமொழி ஆனாலும் எனக்கு அரசியல் வாரிசாக வருவதற்கான முயற்சியோ, அறிவிப்போ எதிலும் ஈடுபடாத நிலையில், தேவையே இல்லாமல் வீண் வம்பினை விலை கொடுத்து வாங்குவதைப் போல அவர்களுக்கு தமிழகத்திலே இரண்டு சதவிகிதம் தான் ஆதரவு என்பதாக செய்தி வெளியிட்டார்கள்.

இதிலே கூட தயாநிதி மாறன், இந்தப் போட்டியில் தன் பெயரைத் தவிர்த்துக் கொண்டு, அவருக்கு எத்தனை சதவிகிதம் ஆதரவு என்பதையே வெளியிடாமல், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி என்ற என் பிள்ளைகளுக்கு மத்தியிலேயே ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். அப்போதெல்லாம் கூட, நான் இந்த ஏற்பாடுகள் எல்லாம் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுத் தான் செய்யப்படுகிறது என்று நினைத்தது கிடையாது.

வன்முை
மு.க. அழகிரிக்கு இரண்டு சதவிகிதம் பேர் தான் தமிழகத்திலே ஆதரவு என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டதும், அதற்காக அழகிரி கோபமடையாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் பொறுமையாக இருப்பார்களா? அதனால், அழகிரிக்கே தெரியாமல், அந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து வன்முறையிலே ஈடுபட்டார்கள். அந்த வன்முறைச் செயலில் அழகிரிக்கு கொஞ்சம் கூட ஈடுபாடு கிடையாது என்றபோதிலும், அந்த வன்முறைச் சம்பவம் நடைபெறவும், அதனால் மூன்று அப்பாவி அலுவலர்கள் பலியாகவுமான நிலைமை ஏற்பட்டது.

பிரித்தாளும் சூழ்ச்சி

கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டாமென்று நான் எத்தனை முறை சொன்னேன்? என் வார்த்தை கேட்கப்பட்டதா? அதன் பலன் என்னவாயிற்று? எதற்காக ஸ்டாலினை உயர்த்தி வைத்து, அழகிரியையும், கனிமொழியையும் மட்டம் தட்ட நினைக்க வேண்டும்? ஒரே குடும்பத்திற்குள் இப்படிப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சி நல்லது தானா?

மு.க.அழகிரியை அத்துடனாவது விட்டார்களா? 10-5-2007 தேதிய தினகரனில் – “கருத்துக் கணிப்பை சகிக்க முடியாமல் மு.க.அழகிரி வெறியாட்டம் – ரவுடிகளை ஏவித் தாக்குதல்'” என்ற தலைப்பிலே செய்தி வெளியிட்டார்கள்.

மோசமாக விமர்சனம்

குடும்பத்திற்குள்ளே சண்டையை ஏற்படுத்தியது மாத்திரமல்லாமல், அன்று முதல் இன்று வரை தினகரன் நாளேட்டில், என்னுடைய தலைமையிலே உள்ள தி.மு.க. அரசையும், அரசின் காவல் துறையையும் மற்றத் துறைகளையும் எந்த அளவிற்கு மோசமாக – ஏன் எதிர்க்கட்சி ஏடுகளை விட மோசமாக விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள்?

மே திங்கள் 11-ஆம் தேதி கொட்டை எழுத்துக்களில் “அழகிரி அட்டூழியத்திற்கு முடிவு கட்டுங்கள்'” என்றும் “நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டேன்'” என்றும் கலாநிதி மாறன் கூறியதாக தினகரன் நாளேட்டில் எழுதப்பட்டிருந்தது. அதே கருத்துக் கணிப்பின் தொடர்ச்சியாக “எந்த அரசுத் துறை அதிகாரிகள் அதிக லஞ்சம் வாங்குகிறார்கள்?'” என்ற தலைப்பில் – என் பொறுப்பிலே உள்ள காவல் துறையில்தான் அதிக அளவில் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று முடிவு வெளியிட்டார்கள்.

கவன ஈர்ப்புத் தீர்மானம்

தினகரன் அலுவலகத்திலே நடைபெற்ற சம்பவம் குறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10-5-2007 அன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, நான் அளித்த பதிலின் இறுதிப் பகுதி வருமாறு:-

09-05-2007 அன்று காலை 9.30 மணிக்கு, மதுரையில் சிலர் கருத்துக்கணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தினகரன் நாளிதழ் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து, தினகரன் இதழை தீயிட்டுக் கொளுத்திவிட்டு கலைந்து சென்றனர்.

இது சம்பந்தமாக, தலைமைக் காவலர் 830 ரகுநாத கலைமணி என்பவரின் புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண்.224/2007 பிரிவு 147, 148, 285 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் கோபிநாதன், குமார், சேகர், பாண்டி, அருணாசலம் ஆகிய ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், காலை 10.00 மணிக்கு சரவணன் என்பவர் தலைமையில் சிலர் தினகரன் அலுவலக வளாகத்திற்குள்ளேயே அத்துமீறி நுழைந்து, கற்களை வீசி, கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

பாதுகாப்பு

இது சம்பந்தமாக, தலைமைக் காவலர் 1380 மார்டின் வில்லியம் என்பவரின் புகாரின் பேரில், ஒத்தக்கடை காவல் நிலைய குற்ற எண். 225/2007 பிரிவு 147, 148, 332 இ.த.ச.படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அழகுராஜா, பிரேம்குமார் என்ற இருவர் இதுவரை கைதாகியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, தினகரன் அலுவலகத்திற்கு ஊமச்சிக்குளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், தலைமையில் நான்கு உதவி ஆய்வாளர்கள் உட்பட 17 காவலர்களை அனுப்பி, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.

சுமார் 11.30 மணிக்கு, சிலர் டாடா சுமோ காரில் வந்து காவல்துறை பாதுகாப்பை மீறி தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்களை வீசி, கண்ணாடி மற்றும் அலுவலகப் பொருட்களை தீ வைத்து சேதப்படுத்தி, தப்பி சென்றுவிட்டனர். உடனடியாக, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயினை அணைத்தார்கள். தீ மற்றும் புகையில் சிக்கி தினகரன் அலுவலக ஊழியர்கள் கோபிநாத், வினோத் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் மூச்சு திணறி இறந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இது சம்பந்தமாக காவல் உதவி ஆய்வாளர் ஆலடியான் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், இது சம்பந்தமாக, தினகரன் நாளிதழ் செய்தி ஆசிரியர் முத்துபாண்டியன் கொடுத்த புகாரும், இதனுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் டைகர் பாண்டி, பாட்சா, சரவணன், மாரி மற்றும் பிரபு ஆகிய ஐவர் இதுவரையில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிரிகள் பயன்படுத்திய டாடா சுமோ வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில், மற்ற எதிரிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில், பேருந்துகள் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை சேதப்படுத்தியது சம்பந்தமாக, கரிமேடு, ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் 7 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுவரை 82 பேர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணை

இச்சம்பவங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து தினகரன் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் சன் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கி, இது சம்பந்தமாக எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று காவல் துறை சார்பில் அறிக்கை எனக்குத் தரப்பட்டுள்ளது.

இதனைச் சொல்லும்போது – இந்த நிகழ்வுகளில் இதிலே என்னுடைய குடும்பத்தினரையும் சம்பந்தப்படுத்தியிருக்கிற நிலையில் – இந்த வழக்கினை தமிழகப் போலீசார் விசாரிப்பதற்குப் பதிலாக – மத்திய அரசு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்தும், மூன்று பேர் இறந்தது குறித்தும் சி.பி.ஐ.யைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கிறேன்.

தமிழக அரசின் சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மத்திய அரசுக்கும் தலைமைச் செயலாளர் மூலமாகக் கடிதம் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'”

தாங்கி கொள்ள முடியுமா?

