RSS

கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவை

22 பிப்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
ஒரு சுற்று போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள் தமிழக முதல்வரும், மருத்துவத் துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஏற்கனவே, உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி பள்ளிப் படிப்பை முடிந்த பிறகு நாலரை ஆண்டு காலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம்(எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின் படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் – ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக்கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.
கிராமப் புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்பவர்கள் “சமூகத்தின் எதிரி” என்று அன்புமணியும் அவரது குடும்ப கட்சி தலைவர் ராமதாசும் பேசி வருகின்றனர். உண்மை அதுவல்ல சற்றுக் கவனத்தோடு பார்த்தால் நான்கு அறிய முடியும். இது கிராமப் புற ஏழை மக்களை ஏமாற்றும் வேலை. எப்படி, ஒரு நான்கு மாதங்களில் கிராம புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராம புறமக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்! ஆனால், கிராமப் புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம புற சேவை செய்ய முடியும்? மருத்துவமனைகளில் காலியாக உள்ள பனியிடங்களை உரிய மருத்துவர்களை நியமிக்காமல் தற்காகமாக பயிற்சி மருத்துவரை நியமிப்பதன் மூலம் நிரந்தரமாக மருத்துவரை மருத்துவமனையில் நியமிக்க தேவையில்லை. அரசுக்கு செலவும் மிச்சம். மருத்துவரும் அரசாங்க வேலையில் ஒரு வருடம் மட்டுமே பணிபுரிவார். பின்பு அவர் வேலையை இந்து விடுவார். இதனால் அரசு மருத்துவம் அளிக்கும் கடமையில் இருந்து தவகிறது.
மேலும், இத் திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர் தரப்பில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. கல்வி கடன் பெற்று மருத்துவப் படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. உடனடியாக வேலைக்கு போகாவிட்டால் கடன் சுமை மேலும் ஏறுகிறது. பட்ட மேற்படிப்புக்கு செல்வதில் பிரச்சினை ஏற்படும். உரிய வயதில், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது. இவை எல்லாம் சொந்த பிரச்சனைகள். கல்வி கடன் அடைப்பதில் பிரச்சனை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும் படியும் எளிய தவனையாகும் படியும், உதவி தொகை அளிக்கும் படியும் கோரலாமே! மேலும் கட்டாய கிராமப்புற சேவை என்பது மருத்துவர்கள் கூறுவது போல ஒருவருடம் இல்லை வெறும் நான்கு மாதமே.இவர்களுக்கு திருமணம் செய்து கொள்வதை எது தட்டுகிறது என்பது தான் புரியவில்லை.
இன்று சமூகத்தில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் அரசு மருத்துவமனைகளில் நோயாளியிடம் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் பார்க்கவே கண் கூசுகிறது. அதிலும் கிராமப் புற மருத்துவமனைகளில் சொல்லவே வேண்டாம்.கிராமப்புற மருத்துவமனைகளில் பணியமர்தப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுபேற்க மறுப்பதும்,
பொறுப்பெற்ற பின் விலகுவதும் அல்லது அருகில் உள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதும் நாம் காண்கிறோம்.
இதைவிட கொடுமை ஸ்டான்லி மருத்துவர்களின் போராட்டம் உடல் உழைப்பை கேவலப்படுத்தும் விதமாக குப்பையை கூட்டுவது, மருத்துவமனையை சுத்தம், செய்வது என் தனது மேல்தட்டு வர்க்க திமிறை வெளிப்படுத்தியது மகா கேவலமான செயல். இதே ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி மூளை காய்ச்சலில் இறந்த போது தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடாமல் தங்கள் மருத்துவமனையை சுத்தம் செய்வேண்டியது தானே அப்போது எங்கே போனது இவர்கள் சமூக அக்கறை? இது கூட பரவால்லை சில மருத்துவ மாணவர்கள் ஒருபடி மேலே போய் தங்கள் ரத்தத்தை தானம் செய்தனர் இது தானம் செய்பவர்களை கொச்சை படுத்தியது. எத்தனையோ நோயாளிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் தங்கள் ரத்தத்தை தானம் செய்கின்றனர். இனி அவர்கள் எப்படி தானம் செய்வார்கள்? இப்படிப்பட்ட மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு செலவிடும் மக்கள் வரிப் பணம் சுமார் 10 லட்சத்திற்கு மேல். மக்களின் வரிப் பணத்தில் இளங்கலை பட்டம் பெற்று விட்டு சேவை செய்ய வெளிநாடு சென்றுவிடுவார்கள். ஆனால் நாங்கள் கிராமப் புற சேவை செய்ய தயார் என்ற பொய் கோஷம் போடுவார்கள். இவர்களுக்காகவே இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சட்டம் ஒன்றை இயற்ற தயாராக உள்ளது. அப்படி என்றால் நம் நாட்டவர் எவ்வளவு பேர் அங்கே இருப்பார்கள் என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் காலையில் அரசு மருத்துவராகவும் இருப்பார், மாலையில் தனியார் கிளினிக்கில் வேலை செய்வார். இன்னும் சொல்வதென்றால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தனியார் கிளினிக்கு வரசொல்லும் மருத்துவரும் உண்டு. சில மாநிலங்களில் ஒரு வருடமோ, இருவருடமோ கட்டாயமாக கிராமப் புற சேவை செய்யவேண்டும். அதனால் தான் தமிழ் நாட்டில் மட்டும் இப் போராட்டம் வெடித்தது.
மத்திய அரசு மருத்துவ துறைக்கு ஒதுக்கும் நீதி 1.3 % (மொத்த பட்ஜேடில்) மாநில அரசு 5.5%. இலங்கை அரசு கூட பொது சுகாதரத்திற்கு இந்தியாவை விட இரண்டு மடங்கு நிதி ஒதுக்கிறது. மருத்துவ பணியிடங்கள் பல காலியாகவே உள்ளன. பல மருத்துவமனைகளில் செவிலியர்கள் மட்டும் வேலை செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெறும் 4 மாதத்தில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் என்னத்த கிழித்து விட போகிறார்கள் .தமிழ் நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர்களில் சுமார் 70 % தனியார் துறையில் வேலை செய்கின்றனர். இவர்களில் பாதிப்பேர் அரசு மருத்துவராக பணிபுரிந்து உள்ளனர் என்பது அதிர்ச்சியான தகவல். இதில் சென்னையில் மட்டும் சுமார் 10,000 பேர் உள்ளனர். தமிழகம் முழுவது 1,590 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. (2005 ஆம் ஆண்டு ஆய்வு)
1991க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. 7வது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதும்மிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் எண்ணிக்கை 18,671 ஆகும். அது 8வது ஐந்தாண்டுத் திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால் 1997-2002க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களை மட்டும் உருவாக்கினார்கள். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்தியா முழுவதும் வெறும் 394 சுகாதார நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இது தான் நிலமை. இதை வைத்துக்கொண்டு தான் அனைவருக்கும் சுகாதாரம் வழங்க போகிறார் “அன்பு” மணி.
உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால்,வேலை உத்தரவாதம் அளித்து இளநிலைமருத்துவரிகளை மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் அதற்கு தகுந்தார் போல் வசிப்பிடம்,வாகன வசதி, போதிய மருந்துகள், மருத்துவ உபகாரங்கள், உதவியாளர்கள், செவிலியர்கள், படுக்கை போன்றவற்றை நியமிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பல தனியார் மருத்துவமனைகள் பணம் தின்னும் கழுகாக மாறிவருகின்றன. சட்ட விரோத கருச்சிதைவுகள் தொடங்கி உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்கு புறம்பான அத்தனை செயல்களும் நடக்கின்றன. பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களை பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரனங்கள் வரிச்சலுகை பெற்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவீதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்து இந்த சலுகைகள் பெற்றுள்ளன. அதே போல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்க்கொள்வதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் இலவசமாக செய்யப்படவேண்டும். எந்த ஒரு தனியார்
மருத்துவமனை இந்த வாக்குறுதியை நடைமுறை படுத்தியிருக்கிறதா? இது தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது பதில் அளித்த சுகாததரத்துறை இணை அமைச்சர் ” சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறையை மாநில அரசுகள் தான் உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
ஆக, உண்மையை சொல்ல இராமதாஸ்க்கும் துப்பு இல்லை, மருத்துவ மாணவர்களுக்கும் துப்பு இல்லை.

Advertisements
 
1 பின்னூட்டம்

Posted by மேல் பிப்ரவரி 22, 2008 in M.B.B.S

 

One response to “கிராமப் புறக் கட்டாய மருத்துவ சேவை

  1. மருத்துவர்

    பிப்ரவரி 27, 2008 at 9:53 முப

    //ஆக, உண்மையை சொல்ல இராமதாஸ்க்கும் துப்பு இல்லை, மருத்துவ மாணவர்களுக்கும் துப்பு இல்லை.//
    நெத்தியடி

     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: