கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் மேற்கொண்டபோது மத்திய அரசு பெருமளவு பாதுகாப்புக் கருவிகளை வாங்கியது. இந்த கருவிகளை கொள் முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது. இந்த கார்கில் ஆயுத கொள் முதல் ஊழல் தொடர்பாக கடந்த 12ஆண்டுகளாக மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகள் யார் என்பதும் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் தெரியவில்லை.
கார்கில் ஊழல் குறித்து மத்திய அரசு எந்தவித நட வடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிமன்றத்தில் சட்ட உதவி அளிக்கும் நிபுணர்களாக உள்ள மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி சுட்டிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் மத்திய அரசை கண்டித்து கூறுகையில், இந்த வழக்கில் நாங்கள் மிகக் கடுமையாக இருக்க விரும்பவில்லை. ஆனால் இது போன்ற அமைதியாக செல்ல முடியாது என எச்சரித்தது. மத்திய அரசின் நட வடிக்கை எங்களுக்கு திருப்தி தரவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கார்கில் ஊழல் தொடர்பாக அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் உறுதி இல்லாத நிலை விவரத்தை திவேதி சமர்ப்பித்தார்.
கார்கில் போரின்போது ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்கப் பட்டன. இந்தக் கொள்முதலின் போது ஏராளமான குறைபாடுகள் இருப்பதை தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) தனது அறிக்கையில் குறிப்பிட்டது இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் சிறிது நேரம் விசாரணை செய்த பின்னர், விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
பாஜக கூட்டணி அரசு ஆட்சியின் போது கார்கில் போரான ‘விஜய்’ நடவடிக்கைக்காக பாதுகாப்பு ஆயு தங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்தக் கொள் முதலில் நடந்த பெரும் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. 35 விவகாரங்களில் குறைபாடு இருப்பதை சிஏஜி கண்டு பிடித்தது. இருப்பினம் பாதுகாப்புத் துறை 28 விவகாரங்களில் உரிய ஆதாரம் இல்லை என ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. பாதுகாப்புத் துறை நட வடிக்கைக்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது
கார்கில் ஊழல் – இதுவரை ஒரு குற்றவாளி கூட கைது இல்லை
22
நவ்