இவ்வாறு சட்டமன்றத்திலே நான் விரிவாக எடுத்துரைத்த பிறகும், இதனைத் தொடர்ந்து நாள் தவறாமல் அழகிரிக்கு சம்மந்தமே இல்லாத பிரச்சினைகளிலே எல்லாம் கூட அவர் மீது பழியைப் போட்டும் – அதேபோல் மத்தியிலே தயாநிதி மாறன் மந்திரியாக பொறுப்பேற்றிருந்த துறையின் அமைச்சராக தி.மு.க. சார்பில் மந்திரியாக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு எதிராகவும் – தமிழகத்திலே மின் துறை அமைச்சருக்கும், வேறு குறிப்பிட்ட சில அமைச்சர்களுக்கு எதிராகவும் எந்த அளவிற்கு மோசமாக செய்தி வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அதுபற்றி பல முறை நான் வீட்டிலே உள்ளவர்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் தெரிவித்தும் கூட அதனைக் கேட்கவில்லை. “தாத்தா – பேரன்'” என்ற முறையில் நான் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் தலைமை வகித்து நடத்திடும் கட்சியையும் ஆட்சியையும் வேண்டுமென்றே தொடர்ந்து பழி சுமத்தினால் அதனை நான் தாங்கிக் கொள்ள முடியுமா?

கால அவகாசம்

அதுவும் கழகத்திற்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்திற்குள்ளேயே இருந்து கொண்டு, அந்தக் கழகத்தைப் பற்றி இழித்தும் பழித்தும் செயல்படுவதென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனால்தான் சன் தொலைக்காட்சி அமைந்திருந்த அந்த அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டுமென்று கழகப் பொருளாளர் மூலமாகச் சொல்லி அனுப்பப்பட்டது.

அப்போது கூட 5-2-2008 அன்று சன் தொலைக்காட்சி சார்பில் தி.மு.கழக அறக்கட்டளை தலைவராகிய எனக்கு எழுதிய கடிதத்தில் ஆறு மாத காலம் தொடர்ந்து அங்கேயிருப்பதற்கு அனுமதிக்கக் கேட்டிருந்தார்கள். அதையும் ஏற்றுக் கொண்டு அவ்வாறே கால அவகாசமும் தரப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

கண் கலங்கினர்

இவ்வளவிற்கும் பொறுமையாக இருந்து செயல்பட்ட பிறகும், தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த இடத்தை 5-7-2008 அன்று காலி செய்து விட்டு செல்லும்போது என்ன செய்தார்கள்? அந்தக் கட்டிடத்தையே புனரமைப்பு செய்ய வேண்டிய அளவிற்கு மின்சார “ஒயர்கள்'” எல்லாம் தாறுமாறாக அறுக்கப்பட்டும், குளியல் அறையிலே உள்ள சாதனங்கள் எல்லாம் உடைக்கப்பட்டும் சுவர்களையும் நாசம் செய்து விட்டுச் சென்றார்கள்.

இந்தக் கொடுமையான காட்சியை போய்ப் பார்த்து விட்டு வருமாறு பொருளாளர் அவர்களையும், வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன் மற்றும் கழக முன்னோடிகள் சிலரையும் அனுப்பிவைத்தேன். அவர்களும் என்னுடன் சேர்ந்து கண் கலங்கினர்!
(நன்றி: தினத்தந்தி)

 

குறிச்சொற்கள்:

பிரபுவின் 250 கோடி ஊழல்


கடுமையான

உட்கட்சிப் பூசலுக்குப் பிறகு ஒருவழியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. கோஷ்டிச் சிக்கலில் இருந்து தப்பித்து வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவைத் தொகுதி வேட்பாளரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆர்.பிரபு, 250 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சிக்குகிறார்.

ஜேபூர் சுகர்ஸ் என்ற சர்க்கரை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஆர். பிரபுவும் ஒருவர். கிழக்கு கோதாவரியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் இந்த நிறுவ னம் சார்பில் 250 கோடி ரூபாய் கடன் பெறப் பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் பெயர்க ளில் இந்த கடனை நிறுவனம் வாங்கியுள்ள தாகக் கூறப்படுகிறது. இதில் ஏராளமான விவ சாயிகளின் பெயர்கள் போலி என்று விஜி லென்ஸ் விசாரணையில் தெரிய வந் துள்ளது.

