மத்திய அரசின் பித்தலாட்டாம்

ஆகஸ்ட் 3, 2009

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என முரசொலி முந்துவது ஏன்?

கோப்பு வகை: அரசியல், ஜக்கி வாசுதேவ், டாலர், பகுக்கப்படாதது — lightink @ 1:02 பிற்பகல்

மதிப்பெண் சான்றிதழ் மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி மருத்துவர் மற்றும் அவரது மகனுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை, மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் நிர்பந்தித்தது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 180 உறுப்பினர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டுகிற அளவுக்கு செல்வாக்குள்ள அந்த மகா மந்திரி யார்? என்று அந்த மனுவில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.

ஆனாலும்எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக முரசொலி ஏடு முந்திக்கொண்டு பெட்டிச் செய்தி ஒன்றை எழுதி கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடும் கம்யூனிஸ்ட்டுகள் என்று தலைப்பிட்டு (2.8.2009) கேரளத்தில் பினராயி விஜயனுக்கு ஒரு நீதி, நீதிபதியை மிரட்டிய மந்திரிக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளத்தில் பினராயி விஜயன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரசாரால் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விரிவான பதிலை பலமுறை தெரிவித்தபோதும், அபாண்டமான குற்றச் சாட்டை அடைகாத்து பொய்க்குஞ்சுகளை அவ்வப்போது பொரித்து வருகிறது முரசொலி ஏடு.

பினராயி விஜயன் ஊழல் செய்தார் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரி-உயர்நீதிமன்றம்-சிபிஐ விசாரணைக்குழு-ஆளுநர் என அனைத்துத் தரப்பும் அடித்துச் சொல்லி விட்டதாக அடித்து விடுகிறது முரசொலி.

மின்திட்ட புனரமைப்பு தொடர்பாக லாவாலின் என்ற கனடா நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது கேரளத்தில் காங்கிரசார் ஆட்சியில் இருந்தபோதுதான். பின்னர் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தத் துணை ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக காங்கிரஸ் அரசினாலேயே மாநில அரசின் கண்காணிப்பு (லஞ்ச ஒழிப்பு) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது பினராயி விஜயன் தரப்பில் எந்தத் தவறும் நேரிடவில்லை என அதன் இயக்குநர் அறிக்கை தந்தார். இந்த ஒரேகுற்றத்திற்காக அந்த இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

மத்திய புலனாய்வுத்துறை கூட தன்னுடைய அறிக்கையில் எந்த இடத்திலும் பினராயி விஜயன் பணமோ சொந்த ஆதாயமோ பெற்றதாக குறிப்பிடவில்லை.

பினராயி விஜயன் மீது வழக்குத்தொடர்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதன் அடிப்படையில், மாநில அரசும் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டியதில்லை என ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் காங்கிரசின் கைப்பாவையான ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்து, மாநிலத் தலைமை வழக்கறிஞரின் கருத்தையும் புறக்கணித்து, வழக்கு தொடர அனுமதித்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக்கூட ஆளுநர் கலந்தாலோசனை செய்யவில்லை. யாரோ ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஆலோசனை பெற்றதாக கேரள ஆளுநர் கூறினார். அவரின் பெயரை தெரிவிக்கக்கூட ஆளுநர் தயாராக இல்லை.

இந்நிலையில் இந்த பொய்வழக்கை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சந்திப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக அறிவித்திருக்கிறது.

இதுதான் முரசொலி நீட்டிமுழக்கும் ஊழல் வழக்கின் சுருக்கம்.

ஆளுநரே கூறிவிட்டார், அதன் பிறகு என்ன என்று முரசொலி முழங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறனின் கருத்தோவியத்தை முரசொலி ஏடு மறுபதிப்பு செய்து வருகிறது. இதில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசின் அதிகாரங்கள் ஆட்டுக்குத்தாடி என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட ஆளுநரால் எவ்வாறு வெட்டிச்சுருக்கப்படுகிறது என்று விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.

சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் காங்கிரசாரின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு கலைக்கப்பட்ட தருணத்தை தவிர, மற்ற முறையெல்லாம் ஆளுநரின் அறிக்கையைப் பெற்றே மாநில அரசு கலைக்கப்பட்டது. அப்போது அதை திமுக மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியும் கண்டித்தது. ஆளுநர் கூறி விட்டால் அதற்கு அப்பீலே இல்லை என்று திமுக தனது நிலையை இப்போது மாற்றிக் கொண்டதா? மாநில சுயாட்சி கோரிக்கையை புதைத்து மலர் வளையம் வைத்துவிட்டார்களா?

இப்போது கேரள ஆளுநரின் முறையற்ற செயலை நியாயப்படுத்தி காங்கிரசாரோடு சேர்ந்து திமுக, “கோவிந்தா! கோவிந்தா!!” என்று குத்தாட்டம் போடுவது ஏன்?

முன்ஜாமீன் வழங்குமாறு தம்மை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது பகிரங்கமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்துதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை நம்பாமல் பிரதமரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் மனுக்கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறது முரசொலி.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மத்திய அமைச்சர் நேரடியாக பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளபோதும், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மத்திய அமைச்சர் பேசும் வகையில் செல்போனில் எண்களை அழுத்தி தொடர்பு கொண்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே, அதுகுறித்து விசாரிக்குமாறு கூறுவதில் என்ன தவறு?

உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை மட்டும் குரங்குபிடியாக பிடித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது ஏன் என்றும் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்துவதிலேயே குறியாக இருப்பது ஏன் என்றும் முரசொலி ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. 180 எம்.பி.க்கள் எந்த மத்திய மந்திரியையும் பெயர் குறிப்பிட்டு விசாரணை கோராத போது, முரசொலி இப்படி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த அப்பம் போல குதிப்பது ஏன்?

ஆப்பசைத்த குரங்காக இந்த விவகாரத்ல் மாட்டிக்கொண்டது யார்?

இதை பெரிதாகிவிடாமல் அமுக்கிவிட முயல்வது யார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.

மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் 180 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு என்பது வெறும் காகிதமல்ல. பிரதமர் தலையிட்டே ஆக வேண்டிய விவகாரம்.

நீதித்துறை விவகாரத்தில் அரசு எப்படி தலையிட முடியும் என்று மன்மோகன் சிங் ஆணித்தரமாக கூறிவிட்டாரே என்றும் முரசொலி ஏடு கூறியுள்ளது.

போபர்ஸ் வழக்கில் சோனியா காந்தி யின் உறவினர் குவாத்ரோச்சி, சிபிஐயினால் விடுவிக்கப்பட்டபோதுஒரு அப்பாவியை எவ்வளவு நாள்தான் சித்ரவதை செய்ய முடியும் என்று கேட்ட பெருந்தன்மை பெருந்தகையிடமிருந்து அப்போதைக்கு அந்த பதில்தான் வரும். ஆனால் 180 எம்.பிக்களின் கேள்விக்கு பிரதமர் என்ற முறையில் அவர் பதிலளித்துத்தான் ஆக வேண்டும்.

ஜூலை 28, 2009

புள்ளி விவர பித்தலாட்டங்கள்

காங்கிரஸ் கட்சியானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, கிலோ 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இப்போது ஆட்சிக்கும் வந்துவிட்டது. அத் தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைநோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ஆட்சியாளர்கள் இப்போது ஒரு புதிய சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு கடைப்பிடித்த தன் விளைவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாம்.

தேசிய மாதிரி சர்வேயானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை மாற்றியமைத்துவிட்டது. இதன்படி, 1993-94இல் 36 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 1999-2000இல் 26.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது ஐந்தாண்டுகளுக்குள் 10 சதவீதம் குறைந்து விட்டதாம். இது அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ள புதுச்சரடு. மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறு இருக்க முடியாது.

அரசாங்கம் அமைத்திட்ட அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மக்கள், அதாவது 83.6 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானமின்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த 20 ரூபாயில் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வில் என்ன செய்ய முடியும்?

பருப்பு, தானியங்கள், சமையல் எண் ணெய்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை என அனைத்துப் பொருள்களின் விலைகளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறைந்துவிட்டதாக, அரசு அறிவிக்கிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பதற்குக் காரணம், அரசு அளித்திட இருப்பதாகக் கூறும் சுகாதார இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெரும் பகுதி மக்கள் பெற முடியாமல் செய்வதற்கே யாகும்.

இந்தியாவில் ஏழைகளின் நிலைமை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களில் 42 சதவீதத்தினர் உலக அளவில் கணக்கிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக அது குறிப்பிட்டிருக்கிறது. அதன் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகத்தில் பட்டினியால் வாடுவோரில் 50 சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் உடல் நலத்திற்குத் தேவையான உணவு விகிதத்தில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உண்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும், ரத்தச் சோகையாலும் பீடிக்கப்பட்டவர்கள். கர்ப்பிணிப்பெண்களின் ரத்தச்சோகையால், பிறக்கும் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு, மேலே கூறியவாறு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கதைவிடுகிறது.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வறுமைக் கோட்டைக் கணக்கிடும்போது ஒரு நபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு 2400 ஆக இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு வந்தார்கள். அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது. அதாவது 2400 கலோரி உணவு உட்கொள்ள ஒருவருக்கு 567 ரூபாய் தேவைப்படும் என்றால், 2100 கலோரி உணவுக்கு 327 ரூபாய் போதுமானது. உண்மையில் இந்த 327 ரூபாய் கணக்கு என்பது 1868 கலோரி உணவுக்காகத்தான் வருகிறது.

இவ்வாறு புள்ளிவிவர பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை, ஏழை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தமிழக திமுக அரசு ஆதரித்து நிற்பது கேலிக் கூத்தாகும்

மார்ச் 26, 2009

தற்கொலை முயற்சி வெல்லட்டும்

இந்த

தேர்தலிலும் இந்துத்துவத்தையே முக்கியப் பிரச்சனையாக முன் வைப்பதெனத் தீர்மானித்து அதை எப்படிச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தது. அதை அகில இந்திய அளவில் மையவிவாதப் பொருளாக வருண்காந்தி மூலம் சாதித்துக் கொண்டு விட்டது. பாஜகவின் இந்துத்துவ பிரச்சாரத் திட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் இப்போது அதுவால் சாமர்த்தியமாக (அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கிறது) களத்திற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன.

மீண்டும் ராமர் கோவில் என்று சொல்லி வைத்திருந்தது. ஆனால் அது ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு வேளை தேர்தலின் போக்கில் என்ன செய்வார்களோ தெரியாது.

அடுத்ததாக, கிரிக்கெட். பொருளாதாரரீதியாக பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கணக்கு வழக்கின்றி லாபமும், அவை வீசி எறிகின்ற எலும்புத் துண்டிலேயே சில வீரர்கள், தொழிலதிபர்கள் ஆகிவிடக் கூடிய சம்பளமும் கிடைக்கக் கூடிய தொழில். ஊடகங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. பாஜகவிற்கு மதவெறி அரசியல் வளர்ப்பதற்கான ஒரு கருவி. தேசிய வெறியைக் கிளப்பிவிடுவதற்கான ஒரு வழி. பாஜகவும் ஊடகங்களும் இப்படியெல்லாம் செய்வது கிரிக்கெட்டின் பால் கோடிக்கணக்கான மக்கள் ஈர்க்கப் படுவதற்கும், அதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்குமான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது.

எனினும், இப்போது தேசிய வெறியையோ, மதவெறியையோ கிளப்ப வாய்ப்பில்லை. பல்வேறு நாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகளை வைத்துக் கொண்டு எப்படி இந்து மதவெறியைத் துாண்ட முடியும்? ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையைக் கிளப்ப முடியுமே?

தேர்தல் நேரத்தில் இந்தப் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை என்று மத்திய, மாநில அரசாங்கங்கள் தெரிவித்தன. போட்டியைத் தள்ளி வைக்குமாறு கோரின. முடியாது நாங்கள் வேறு நாட்டில் நடத்திக் கொள்கிறோம் என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு அடுத்தடுத்து நடக்கவிருக்கிற போட்டிகள் குறித்த பிரச்சனை மட்டுமின்றி, முக்கியமாக கோடிக்கணக்கில் விலை கொடுத்து வீரர்களை விலைக்கு வாங்கிவிட்டார்கள். வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டுவிட்டார்கள். போட்ட முதலையும், லாபத்தையும் எடுக்க வேண்டிய அவசரம்.

கேவலம் கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு வழங்கமுடியாது என்று மத்திய அரசாங்கம் சொல்வது உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் அது தோல்வியடைந்துள்ளதையே காட்டுகிறது என்கிறது பாஜக. 53 போட்டிகளையும் குஜராத்தில் நடத்துங்கள், நான் பாதுகாப்பு வழங்கத் தயார் என்று வீரவசனம் பேசுகிறார் நரேந்திர மோடி. சரி, சரி இங்கேயே நடக்கட்டும் என்று மத்திய அரசாங்கம் சொல்லட்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. இதன்மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள் போலும். அல்லது தேர்தல் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டால் அப்போதும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையைக் கிளப்பலாம் என்று எண்ணுகிறார்களோ என்னவோ? அல்லது போட்டிகளுக்கு பாதுகாப்புக்கு போலீஸ் அனுப்பப்படும்போது தேர்தல் பாதுகாப்பில் ஏற்படக் கூடிய பலவீனத்தைப் பயன்படுத்தி தேர்தல் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வெற்றி பெறலாம் என்று திட்டமிடுகிறார்களோ என்னவோ? இவற்றில் ஏதோ ஒன்றாகவோ அல்லது எல்லாமுமாகவோ இருக்கலாம்.

எப்படியாயினும் உள்நாட்டுப் பாது காப்புப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டார்கள். அடுத்தடுத்து இந்துத்துவத்தையே தன்னுடைய தேர்தல்கூச்சலாக முன் வைக்கிறது. ஏனெனில், அதனிடம் வேறு சரக்கு இல்லை. கடந்த தேர்தலில் தோற்றதற்கான காரணங்களில் இந்துத்துவமும் ஒன்று என்றபோதும் பாஜக இதைத்தான் செய்கிறது. ஒரிசாவில் இந்துத்துவத்தை செயல்படுத்தியதால் பிஜு ஜனதா தளத்தின் நட்பை இழந்தது. இது போன்ற காரணங்களுக்காக ஏற்கனவே பல நண்பர்களை இழந்தது. ஆனாலும், பாஜக இந்துத்துவத்தை விடுவதாக இல்லை. பாஜக தற்கொலைப் பாதையில் மிக வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லதுதான்

.

மார்ச் 23, 2009

இந்துத்துவாவின் பரிசோதனைக்களம் கர்நாடகா

கோப்பு வகை: அரசியல், இந்துதுவா, ஜக்கி வாசுதேவ் — lightink @ 1:20 பிற்பகல்

கடந்த

(16.3.09)

ஒன்பது மாதங்களாக, கர்நாடக மாநிலத்தின் கடலோர பிராந்தியங்களில்- மதவெறி வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள இந்தப் பகுதியின் வாக்காளர்கள் மத அடிப்படையில் துருவங்களாகி நிற்கும் தன்மை.

இதற்கான காரணங்களைத் தேடி எங்கும் போக வேண்டியதில்லை. மதவெறி கலவரங்கள் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள பகுதிதான் இது என்றாலும், மே 2008ல் கர்நாடகத்தில் முதன்முறையாக பாஜக அரசு அமைந்தபிறகு, வன்முறைகள் தீவிரமடைந்து ஒரு குறிப்பிட்ட வடிவம் எடுத்துள்ளன. சங்பரிவாரத்தின் தத்துவார்த்த செல்லப் பிள்ளைகளான பஜ்ரங்தளம், ஹிந்து விழிப்புணர்ச்சி இயக்கம் மற்றும் ஸ்ரீராம் சேனை ஆகிய இளைஞர் அமைப்புகள் புதுவிதமான தாக்குதல்களைத் தொடுக்கத் துவங்கியுள்ளன.

சிறுபான்மை மத நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டது, ஆகஸ்ட்-செப்டம்பர் 2008ல் உச்சத்திற்குச் சென்றது. மதச்சார்பற்ற கட்சிகள், கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி ஏற்படுத்திய நிர்பந்தம் காரணமாகத்தான் மாநில அரசு பிப்ரவரி 2009ல் நீதியரசர் பி.கே.சோமசேகரா தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்து கலவரங்களை விசாரிக்கப் பணித்துள்ளது.

கலாச்சார வேட்டையின் நூதன வடிவங்களில் இந்துத்துவா அமைப்புகள் இறங்கியிருப்பது அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களில் பலவும் வெகுஜன ஊடகங்களில் அரையும், குறையுமாகத் தான் பதிவு செய்யப்படுகின்றன. கலவரக் காரர்களை எதிர்த்துப் போராட சாதாரண மக்கள் முன்வருவதுமில்லை. இந்த அமைப்புகளின் வல்லமையைத் தட்டிக் கேட்க காவல்துறை திராணியற்றும், பல போது அவர்கள் பக்கமாக சாய்ந்து விடுவதுமே காரணம். மாநில அமைச்சர்கள் இத்தகைய சம்பவங்களை ஒரு பொருட்டாகவே கருதாத வகையிலேயே தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றன. (எடுத்துக்காட்டாக, ஜனவரி 24 மங்களூர் ரெஸ்டாரண்டில் ஸ்ரீராம் சேனை ஆட்கள் பெண்களை காட்டுத்தனமாகத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்த உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா, இத்தகைய கேளிக்கை விடுதி கலாச்சாரம் இந்திய பண்பாட்டிற்கு அந்நியமானது என்ற பீடிகை போட்டே சொன்னார்).

வன்முறை வெறியாட்டத்தில் இறங்குவோர் தாங்களாகவே அவற்றை ஒப்புக் கொள்வதுமங்களூர்பப் விஷயத்தில் முன்தகவல் கொடுத்து தொலைக்காட்சி ஊடகத்தை வரவழைத்திருந்தனர்-என்பதே அவர்களுக்கு பாஜக ஆட்சி எத்தனை அரவணைப்பை உறுதி செய்கிறது என்பதனை உணர்த்தும். மங்களூர்பப் வழக்கில், ஸ்ரீராம் சேனை தலைவன் பிரமோத் முத்தலிக் உள்பட சம்பந்தப் பட்டவர்களை காவல்துறை, சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்துத்தான் கைது செய்தது. அவர்களும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால், ‘கலாச்சாரக் காவலர்களாக இந்துத்துவா இளைஞர் அமைப்புகள் தாக்கும் பல சமயங்களில், அராஜகம் செய்தவர்களே தாக்குதலுக்கு உள்ளானவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துப்போய் அவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்து தரும் வேலை நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மிகவும் முன்னேறிய வட்டாரத்தில்தான், சகிப்புத்தன்மையற்ற இத்தகைய வெறித்தனம் வேரூன்றி வருகிறது. மனித வளர்ச்சிக் குறியீட்டு வரிசையில், கேரளத்திற்கு அடுத்தபடியான நிலையில், கர்நாடக மாநிலத்திற்குள் தட்சிண கன்னடாவும், உடுப்பியும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலுள்ள மாவட்டங்களாகும். இவ்விரண்டு மாவட்டங்களிலுமே, நாட்டின் தலைசிறந்த தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மங்களூர், கர்நாடகத்திலேயே தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நகரம்; அதுமட்டுமல்ல, மாநில வங்கித்துறை மையப் புள்ளியுமாகும்.

தட்சிண கன்னடாவில், 2001 விவரப்படி, மக்கள் தொகையில் எட்டு சதவீதமுள்ள கிறிஸ்தவர்கள் உயர்கல்வியில் முக்கிய இடம் வகிக்கிற, வெற்றிகரமானநன்கு ஒருங்கிணைந்த சமூகமாகத் திகழ்கின்றனர். இஸ்லாமியர்கள் 22 சதவீதம், இந்துக்கள் 68 சதவீதத்திற்குச் சற்று கூடுதலாக உள்ளனர். உயர்கல்வி மையங்கள் என்ற வகையில், தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்கள் நாடு முழுவதிலுமிருந்து பத்தாயிரக் கணக்கான மாணவர்களை ஈர்த்து வருகின்றன. அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும், உள்ளூரிலும் அன்றாடம் வீட்டிலிருந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும், விடுதிகளுக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயணம் செய்யுமளவு நன்றாகச் செயல்பட்டுவரும் பேருந்து போக்குவரத்து ஏற்பாட்டிற்குள் இந்துத் துவா விழிப்புக்குழுக்களின் கொடிய கரங்கள் ஊடுருவியுள்ளன. பஸ் பயணம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஓர் ஏற்பாடு. சாதாரணமாக அது, பயணம் செய்யும் மாணவரிடையே உள்ள பால், வர்க்க, மத மற்றும் மொழி பேதங்களைத் தகர்க்க வேண்டும். எனவே பேருந்துகள் விழிப்புக்குழுக்களின் கண்காணிப்பின் கீழ் வந்ததில் எந்த வியப்புமில்லை.

மோசமான ஜனவரி 24 ‘பப் நிகழ்வினை அடுத்து இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தன. பிப்ரவரி 6 அன்று, கேரள அரசியல்வாதி ஒருவரின் மகளும், அவரது நண்பரான இஸ்லாமியர் ஒருவரும் தாக்கப்பட்டனர். பிப்ரவரி 11 அன்று, பஜ்ரங் தளத்தின் நடவடிக்கையை அடுத்து சோகமயமான பின்விளைவுகள் ஏற்பட்டன. முல்கி தாலுகாவைச் சார்ந்த 14வயது பள்ளிச் சிறுமி, முஸ்லிம் பேருந்து நடத்துநர் ஒருவரை நட்பாக்கிக் கொண்டகுற்றத்திற்காகப் பொது மக்கள் எதிரில் அவமானத்திற்கு உள்ளாக நேர்ந்ததைத் தாங்கமாட்டாது தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தில், பஜ்ரங்தள குண்டர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா? ‘அவர்களை கைது செய்தால், அந்தப் பகுதியில் மதக் கலவரம் மூளக்கூடும் என்று மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் தொலைக்காட்சி சானலில் விளக்கம் தந்திருக்கிறார்.

மங்களூரிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் பஞ்சா கிராமத்தில், உள்ளூர் அரசுக் கல்லூரிக்கு வரும் முஸ்லிம் பெண்கள்பர்தா அணியக்கூடாது என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் கிராமக்கிளை தடை விதித்துள்ளது. இந்துத்துவா சக்திகள் நடத்தும் தாக்குதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு மாவட்ட காவல் துறை பாரபட்சமற்று செயல்படும் என்ற நம்பிக்கை கிஞ்சிற்றும் கிடையாது. மாநில ஆட்சியை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்குவதில் இதே காவல்துறை உற்சாகம் காட்டுகிறது. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக, மங்களூரிலிருந்து வெளிவரும்கரவாலி அலே இதழைக் கொண்டு வரும் சித்ரா பதிப்பகக்குழு தலைவர் பி.வி.சீதாராம் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. அவரது பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது; விநியோக ஏற்பாடு சீர்குலைக்கப்பட்டது; விற்பனையாளர்கள் தாக்கப்பட்டனர்; செய்தித்தாள்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்டன. அவர் கொடுத்த எந்தப் புகாரையும் காதில் போட்டுக் கொள்ளாத காவல்துறை அதிகாரிகள், மதப் பகைமையை மூட்டிவிட்டதாக அவருக்கு எதிராகப் பதிவாகியிருந்த எட்டு கிரிமினல் புகார்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தனர்.

சீதாராம் 2009 ஜனவரி 4ம் தேதி கைது செய்யப்பட்டு கைவிலங்குகளோடு உடுப்பி செசன்ஸ் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார். மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாகச் சாடியதோடு, வழக்குச் செலவுகளுக்காக ரூ.10,000/- நஷ்டஈடு கொடுத்தாக வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.

இந்திய அரசியல் அனுபவத்தில், மத ரீதியாகப் பிளவுபட்டு நிற்கும் வாக்காளர்களால் வகுப்புவாத கட்சிகளுக்குத்தான் நிரம்ப லாபம். கடலோர கர்நாடகம் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பது புலனாகிறது. மேற்குக் கடற்கரையின் இப்போதைய நிலைமைக்கும், அயோத்தி இயக்கம் விசிறிவிட்ட- 1991 தேர்தலுக்கு முந்தைய- உத்தரப்பிரதேச நிலைமைகளுக்கும் இடையே விபரீதமான ஒற்றுமைகள் உண்டு. தெற்கில் தங்களது விஸ்தரிப்புக்கான விசைப்பலகை கர்நாடக மாநிலம் என்று பாஜக சொன்னால், கடற்கரை பிராந்தியம் தீர்மானமாக அதன் தத்து வார்த்த பரிசோதனைக் களமாகும்.

நன்றிஹிண்டு நாளேடு

பெப்ரவரி 26, 2009

மோசடி சாமியார் சுதான்சு மகாராஜ்

இந்திய அரசின் வருமான வரித்துறை அவ்வப்போது முழித்துக் கொள்ளும். இதற்கு பல காரணம் உண்டு. பெரும்பாலும் இவை பழி வாங்கும் நோக்கத்ிற்காக ஆளும் அரசால் ஏவப்படும் ஏவல் நாய் போல் செயல்படுவது உண்டு. சில நேரம் தன்னை அறியாமல் கடமையை ஆற்றும். அப்படி கடமையை ஆற்றும் விஷயங்களை இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதாவது வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் நீங்கள் கீழே படிக்க போவது.

இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு தொழில் என்ன? வருமானம் என்ன? அது எங்கு இருந்து வருகிறது? இவர்கள் சொத்து என்ன? இவை எப்படி மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது? போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவதில்லை. “தான் இந்த உலகத்தை இரட்சிக்க வந்த கடவுள்என்று கூறிக்கொள்ளும் இவர்கள் மனிதன் உருவாக்கிய சட்டத்திற்க்கு கட்டுப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமியார் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வருமான வரித்துறை 2006 ஆம் ஆண்டே கண்டு பிடித்துள்ளது ஆனால் எவ்வளவு வரி ஏய்ப்பு என்ற விவரத்தை இது வரை வெளியிடவில்லை வருமான வரித்துறை. ஆனால், 16 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது என அம்பலப்படுத்துகிறது மெயில் டுடே நாளிதழ்.

34419671_1

மோசடி மன்னன்

பா.. ஆதரவு ஆன்மீக அமைப்பான விஸ்வ ஜாகுருதி மிஷன் 1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் என்று கூறிக் கொள்வது வழக்கம்.

மும்பையைச் சேர்ந்த மகாவீர் பிரசாத் என்ற தொழிலதிபர் இந்த அமைப்புக்கு 55 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்க்காக வருமான வரி சட்டத்தின் 80G பிரிவின் கீழ் சான்றிதழ்களையும் இவர் இந்த அமைப்பிலிருந்து பெற்றார். ஆனால், வரி விலக்குக்காக அவற்றை சமர்ப்பித்த போது, அவையனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இவர் அளித்த புகாரின் பேரில் டிச 31.2006 முதல் இந்த அமைப்பை தங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவந்தது வருமான வரித்துறை. இந்த ஆன்மீக அமைப்பு வைத்துள்ள வருமான வரிக்கணக்கு எண்ணே போலி என்ற அதிர்ச்சிதரும் மோசடி அம்பலமாகியுள்ளது. மோசடி செய்தற்க்காக அமைப்பின் பொருளாளரை 2007ஆம் ஆண்டே கைது செய்தது வருமான வரித்துறை.

இந்த விவகாரத்தை மெயில் டுடே அம்பலபடுத்தியவுடன் உடனே இந்த செய்தியை பிரசுரிக்கவேண்டாம் என இந்த அமைப்பின் போது செயலாளர் தேவ்ராஜ் கடாரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் பா... உடன் நெருங்கிய தொடர்புடையவர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த மோசடி சாமியார் உடன் நின்று போஸ் கொடுக்க பாஜக தலைவர்கள் தவறமாட்டார்கள். தற்போது பொருளாளரையை பலிகாடவாக மாற்றிவிடலாமா என்று மோசடி அமைப்பினார் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இது ஒன்றும் இவர்களுக்கு புதிது இல்லை. இது போன்ற அனுபவம் பல உண்டு பா...விற்க்கு.

Visit: http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=2422009

பெப்ரவரி 12, 2009

சார்லஸ் டார்வின்- 200

சார்லஸ் டார்வின்அந்த அசாத்தியமான மனிதர் பிறந்து 200 ஆண்டுகள் முடிந்துவிட்டதையொட்டி உலக அளவில் அவருக்கு புகழ்மாலை சூட்டும் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 12ம் நாள் நடைபெற இருக்கின்றன.

அவரை நியூட்டனுக்கு, ஐன்ஸ்டினுக்கு, கலிலியோவுக்கு ஈடாக புகழ்பாடி உலக விஞ்ஞானிகள் விழா எடுக்க இருக்கிறார்கள்.

டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மனித சிந்தனைக்கு ஒரு பெரும் ஒளியை வீசியது, மதகுருக்களுக்கு மருட்சியை, கோபத்தை உருவாக்கியது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பற்றி சனாதனவாதிகள் இரு நூற்றாண்டுகள் ஆன பின்னும் கூட சம்வாதம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டவன் ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் முதன் முதலாகப் படைத்து அவர்கள் மூலம் மனித இனத்தைப் பெருகச் செய்தான் என கிட்டத்தட்ட எல்லா மதங்களும் மூவாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்த, மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்த கோட்பாட்டை சார்லஸ் டார்வின் பரிணாம கோட்பாட்டின் மூலம் சுக்கு நூறாக உடைத்துவிட்டார். மனிதனும் மிருக இனத்தைச் சேர்ந்தவன் தான், அவனின் முன்னோர்கள் குரங்குகள்தான், பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து உதித்தவன்தான் மனிதன் என்பதை அரிய விஞ்ஞான ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவர். ஆகவே அவரை மத ஸ்தாபனம்நாத்திகர் எனப் பட்டம் சூட்டியது. அவர் மீது கடுமையான தூஷணைகள் வீசப்பட்டன. எதற்கும் அவர் அஞ்சவில்லை. ஓயாது ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருந்தார். அவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்தத்தில் பதினெட்டு நூல்களை எழுதித்தள்ளினார். அவர் கடைசியாக 1872 ஆம் ஆண்டு எழுதிய நூல்மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சி களை வெளியிடும் விதம் என்பதாகும். ஆனால் அவர் எழுதியஜீவராசிகளின் மூலம்’’ எனும் நூல் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த நூல், மிகப் பிரபல்யமாகிவிட்ட நூல். அந்த நூல் ஹிப்ரு, ஸ்பானிஷ், போலிஷ், ஜப்பான், பொஹிமியன் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயின. அந்த நூல் இங்கிலாந்தில் மட்டும் 5 ஆண்டு காலத்தில் பதினாயிரம் பிரதிகள் வரை விற்பனையாயிற்று என்றால் அதன் மகத்துவத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு இது.

அந்தப் புத்தகம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளிவந்தது. அந்த நூலில் டார்வின் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வின் மூலம் நடைபெறுவதை பல ஆதாரங்கள் கொடுத்து விளக்குகிறார். எந்த ஒரு ஜீவராசியும் இயற்கைச் சூழலுக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையென்றால் அவை அழிந்து போகும், அப்படி அழிந்து விட்ட ஜீவராசி கோடானு கோடி! அவையெல்லாம் அப்படி அழியாமல் போயிருந்தால் இந்த பூமியில் அவைகளைக் கொண்டிருக்க இடமே இருந்திருக்காது! குளிர், பனி, மழை, கொடிய வெயில், நீர், நிலம் எங்கெங்கே எந்த ஜீவராசி எந்த புற சூழ்நிலையில் இருக்கிறதோ, அந்தச் சூழலை ஏற்று அவை வாழ தங்களைத் தயாரித்துக் கொள்ள பலம் தேவை, மாற்றிக் கொள்ள முயற்சி தேவை! இல்லாது போனால் அழிவுதான் மிச்சம்.

அதோடு ஜீவராசிகள் ஒன்றுக்கொன்று போராடி எவை வெற்றி பெறுகிறதோ அது நிலைக்கும், பலவீனமானவை அழியும். அதாவது இயற்கை தேர்வில் பால் உறவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே இன விருத்தி செய்வதற்கான ஒரு தேர்வு முறை நடக்கிறது! தேவையான துணைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஆண்களுக்கிடையே பெரும்பாலும் போட்டியும், போராட்டமும் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் ஆண் தன் துணையைபெண்ணை தேடிக் கொள்கிறது, தன்னைப் போன்ற வலுவான வாரிசை உருவாக்க முடிகிறது, தோல்வியுறும் ஆண் தன் இனத்தை விருத்தி செய்யாமல் பின் தங்கி விடுகிறது.

ஆக டார்வின் பரிணாம கோட்பாடு கீழ்வரும் மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதைநவீன டார்வினியம் என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம், உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான்.

“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது என்கிற இவரின் தத்துவத்தை சில அறிவு ஜீவிகள் அவர் காலத்திலேயே கிண்டல் செய்தார்கள்.

வர்க்க சமுதாயத்தில், திறமை உள்ளவன் வளமாக மூலதனத்துக்குச் சொந்தக் காரனாக வாழ்கிறான், வக்கற்றவன் வறுமையில் வீழ்கிறான்இதுவும் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது தானே என்று கேட்டார்கள்?. மனிதனின் செயற்கை ஏற்பட்டால் ஏற்றப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை இப்படி வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் பாவப்பட்ட மக்களுக்காக எப்போதும் பரிதாபப்படும் குணம் கொண்டவர் டார்வின். அவரின் கப்பல் பயணத்தில் தென்அமெரிக்கா சென்ற போது, அக் காலக்கட்டத்தில் அங்கு நடைபெற்ற ஏழை மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் நொந்து போனார், தன் மனக் கசப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதேபோல் அவரின் இரண்டாவது புத்தகமானமனித பரம்பரை நூல் 1871ம் ஆண்டு வெளியானது. மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதுகிறார். நம் மூதாதையர் குரங்குகள் தான் என்று சொல்லுவதில் பெருமை அடைகிறார். கீழ் ஜீவராசியிலிருந்து மனிதன் எனும் உயர்ந்த ஜீவராசியை எட்டியதற்கு அடிப்படை பரிணாம வளர்ச்சியே என்கிறார். 25 ஆண்டுகளாக சதா நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டா லும் இதற்கான ஆய்வில் அவர் வெற்றி கண்டார்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரினமும் அந்த காலத்தில் ஏதோ ஒரு தோற்றத்திலிருந்து மாறி இப்போதுள்ள தோற்றத்தை அடைந்துள்ளன என்ற முடிவுக்கு வருகிறார். அதே போலத்தான் மனிதனும் கூட இன்றைய நிலையை அடைந்துள்ளான்.

உராங்குட்டன், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும், ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து, சீர் பெற்று, திருத்த முற்றுத் தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.

மனிதன் வலதுகால் அடியெடுத்து வைக்கும் போது அவனுடைய இடதுகை முன்னே செல்லுகிறது. வலது கை முன்னே வீசும் போது இடதுகால் அடி யெடுக்கிறது. குரங்கும் இதே ஸ்டைலில் தான் நடக்கிறது.

எல்லா ஜீவராசிகளும் உருவாவதற்கு முன்பாக நீரும், நிலமும் தழுவிக் கொள் ளும் கரைகளில் முதல் முதலாக உருவெடுத்த மூதாதையின் பெயர், அந்த உருவத்தின் பெயர்நீர்பாசிதான். ஜீவராசிக் கெல்லாம் மூலாதாரமாய் விளங்கியதும் அந்த நீர்பாசி தான். அது இன்றைய கொடி, செடி, மரங்களாகவும், மிருகமாகவும், மனித இனமாகவும் பரிணாமம் கொண்டது.

டார்வின் ஐந்தாண்டு காலம் அதாவது 1831ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி எச்.எம்.எஸ். பீகில் என்ற கப்பலில் பயணம் செய்து தென் அமெரிக்கா மற்றும் தென்கடல் பகுதிகளில் ஆராய்ச்சி செய்தார். உயிரியல், நிலஇயல் பற்றி ஆராய்ச்சி செய்தார். தாவரங்கள், பிராணிகள், பறவைகள், பாறைகள்என அவற்றைப் பற்றி பல விவரங்களைச் சேகரித்தது, அவரின் உச்சகட்ட பரிணாம தத்துவக் கோட்பாட்டுக்கு உதவி புரிந்தது.

அவரின் இந்த வினோதக் கண்டு பிடிப்பு பொருண்மைவாதிகளுக்கு, கடவுள் மறுப்பாளர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு தத்துவ ஆயுதமாகக் கிடைத்தது. ஆனால் டார்வின் நாஸ்திகர் அல்லர். ஆனால் ஆஸ்திகர்கள் அவரை அதிகமாக வெறுத்தார்கள். இது ஒரு வினோதம் தான். கிறிஸ்தவ மதத்தைத் துறந்து விட்டார். அவர் தன்னை அறியொணாமைக் கொள்கையாளர் என்றார். அப்படியானால் அவரின் மதக் கொள்கை தான் என்ன? அவர் மதகுருவாக ஆக மதக் கல்வி படிக்கச் சென்றவர்! ஆனால் மதக் கல்வி பிடிக்காது திரும்பி வந்து விட்டார். கடைசியாக எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டமும், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் பட்டமும் பெற்றார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டு பிடிப்பான பரிணாமத் தத்துவத்துக்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வி.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறுவகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்.

மனித இன மூதாதையரின் முகவரியை உலகத்துக்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882 ஏப்ரல் 19ம் தேதி அடங்கிப் போனார்.

லண்டனில் விஞ்ஞானிகளின் கார்னர் என்று சொல்லப்படும் இடத்தில் உள்ள இடுகாட்டில் விஞ்ஞானிகள் புதைக்கப்படும் வெஸ்ட் மினிஸ்டர் அப்பீ எனும் இடத்தில் நியூட்டனின் கல்லறைக்கு சில அடிகள் தள்ளியும், வானஇயல் விஞ்ஞானி சர்ஜான் எர்ச்செட் கல்லறையின் அருகிலும் டார்வின் புதைக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான செய்தியே. அதற்காக அவருடைய நெருங்கிய விஞ்ஞான நண்பர்கள் இதற்காகப் போராடித்தான் அந்த சலுகை பெற்றார்கள் என்ற தகவலும் உண்டு!

பெப்ரவரி 3, 2009

பார்ப்பனத் திமிரை, ஆணவத்தை ஒழிக்க வேண்டாமா?

தில்லைக் கோவிலில் தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்திவரும் பின்னணியில் 1987ம் ஆண்டு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. அதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம் அந்த நியமனம் தொடர்பாக மறுஆய்வு நடத்த ஆணையிட்டது. அதன்படி மறு ஆய்வு மேற்கொண்ட அரசின் இந்து அறநிலையத் துறை ஆணையர், அந்த நியமனம் சரியானதே என்று அறிவித்தார். தீட்சிதர்கள் அதை எதிர்த்தும் முறையீடு செய்தனர்.

நீதிமன்ற ஆணையின் படி மறுஆய்வு செய்த அரசுச் செயலரும், நிர்வாக அதிகாரி நியமனம் சரியான நடவடிக்கையே என்று உறுதிப் படுத்தினார். இப்படியே 2006ம் ஆண்டு வரையில் அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே பிரச்சனை அலைபாய்ந்து வந்தது. 2006ல் தீட்சிதர்கள் மறு முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு, சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடுவதற்கான போராட்டம் நடத்தி வரும் ஆறுமுகசாமி கோரிக்கை விடுத்தார். அவர் சார்பில் மனித உரிமைக்கழகம் வழக்கை நடத்தியது. இக்கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜூ அரசு நியமனத்திற்கு ஆதரவாக வாதாடினார்.

திங்களன்று வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டது செல்லும் என்று கூறி, ஒருவார காலத்திற்குள் அதிகாரியிடம் ஆலய நிர்வாகத்தை தீட்சிதர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த நீதிபதி, அதில் தீர்ப்பு வரைமுறையில் அதிகாரி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தீட்சிதர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார்.

இதன்படி ஒரு வார காலத்திற்குள் சிதம்பரம் கோவிலின் நிர்வாகம் அரசு அதிகாரியின் பொறுப்பில் வருகிறது.

உண்மை

தில்லை நடராசன் கோயில் சொத்துக்கள் அனைத்தும் தீட்சதப் பார்ப்பனர்களின் பெயர்களிலே உள்ளன. நடராசன் கோயில் பெயரில் எந்த சொத்தும் கிடையாது என்பது அதிர்ச்சியான தகவல். தில்லை நடராசனுக்கு சொந்தமான நகைகள், நடராசனுக்கு கட்டப்படும் ஆடை கூட நடராசன் கோயில் பெயரில் கிடையாது.பார்ப்பன தீட்சதர்களின் குடும்பங்கள் பெயரில் சுமார் 1700 ஏக்கர் நிலம் எழுதப்பட்டு, பரம்பரை பரம்பரையாக அவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. கோயில்களை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டபோதுதில்லை நடராஜன் கோயில் பெயரில் எந்த சொத்தும் இல்லை என்பதால், அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை. ஆனால், தில்லை நடராசன் கோயிலுக்குள்ளேயே இருக்கும் இந்த சிறிய பெருமாள் கோயில், அறநிலையத்துறையின் கீழ் இருக்கிறது.

இப்போது அரசு கையில் கோவில் நிர்வாகம் சொல்லும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும்.அப்போது இந்த பார்ப்பணின் பித்தலாட்டங்கள் வெளிவரும்.

December 29, 2008

அறுவடையைத் துவக்கியது அமெரிக்கா!

கோப்பு வகை: அரசியல், சத்குரு ஜக்கி வாசுத, ஜக்கி வாசுதேவ், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 4:39 பிற்பகல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அச்சாரம் போடப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் நடைமுறைக்கு வரும் பல்வேறு உடன்பாடுகளின் பலன்களை அமெரிக்கா அனுபவிக்கத் துவங்கியுள்ளளது. அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டதால் அணுஉலைகளை இந்தியாவின் தலையில் கட்ட பல குழுக்கள் வந்துபோய்க் கொண்டிருக்கின்றன. இந்திய-அமெரிக்க முதலாளிகள் சங்கம் சார்பில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு துறைகளைத் திறந்துவிடும் வேலைகளில் மன்மோகன்சிங் அரசு மும்முரமாக இருக்கிறது. காப்பீட்டுத்துறை மற்றும் வங்கித்துறைகளில் அன்னியர்களின் கைகள் மேலோங்கச் செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி அமெரிக்காவும், அந்நாட்டின் பெரு நிறுவனங்களும் தங்கள் சுமையை ஏற்ற வளரும் நாடுகளை சுமைதாங்கிகளாக மாற்ற முயல்கின்றன. தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் மேலாண்மைக்கு எதிராகத் திரும்பியுள்ளதால், ஆயுத விற்பனையை அங்கு முன்பு போல் செய்ய முடியவில்லை. மாற்று ஏற்பாடாக தென் ஆசியாவின் பக்கம் தனது கவனத்தை அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் திருப்பியுள்ளன. மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி அமெரிக்காவுக்கு உதவும் வேலையில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தியக் கடல் பகுதியைக் கண்காணிக்க அமெரிக்காவிடமிருந்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இந்த விமானங்களுக்காக 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயை தாரை வார்க்கப்போகிறார்கள்.

நீளமான கடற்பகுதியை கண்காணிக்கும் சக்தியைக் கொண்ட எட்டு போயிங் பி-81 ரக விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் அதிவேகமாக முடித்துள்ளார்கள். ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டிருந்த டுபோலெவ்-142எம் ரக விமானங்களின் பணியை இந்த அமெரிக்க விமானங்கள் செய்யவிருக்கின்றன. ஆனால் பராமரிப்பு அல்லது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் சரி செய்வது ஆகிய பணிகளுக்கு முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனத்தையே நம்பியிருக்க வேண்டும். ரஷ்ய விமானங்கள் வாங்கப்பட்டபோது உள்நாட்டில் உள்ளவர்களுக்கு பராமரிப்புக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன. இதோடு மேலும் சில சிறிய வகை விமானங்களையும் அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2002 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போது போடப்பட்ட 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரேடார்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் துவங்கி, கடந்த ஆண்டு பழைய கப்பலான யு.எஸ்.எஸ்.டிரென்டனை வாங்கியது வரை, ஒப்பந்தங்களை குறித்த காலத்தில் முடிப்பது என்பது அமெரிக்காவின் வழக்கமாக இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடந்துகொள்வதும் இல்லை. இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக மூன்று பி-3சி ஓரியான் ரக விமானங்களை அமெரிக்கா தயார் செய்தது. ஆனால் இந்தியா மறுத்து விட்டதால் பாகிஸ்தான் தலையில் கட்டியது. பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்குவதற்காக பணமில்லாததால் அதற்கான கடனையும் அமெரிக்காவே வழங்கியது. இரு நாடுகளுக்கிடையில் உள்ள பதற்றமான நிலையைப் பயன்படுத்தி இந்தியாவிடம் ஆயுதங்களை விற்க அமெரிக்கா தீவிரமாகி உள்ளது.

இந்திய-பாக். பதற்றத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அமெரிக்கா, ஆப்கனில் தனது நிலையை பலப்படுத்திக் கொள்ள போதை மருந்துகளை நாடியுள்ளது. அந்நாட்டில் உள்ள பல்வேறு குழுக்களின் தலைவர்களுக்கு போதை மருந்துகளைத் தந்து அவர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வந்துள்ளார்கள். இதில் பாலுணர்வைத் தூண்டும் வயாக்ராவும் அடங்கும் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி கூறுகிறது. இந்த வேலைகளைச் செய்யும் பொறுப்பு அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்களை நமது பக்கம் இழுப்பதற்காக எதையும் செய்யலாம் என்று அமெரிக்க அரசு கூறியுள்ளதாக ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த முன்னாள் சிஐஏ உளவாளி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகிறார்.

December 17, 2008

அமெரிக்காவிடமிருந்து கற்க வேண்டியது என்ன?

கோப்பு வகை: அரசியல், ஜக்கி வாசுதேவ், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 8:19 மு.பகல்

மும்பையில் நடந்த மிகக் கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதம் குறித்த பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன. தெரிவிக்கப்படும் கருத்துக்களில் தீவிரவாதத்தை எதிர் கொள்வதில் அமெரிக்காவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் மிகவும் ஆபத்தானது. ‘அமெரிக்காவை பாருங்கள்-9/11க்கு பிறகு மற்றொரு தாக்குதல் நடந்துள்ளதா?’ என்கிறார்கள் சிலர். அமெரிக்காவிடமிருந்து கற்க வேண்டியுள்ளது என்பது உண்மைதான். ஏனென்றால், அமெரிக்கா புரிந்து வரும் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டியுள்ளது.

9/11 உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்த பிறகு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ தொடுத்திட அமெரிக்கா முடிவு செய்தது. அந்த தாக்குதல் சம்பவத்தில் நேரடி தொடர்பு ஏதுமற்ற இராக் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரில் 10 லட்சம் உயிர்கள் சூறையாடப்பட்டுள்ளன. இராக்கிலும் ஆப்கானிலும் அமெரிக்க ராணுவத்தினர் 5000 பேர் பலியாகியுள்ளனர். மிகவும் ஏழ்மையான ஆப்கான் நாடு போரினால் மேலும் சிதறுண்டு சீரழிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இராக்கில் தங்களது உடமைகளை இழந்து இடம் பெயர்ந்து தவித்து வருகின்றனர். தினந்தோறும் இராக்கில் ஆயிரக்கணக்கான மக்களும் ஆப்கானில் நூற்றுக்கணக்கான மக்களும் போரினால் மடிந்து வருகின்றனர்.

3 லட்சம் கோடி டாலர் யுத்தம்…

இராக் மீதான யுத்தத்திற்கு மூன்று லட்சம் கோடி டாலர் அமெரிக்கா செலவிட்டுள்ளது என்கிறார் நோபல்பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிஸ். இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் மூன்று மடங்காகும். இராக் நாட்டில் ‘பேரழிவு ஆயுதங்கள்’ பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் 9/11 தாக்குதலில் இராக்கிற்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவின் ராணுவ அத்துமீறலுக்கு மையமான காரணமாக சொல்லப்பட்ட இந்த வாதங்கள் தவறானவை என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக் காவின் இந்த யுத்த வெறியினால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் வெட்டி சுருக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 11 பில்லியன் டாலர். இது இராக் மற்றும் ஆப்கான் மீதான அத்துமீறல் போருக்கு அமெரிக்கா ஒருநாள் செலவிடும் தொகையாகும்.

இராக் மீது போர் தொடுக்கப்பட்ட மார்ச் 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக 6,54,965 அப்பாவி இராக் நாட்டு மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க நாட்டு பல்கலைக் கழகம் நடத்திய ‘ஆய்வுகள்’ தெரிவிக்கின்றன. ஆயிரம் பேருக்கு 5.5 என்று இருந்த இறப்பு சதவீதம், 2006க்கு பிறகு 13.3 ஆக உயர்ந்தது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று தலைப்பிட்டு நடக்கின்ற அமெரிக்க ராணுவ ஆதிக்கத்தில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்கிறது. மத அடிப்படைவாதம் அது வரை காலூன்ற அனுமதிக்கப்படாத இராக்கில், இன்று பயங்கரவாத குழுக்கள் நாடெங்கிலும் முகாமிட்டுள்ளன. மத அடிப்படைவாதத்திற்கு புதிய ஆட்களை திரட்டும் வளமான களமாக மாறியுள்ளது இராக். அமெரிக்காவின் பெரு நிறுவனங்கள் தவிர 9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா தொடுத்துள்ள பதில் நடவடிக்கையினால் ஆதாயம் அடைந்துள்ளது ‘அல்கொய்தா’தான். இந்த நடவடிக்கைகள் ‘பயங்கரவ’தத்திற்கு எதிரான போருக்கு முன்பைவிட உலகத்தை பல மடங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்தியுள்ளது.

பல காலமாக அமெரிக்காவின் மிக விசுவாசியான கூட்டாளியான பாகிஸ்தானின் பல பகுதிகளின் மீது அவ்வப்போது அமெரிக்கா குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில் அந்நாட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இதே அணுகுமுறையை தீவிரப்படுத்தும் விதமாக அறிவிப்புகளை செய்து வருகிறார். இந்த அணுகுமுறையினால் பாதிக்கப்படும் மக்கள் மத்தியில் அடிப்படைவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு ஏற்படுகிறது.

பல பத்தாண்டுகளாக ஆப்கான் மீதான அமெரிக்க ராணுவ சாகசங்களுக்கு துணை நின்ற பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள கைமாறு இதுதான். பாகிஸ்தான் இன்று சந்திக்கும் பல சோதனைகளுக்கு காரணமாக விளங்கும் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளத்தான் நமது நாட்டிலும் சிலர் துடிக்கின்றனர். பாகிஸ்தானின் இந்த நிலைமை இந்தியாவை பாதித்து வருகிறது. அடிப்படைவாதம் தலைதூக்கும்போது அதிகமான தீவிரவாதத்தை தூண்டுகிறது. இது எல்லையின் இருபுறமும் நடந்து வருகிறது.

அமெரிக்காவின் எதிர் நடவடிக்கை களிலிருந்து பத்திரிகைகளும் பலவற்றை கற்க வேண்டியுள்ளது. தற்போது அதிபர் புஷ் மக்கள் ஆதரவை இழந்து நிற்பது குறித்தும், ராணுவக் கொள்கைகளை எதிர்த்தும் எழுதுகிற அதே பத்திரிகைகள்தான் யுத்தத்திற்காக நியாயம் கற்பிக்கப்பட்ட பேரழிவு ஆயுதங்களின் அபாயத்தை பெரிதாக்கி மக்கள் மத்தியில் சித்தரிக்க உதவின. அமெரிக்கா சந்திக்க நேர்ந்திட்ட அனைத்திற்கும் அந்நியசக்திகளே காரணம் என்ற மாயையை உரு வாக்கின. அதே பத்திரிகைகள் இன்று இந்தியாவிற்கு ஆலோசனை வழங்குகின்றன. ‘இந்தியா தனது மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தவறுகளை பரிசீலிக்க வேண்டிய நேரமிது’ என்கிறது நியூ யார்க் டைம்ஸ்

அமெரிக்காவிலும் 9/11 தாக்குதலுக்குப் பின்பு உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிவதை நாம் கண்டோம். அங்குள்ள சீக்கியர்கள் மீது வன்முறையாட்டம் நடந்தது. தலைப்பாகை கட்டியவர்கள், தாடி வளர்ப்பவர்கள் மீது பல காலமாக வளர்க்கப்பட்டு வந்த துவேசத்தை சிலர் தீர்த்துக் கொண்டனர். சீக்கிய மக்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டன. ஆலயங்கள் சூறையாடப்பட்டன. கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர். ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டது உட்பட நடந்தது.

அமெரிக்காவின் இந்த பதிலைத்தான் நாமும் பின்பற்ற வேண்டுமா?

புதைக்கப்பட்ட சமூக நீதி…

அமெரிக்க பதில் நடவடிக்கைகளின் ஒரு முக்கிய சின்னமான கவுதானாமோ சிறைச்சாலையிலிருந்து பல வருட துன்புறுத்தலுக்கு பிறகு நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு சிலர் விடுவிக்கப்படுகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் பதிலின் ஒரு அங்கமான இந்த அநீதி மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. எதிர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமெரிக்க மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் சமூக சுதந்திரம் வரையறுக்கப்பட்டது. ‘பாட்ரியாட் சட்டம்’ இதன் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் வெறுக்கப்படுகின்ற மக்கள் ஆதரவற்ற அதிபராக புஷ் பரிணமித்துள்ளார்.

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு வலுவான, விரைவான எதிர் நடவடிக்கை மிகவும் அவசியம். குற்றம் இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். நமது உளவு ஸ்தாபனங்கள் சீரமைக்கப்பட்டு மேலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக தீவிரவாத தாக்குதல்கள் தொடுப்பவர்களின் நோக்கங்கள் நிறைவடையாமல் செய்வதே இவை அனைத்திலும் முக்கிய மானதாகும். மும்பையின் மக்கள் சமூகம் மத, இன ரீதியாக பிளவுபடுவதை தடுத்திட வேண்டும். சாதாரண மக்களின் உயிருக்கு பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். சமூகத்தின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை ஒடுக்குவதும் எதிர் நடவடிக்கைகளுக்கு உதவும் என்ற பார்வை தவறானது. ராணுவ வலிமையை மிகைப்படுத்தி, போலியான நாட்டுப் பற்றை ஊக்குவிப்பதை துறந்து, நமது அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நேரமிது. குறிப்பாக மத மோதல்களை தூண்டுபவர்கள் எந்த மதத்தவராயினும் அவர்களை ஒன்று பட்டு வலுவாக எதிர்த்திட வேண்டும்.

நவம்பர் 24, 2008

மனிதகுலத்தின் தோற்றம் புத்தகம் வெளியீடு இன்று உடன் 150 ஆண்டு முடிவடைந்து விட்டது

darwin1

உயிர் வர்க்கங்களின் தோற்றம் புத்தகம் வெளியீடு இன்று உடன் 150 ஆண்டு முடிவடைந்து விட்டது மனிதகுலம் தோற்றம் பற்றி பல்வேறு ஆராய்ட்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் டார்வின்.

குறிப்பாக அன்றைய சமூகத்தில் மனிதனின் எல்லா கஷ்டங்களுக்கும் கடவுள் தான் காரணம், கடவுளின் கருணையால் தான் இப்புவியில் நாம் பிறந்தோம், நம்முடைய அத்தனை இன்ப, துன்பகளுக்கும் நம்
முன் ஜென்ம பலனே என்று முதலாளித்துவம் குறிக்கொண்டு இருந்த அத்தனை புரட்டுகளையும் தனதுஆராய்ட்சி மூலம் இவையெல்லாம் போலிகள் என்று இந்த உலகத்ிர்க்கு எடுத்து கூரியவர். இன்றுவரை
இவைகளை எந்த ஒரு மனிதனும் இவருடைய தந்துவங்கள் பொய்யானவை என்று நிரூபிக்க முடியவில்லை.

டார்வின் எப்படி இருப்பான்? ஆறடி உயரம், ஆனால் பார்வைக்கு அப்படித் தோன்ற மாட்டான். நோயினால் பிடிக்கப்பட்டத்தன் காரணமாகப் வயது ஆக ஆக முதுகு வளைந்து கொடுத்தது. அப்படியிருந்தும் இவன் ஒரு காணமாவது சும்மா இருந்தது கிடையாது. ஆராய்ச்சி செய்யுங்காலங்களில் இவன் காட்டின பொறுமையைக் கண்டு இவன் மக்கள் பொறுமையையிழப்பார்கள்.

டார்வின் நடக்கும் போது கையையும் கலையும் வீசி ஆட்டிக் கொண்டு நடப்பான். கையிலே இரும்புக் பூண் போட்டாத்தடி. அதைப் பூமியின் மீது அடித்துக் கொண்டுதான் செல்வன். எவ்வளவு நோயிலிருந்தபோதிலும்கூட வெளியே உலாவச் செல்வதில் இவன் தவறியாதே கிடையாது. அப்போது இவனைப் பார்க்கிறவர்கள் இவனுக்கு இவ்வளவு பொறுமை இருக்குமாவெனச் சந்தகிக்ககூடும். டார்வினுக்குப் பொதுவாக கருப்பு உடைகளிலே அதிகப் பிரியம். வீட்டில் உலவம்போது கூட மேலே ஒரு கருப்பு சால்வையைப் போர்த்திகொண்டிருப்பான்.

டார்வின் ஆராய்ச்சியெல்லாம் அவனுடைய தோட்டம்தான். தான் முந்திய நாள் வைத்துப் போன செடி கொடிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றிலும் கூர்ந்து கவனிப்பான். பல நிறப் புஷ்பங்க்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்து அவற்றின் அருகே பல மணி நேரம் மவுனமாக நின்றுவிடுவான். “உலகத்திற்கு இந்தப் புஷ்பங்கள் செய்கின்ற நன்மைக்கு அவற்றை ஆதரவோடு பார்ப்பதாகிற நன்றியைக் கூடவா செலுத்தக் கூடாது?” என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.

charles-darwin2

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன.

டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார்.

இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார்.

சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்.

1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.

நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார்.

தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: “இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்” என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.

இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய “இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)” என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார்.

டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: “டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?”. ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: “வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை.” பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் “இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)”, தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)” என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது.

இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.

அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel’s Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.

பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்.

 

 

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.