விவசாயிகளின் பெயரில் பெறப்பட்டுள்ள கடன்க ளுக்கு ஜேபூர் நிறுவனமே உத்தரவாதம் அளித்துள்ளது. ஆவணங்களின்படி கடன் வாங்கிய விவசாயிகள் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள் என்று பதிவு செய்து வைத்துள்ளனர். போலியான பெயர்க ளில் வாங் கப்பட்ட கடனை, வேறு விஷயங்க ளுக்காக திசைதிருப்பி விட்டுள்ளனர். வங்கிக் கிளையில் ஏராளமான மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ(மத்திய புல னாய்வுத்துறை) கையில் இந்த மோசடியும் சிக் கிக் கொண்டுள்ளது. பிப்ரவரி கடைசி வாரத்தில் இந்த விவகாரம் அம்பலமானது.

வங்கி ஆவணங்களை சிபிஐ முழுமை யாகப் பரிசோதித்துள்ளது. ஆனால் இதுவரை எந்தவித வழக்கையும் சிபிஐ பதிவு செய்ய வில்லை. எதிர்க்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக சிபிஐயை ஏவி விடும் மத்திய காங்கிரஸ் அரசு சொந்த கட்சி எம்.பி. யின் மோசடியை கண்டும் காணாமல் இருக் கிறது. தனது மற்றும் தன் நிறுவனத்தின் நடவ டிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக சிபிஐ யின் விசாகப்பட்டினம் அலுவலகத்தை பிரபு அணுகினார். விதிகளின்படி கடன்கள் திரும் பவும் செலுத்தப்பட்டு வருகிறது என்று அவர் அளித்த மனுவில் தெரிவித்தார்.

வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு இன்னும் சில நாட்களில் தனது விசாரணையை முடித் துக் கொள்ளும். அதற்குப்பிறகு முறைப்படி யாக எங்களுக்கு புகார் தருவார்கள். அவ்வாறு தராவிட்டாலும் நாங்களாகவே வழக்கைப் பதிவு செய்து கொள்வோம் என்று சிபிஐ வட் டாரங்கள் தெரிவித்துள்ளன. கடன்கள் ஒழுங் காக திரும்பவும் செலுத்தப்பட்டு வருகிறது என்று பிரபு கூறியுள்ளது குறித்து கருத்து தெரி வித்த சிபிஐ வட்டாரங்கள், மோசடியில் ஈடு பட்டுவிட்டு, கடனைத் திரும்பவும் செலுத்தி விடுகிறோம் என்று கூறுவது குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவாது. என்ன காரணங் களுக்காக கடன்கள் வாங்கப்பட்டனஎவ் வாறு செலவழிக்கப்பட்டதுஎன்றெல்லாம் ஆய்வு செய்வோம் என்று கூறியுள்ளது.

பேங்க் ஆப் இந்தியாவின் பல கிளைக ளில் போலியான பெயர்களில் கடன்கள் வாங்கப்பட்டுள்ளன. இறந்துபோனவர்களின் பெயர்களிலும் கடன்களை வாங்கியுள்ளனர். சுமார் 15 ஆயிரம் விவசாயிகளின் பெயர்க ளில் இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. விவசாயத்துக்கு என்று கூறி வாங்கியதால் 7.75 சதவீதம் வட்டியை பிரபுவின் நிறுவனம் செலுத்தியுள்ளது. மற்ற வர்த்தகக் காரணங்க ளுக்காக வாங்கியிருந்தால் 14 முதல் 16 சத வீதம் வரை வட்டி தர வேண்டியிருக்கும்.

2002 ஆம் ஆண்டிலிருந்தே நடக்கும் இந்த மோசடியில், ஆர்.பிரபுவோடு, வங்கியின் மேலாளரும் சிபிஐயின் பிடியில் சிக்குகிறார்

.

 

டிப்ஸ் தர சொல்லும் கருணாநிதி


ஒரு

நாள் ஒரு பத்து வயது சிறுவன் ஒரு ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ஐஸ்கிரீம் கோன் எவ்வளவு? என்று கடை பணிப் பெண்ணிடம் கேட்டான். அவள், எழுபத்து ஐந்து செண்ட்டுகள் என்றாள். அந்த சிறுவன் தனது கையில் இருந்த சில்லறைகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன், ஒரு சிறிய ஐஸ்கிரீம் எவ்வளவு? என்று கேட்டான். பணிப்பெண் பொறுமையிழந்து 65 செண்ட்டுகள் என்று பதில் அளித்தள். அந்த சிறுவன் எனக்கு சிறிய ஐஸ்கிரீம் கப் வேண்டும் என்றான். அவனுக்கு ஐஸ்கிரீம் கிடைத்தது. பில் பணம் கொடுத்து விட்டு வெளியேறினான். அந்த வெற்றுக் கப்பை எடுக்க வந்த பணிப்பெண் மனம்முருகிப் போனாள். அந்த கப்புக்கு அடியில் 10 செண் ட் சில்லறைகள்டிப்ஸ்கா வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ்கிரீம் வாங்குவதற்கு முன்னால் அந்த பெண்ணுக்கு ஏதாவது தர எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையும் காட்டிவிட்டான். அவன் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் பிறரைப் பற்றி எண்ணியிருக்கிறான். –முரசொலி.

நீதி

ஒட்டுபோட கொடுக்கும் பணம் உன்னை ஏமாற்றி திண்றவன் கழிந்த மலம்.

:

 

குறிச்சொற்கள்:

வெறிப்பேச்சு பாஜக வேட்பாளர் கைது


ஒரிசா

மாநிலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவிஎச்பிபஜ்ரங்தள் உள்ளிட்ட ஆர் எஸ்எஸ் அமைப்பின் மதவெறி பரிவாரங்கள், கிறிஸ்தவ பழங்குடி சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்ட விழ்த்து விட்டன. அந்த வன்முறையை முன்னின்று நடத்தியவர்களுள் அசோக்சாகு மற்றும் மனோஜ் பிரதான் போன்ற விஎச்பி மற்றும் பாஜக நிர்வாகிகளும் அடங்குவர்.

கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை ஏவியும், அவர்களது வீடுகள், குடிசைகள், தேவாலயங்களை எரித்து நாசமாக்கியும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி கிறிஸ்தவ பழங்குடி மக்களை அவர்களது உறைவிடங்களிலிருந்து விரட்டியடித்தும் கொடுமைகள் புரிந்த மதவெறியர்களை தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது பாஜக.

பெரும் வன்முறை நடத்தப்பட்ட காந்தமால் தொகுதியில் பாஜக மதவெறியர் அசோக் சாகு, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார்.

கடந்த ஏப்ரல் 5-ம்தேதி காந்தமால் தொகுதியில் உள்ள ரெய்க்கியா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர், வன்முறையை தூண்டும் விதத்திலும், சிறுபான்மை மக்களை மிரட்டும் விதத்திலும் பேசினார். இதுதொடர்பாக, இவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.

மதவெறியைத் தூண்டுதல், பொது இடத்தில் இழிவாக நடந்து கொள்ளுதல், இதர பகுதி மக்களை திட்டமிட்டு ஆத்திரமூட்டுதல், கலவரம் விளைவிக்கும் நோக்கோடு பேசுதல் ஆகிய குற்றங்களுக்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505, 295, 153, 125 ஆகிய பிரிவுகளின் கீழ் காந்தமால் மாவட்ட காவல் துறை, அசோக் சாகு மீது வழக்குகள் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, அசோக் சாகு தலைமறை வாகிவிட்டார். நயாகர் மாவட்டத்தில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காந்தமால் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து, பாஜக வேட்பாளர் அசோக் சாகுவை தேடி வந்தனர்.இந்நிலையில், செவ்வாயன்று புல்பானி நகரில் அசோக் சாகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அசோக் சாகு மட்டுமின்றி ஒரிசாவில் ஜி.உதயகிரி மக்களவை தொகுதியில் பாஜக, மனோஜ் பிரதான் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவரும் காந்தமாலில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதான வழக்குகளுக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்சமயம் சிறையில் இருக்கிறார். இவர் ஒரு அப்பட்டமான குற்றவாளி என்று தெரிந்தும், பாஜக இவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

 

குறிச்சொற்கள்: