RSS

Category Archives: சத்குரு ஜக்கி வாசுத

அத்வானியின் ஐ.டி. வாக்குறுதியும் என்.டி.ஏ-வின் கொள்கையும்

· கிராமப்புறங்களில் ஐடி துறையில் ஒருகோடியே 20 லட்சம் வேலை வாய்ப்பு.

· ஒருகோடி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் விலையில் இண்டர் நெட் இணைப்புடன் லேப் டாப்கள்.

· அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இண்டர்நெட் சேவையுடன் செயல் படுத்தப்படும்.

மேற்கண்டவை பில்கேட்ஸ்ஸின் அறிவிப்பல்ல. பாஜகவின் 30 பக்க தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கை அறிக்கையில் உள்ளவை. இன்னும் இது போன்ற வாக்குறுதி பட்டியல் நீளுகின்றன.

அத்வானி தேர்தலுக்கு புதியவர் அல்ல. அவருடைய பாஜகவும் புதிய கட்சியல்ல. அவருடைய கூட்டணியும் புதியது அல்ல. இவர்கள் ஏற்கனவே ஆறு ஆண்டு காலம் மத்திய அரசில் இருந்தவர்கள் என்பதை (மக்களை) மறந்து விட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.

அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வசதி செய்வது இருக்கட்டும், இவர்கள் ஆட்சியில் கல்வித்துறை எப்படி இருந்தது என்பதை அத்வானியின் சகாக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் மீண்டும் நினைவூட்டுவது நல்லது.

· முரளி மனோகர் ஜோசியை அமைச்சராக கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கல்வித்துறையை காவி மயமாக்கும் திருப்பணியைத் தான் ஐந்தாண்டு காலம் செய்து வந்தது.

· மூடநம்பிக்கைக்கு அடிகோலும் ஜோதிடத்தை பல்கலைக்கழக பாடமாக்க முயற்சித்தார்கள் என்பதை மறந்து விட முடியுமா?

· தேசத்தின் வரலாற்றையே திருத்தி எழுதிய கூட்டம்.

இன்றைய அத்வானியின் ஐடி யுகப் பேச்சு, இளைஞர்களின் ஓட்டுக்களை கவரத்தானே தவிர வேறு எதுவும் இல்லை. காவி மயமாக்கும் அவர்களின் திருப்பணியே மீண்டும் தொடரும்.

ஒரு கோடி மாணவர்களுக்கு லேப் டாப். பார்த்தால் பிரமாதமாக தோன்றும். ஆனால் இவர்களின் விஷமத்தனமான கொள்கைகள் ஏழை மாணவர்களின் கல்வியை சூறையாடுவதே. 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசின் புள்ளி விபரப்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் பள்ளியை விட்டு வெளியேறியவர்கள் எண்ணிக்கை 4.7 கோடியிலிருந்து 5 கோடி வரை இருக்கும் என மதிப்பிட்டது. ஆனால் பாஜகவோ தங்களது ஆட்சிக் காலத்தில் 16ஆயிரம் கோடி செலவு செய்து 3 கோடி குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்க்க செய்தோம் என்றார்கள். அவர்கள் சொல்லும் படியே இருந்திருந்தாலும் மீதியுள்ள இரண்டு கோடி குழந்தைகளின் கதி….

இது ஒரு பக்கம். மறுபுறம் 16ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக 2004 தேர்தலின்போது இதுபோன்ற தம்பட்டம் அடித்தார். மத்திய அரசு நியமித்த தபஸ் மஜூம்தார் கமிட்டி அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியளிக்கும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பத்தாண்டுகளில் ஒரு லட்சத்து 36ஆயி ரத்து 922 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிட்டது. குறிப்பாக பாஜகவின் ஆட்சிக்காலத்தில் ரூ.47ஆயிரத்து 100 கோடி இதற்காக செலவிட்டிருக்க வேண்டும். அவர்கள் தெரிவித்த விளம்பரப்படி ஒதுக்கியது 16ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. மொத்த தொகையில் 34 சதவீதம் மட்டுமே. ஆனால் உண்மையில் எஸ்எஸ்ஏ திட்டத்திற்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியது 5ஆயிரத்து 810 கோடி மட்டுமே. உண்மை இவ்வாறு இருக்க 2004 தேர்தலிலேயே நாட்டு மக்களை முட்டாளாக்க பொய்யான விபரங்களை அளித்தவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

உயர் கல்விக்கும் வேட்டு

குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை மறுத்தவர்கள், உயர் கல்வியை விட்டு வைத்திருப்பார்களா? 1998-99 முதல் 2003 -04 வரையிலான காலத்தில் மிகக் குறைவான தொகையினையே உயர் கல்விக்கு ஒதுக்கினார்கள். தனியார் கல்லூரிகள் புற்றீசல் போல பல்கி பெருகியதும் இவர்கள் ஆட்சியில் தான். தனியார் பொறியியற் கல்லுாரிகளின் எண்ணிக்கை 1998-99ல் 571 ஆக இருந்தது 2003-04ல் 1059 ஆக உயர்ந்தது. அசேமயம் அரசுபொறியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை 161லிருந்து 175ஆக மட்டுமே உயர்ந்திருந்தது. அதாவது அரசு கல்லூரி கள் 8.7 சதவீதமும், தனியார் கல்லுாரிகள் 85.5 சதவீதமாகவும் உயர்ந்தது. இது மட்டுமல்ல பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை படிப்படியாக வெட்ட வேண்டும் என்று கொள்கை வகுத்தவர்களும் அத்வானியின் கூட்டம் தான்.

ஆறு ஆண்டு காலம் கல்வித்துறை யை காவிமயமாக்கியும், தனியார்மயப்படுத்தியும், நிதிகளை வெட்டி ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியை மறுத்தவர்கள். இதற்காகவே இந்திய மக்கள் 2004ல் பாடம் புகட்டினார்கள். இறந்த காலத்தை மறந்து மீண்டும் அத்வானியை நாற்காலியில் அமர்த்துவார்கள் என்று பகல் கனவு காண்கிறார்கள்.

 

மோசடி சாமியார் சுதான்சு மகாராஜ்

இந்திய அரசின் வருமான வரித்துறை அவ்வப்போது முழித்துக் கொள்ளும். இதற்கு பல காரணம் உண்டு. பெரும்பாலும் இவை பழி வாங்கும் நோக்கத்ிற்காக ஆளும் அரசால் ஏவப்படும் ஏவல் நாய் போல் செயல்படுவது உண்டு. சில நேரம் தன்னை அறியாமல் கடமையை ஆற்றும். அப்படி கடமையை ஆற்றும் விஷயங்களை இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதாவது வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் நீங்கள் கீழே படிக்க போவது.

இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு தொழில் என்ன? வருமானம் என்ன? அது எங்கு இருந்து வருகிறது? இவர்கள் சொத்து என்ன? இவை எப்படி மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது? போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவதில்லை. “தான் இந்த உலகத்தை இரட்சிக்க வந்த கடவுள்என்று கூறிக்கொள்ளும் இவர்கள் மனிதன் உருவாக்கிய சட்டத்திற்க்கு கட்டுப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமியார் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வருமான வரித்துறை 2006 ஆம் ஆண்டே கண்டு பிடித்துள்ளது ஆனால் எவ்வளவு வரி ஏய்ப்பு என்ற விவரத்தை இது வரை வெளியிடவில்லை வருமான வரித்துறை. ஆனால், 16 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது என அம்பலப்படுத்துகிறது மெயில் டுடே நாளிதழ்.

34419671_1

மோசடி மன்னன்

பா.. ஆதரவு ஆன்மீக அமைப்பான விஸ்வ ஜாகுருதி மிஷன் 1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் என்று கூறிக் கொள்வது வழக்கம்.

மும்பையைச் சேர்ந்த மகாவீர் பிரசாத் என்ற தொழிலதிபர் இந்த அமைப்புக்கு 55 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்க்காக வருமான வரி சட்டத்தின் 80G பிரிவின் கீழ் சான்றிதழ்களையும் இவர் இந்த அமைப்பிலிருந்து பெற்றார். ஆனால், வரி விலக்குக்காக அவற்றை சமர்ப்பித்த போது, அவையனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இவர் அளித்த புகாரின் பேரில் டிச 31.2006 முதல் இந்த அமைப்பை தங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவந்தது வருமான வரித்துறை. இந்த ஆன்மீக அமைப்பு வைத்துள்ள வருமான வரிக்கணக்கு எண்ணே போலி என்ற அதிர்ச்சிதரும் மோசடி அம்பலமாகியுள்ளது. மோசடி செய்தற்க்காக அமைப்பின் பொருளாளரை 2007ஆம் ஆண்டே கைது செய்தது வருமான வரித்துறை.

இந்த விவகாரத்தை மெயில் டுடே அம்பலபடுத்தியவுடன் உடனே இந்த செய்தியை பிரசுரிக்கவேண்டாம் என இந்த அமைப்பின் போது செயலாளர் தேவ்ராஜ் கடாரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் பா... உடன் நெருங்கிய தொடர்புடையவர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த மோசடி சாமியார் உடன் நின்று போஸ் கொடுக்க பாஜக தலைவர்கள் தவறமாட்டார்கள். தற்போது பொருளாளரையை பலிகாடவாக மாற்றிவிடலாமா என்று மோசடி அமைப்பினார் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இது ஒன்றும் இவர்களுக்கு புதிது இல்லை. இது போன்ற அனுபவம் பல உண்டு பா...விற்க்கு.

Visit: http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=2422009

 

குறிச்சொற்கள்:

அறுவடையைத் துவக்கியது அமெரிக்கா!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அச்சாரம் போடப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் நடைமுறைக்கு வரும் பல்வேறு உடன்பாடுகளின் பலன்களை அமெரிக்கா அனுபவிக்கத் துவங்கியுள்ளளது. அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டதால் அணுஉலைகளை இந்தியாவின் தலையில் கட்ட பல குழுக்கள் வந்துபோய்க் கொண்டிருக்கின்றன. இந்திய-அமெரிக்க முதலாளிகள் சங்கம் சார்பில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக பல்வேறு துறைகளைத் திறந்துவிடும் வேலைகளில் மன்மோகன்சிங் அரசு மும்முரமாக இருக்கிறது. காப்பீட்டுத்துறை மற்றும் வங்கித்துறைகளில் அன்னியர்களின் கைகள் மேலோங்கச் செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி அமெரிக்காவும், அந்நாட்டின் பெரு நிறுவனங்களும் தங்கள் சுமையை ஏற்ற வளரும் நாடுகளை சுமைதாங்கிகளாக மாற்ற முயல்கின்றன. தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவின் மேலாண்மைக்கு எதிராகத் திரும்பியுள்ளதால், ஆயுத விற்பனையை அங்கு முன்பு போல் செய்ய முடியவில்லை. மாற்று ஏற்பாடாக தென் ஆசியாவின் பக்கம் தனது கவனத்தை அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் திருப்பியுள்ளன. மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி அமெரிக்காவுக்கு உதவும் வேலையில் இந்தியா இறங்கியுள்ளது. இந்தியக் கடல் பகுதியைக் கண்காணிக்க அமெரிக்காவிடமிருந்து விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இந்த விமானங்களுக்காக 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயை தாரை வார்க்கப்போகிறார்கள்.

நீளமான கடற்பகுதியை கண்காணிக்கும் சக்தியைக் கொண்ட எட்டு போயிங் பி-81 ரக விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் உள்ளிட்ட அனைத்து தேவையான ஏற்பாடுகளையும் அதிவேகமாக முடித்துள்ளார்கள். ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டிருந்த டுபோலெவ்-142எம் ரக விமானங்களின் பணியை இந்த அமெரிக்க விமானங்கள் செய்யவிருக்கின்றன. ஆனால் பராமரிப்பு அல்லது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் சரி செய்வது ஆகிய பணிகளுக்கு முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனத்தையே நம்பியிருக்க வேண்டும். ரஷ்ய விமானங்கள் வாங்கப்பட்டபோது உள்நாட்டில் உள்ளவர்களுக்கு பராமரிப்புக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன. இதோடு மேலும் சில சிறிய வகை விமானங்களையும் அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2002 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்கும்போது போடப்பட்ட 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரேடார்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் துவங்கி, கடந்த ஆண்டு பழைய கப்பலான யு.எஸ்.எஸ்.டிரென்டனை வாங்கியது வரை, ஒப்பந்தங்களை குறித்த காலத்தில் முடிப்பது என்பது அமெரிக்காவின் வழக்கமாக இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி நடந்துகொள்வதும் இல்லை. இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக மூன்று பி-3சி ஓரியான் ரக விமானங்களை அமெரிக்கா தயார் செய்தது. ஆனால் இந்தியா மறுத்து விட்டதால் பாகிஸ்தான் தலையில் கட்டியது. பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்குவதற்காக பணமில்லாததால் அதற்கான கடனையும் அமெரிக்காவே வழங்கியது. இரு நாடுகளுக்கிடையில் உள்ள பதற்றமான நிலையைப் பயன்படுத்தி இந்தியாவிடம் ஆயுதங்களை விற்க அமெரிக்கா தீவிரமாகி உள்ளது.

இந்திய-பாக். பதற்றத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அமெரிக்கா, ஆப்கனில் தனது நிலையை பலப்படுத்திக் கொள்ள போதை மருந்துகளை நாடியுள்ளது. அந்நாட்டில் உள்ள பல்வேறு குழுக்களின் தலைவர்களுக்கு போதை மருந்துகளைத் தந்து அவர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வந்துள்ளார்கள். இதில் பாலுணர்வைத் தூண்டும் வயாக்ராவும் அடங்கும் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி கூறுகிறது. இந்த வேலைகளைச் செய்யும் பொறுப்பு அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்களை நமது பக்கம் இழுப்பதற்காக எதையும் செய்யலாம் என்று அமெரிக்க அரசு கூறியுள்ளதாக ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த முன்னாள் சிஐஏ உளவாளி ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகிறார்.

 

குறிச்சொற்கள்:

மனிதகுலத்தின் தோற்றம் புத்தகம் வெளியீடு இன்று உடன் 150 ஆண்டு முடிவடைந்து விட்டது

darwin1

உயிர் வர்க்கங்களின் தோற்றம் புத்தகம் வெளியீடு இன்று உடன் 150 ஆண்டு முடிவடைந்து விட்டது மனிதகுலம் தோற்றம் பற்றி பல்வேறு ஆராய்ட்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் டார்வின்.

குறிப்பாக அன்றைய சமூகத்தில் மனிதனின் எல்லா கஷ்டங்களுக்கும் கடவுள் தான் காரணம், கடவுளின் கருணையால் தான் இப்புவியில் நாம் பிறந்தோம், நம்முடைய அத்தனை இன்ப, துன்பகளுக்கும் நம்
முன் ஜென்ம பலனே என்று முதலாளித்துவம் குறிக்கொண்டு இருந்த அத்தனை புரட்டுகளையும் தனதுஆராய்ட்சி மூலம் இவையெல்லாம் போலிகள் என்று இந்த உலகத்ிர்க்கு எடுத்து கூரியவர். இன்றுவரை
இவைகளை எந்த ஒரு மனிதனும் இவருடைய தந்துவங்கள் பொய்யானவை என்று நிரூபிக்க முடியவில்லை.

டார்வின் எப்படி இருப்பான்? ஆறடி உயரம், ஆனால் பார்வைக்கு அப்படித் தோன்ற மாட்டான். நோயினால் பிடிக்கப்பட்டத்தன் காரணமாகப் வயது ஆக ஆக முதுகு வளைந்து கொடுத்தது. அப்படியிருந்தும் இவன் ஒரு காணமாவது சும்மா இருந்தது கிடையாது. ஆராய்ச்சி செய்யுங்காலங்களில் இவன் காட்டின பொறுமையைக் கண்டு இவன் மக்கள் பொறுமையையிழப்பார்கள்.

டார்வின் நடக்கும் போது கையையும் கலையும் வீசி ஆட்டிக் கொண்டு நடப்பான். கையிலே இரும்புக் பூண் போட்டாத்தடி. அதைப் பூமியின் மீது அடித்துக் கொண்டுதான் செல்வன். எவ்வளவு நோயிலிருந்தபோதிலும்கூட வெளியே உலாவச் செல்வதில் இவன் தவறியாதே கிடையாது. அப்போது இவனைப் பார்க்கிறவர்கள் இவனுக்கு இவ்வளவு பொறுமை இருக்குமாவெனச் சந்தகிக்ககூடும். டார்வினுக்குப் பொதுவாக கருப்பு உடைகளிலே அதிகப் பிரியம். வீட்டில் உலவம்போது கூட மேலே ஒரு கருப்பு சால்வையைப் போர்த்திகொண்டிருப்பான்.

டார்வின் ஆராய்ச்சியெல்லாம் அவனுடைய தோட்டம்தான். தான் முந்திய நாள் வைத்துப் போன செடி கொடிகள் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்பதை ஒவ்வொன்றிலும் கூர்ந்து கவனிப்பான். பல நிறப் புஷ்பங்க்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்து அவற்றின் அருகே பல மணி நேரம் மவுனமாக நின்றுவிடுவான். “உலகத்திற்கு இந்தப் புஷ்பங்கள் செய்கின்ற நன்மைக்கு அவற்றை ஆதரவோடு பார்ப்பதாகிற நன்றியைக் கூடவா செலுத்தக் கூடாது?” என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.

charles-darwin2

சார்லஸ் டார்வின் அவர்கள் இன்றைய உலகச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மனிதர்கள் உட்பட உயிரினங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். லண்டன் லினென் சங்கத்தில் (Linean Society) தமது 27 ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகளை டார்வின் வெளியிட்டபோது, பார்வையாளர்களிடமிருந்து கூச்சலும், குழப்பமுமே வெளிப்பட்டன.

டார்வினின் கருத்துகளை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது கருத்துகள் நம்ப முடியாதவை, ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையல்ல எனக் கூறித் தீவிரமாக வாதிட்டனர்; டார்வினுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஏளனம் செய்தனர். ஆனால் இவற்றை எல்லாம் கண்டு மனம் தளராத சார்லஸ் டார்வின் தமது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உறுதியுடன் வெளிப்படுத்தினார். தீவிரமாக எதிர்த்தோர் அனைவரும், தள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், தகுந்த சான்றுகளுடனும், தாரங்களுடனும் தமது கொள்கைகளை அவர் நிறுவினார்.

இந்நிகழ்ச்சிகள் 1858ஆம் ஆண்டில் நடைபெற்றன; ஓராண்டுக்குப் பின்னர் கில்லர்ட் வைட் (Gillort White) எழுதிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்த சார்லஸ் டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார். ஒவ்வொருவரும் பறவையியல் பற்றி ஏன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற வினா அவர் உள்ளத்தில் எழுந்தது.

சிறந்த மருத்துவராக விளங்கிய சார்லசின் தந்தையார் ராபர்ட் டார்வின் தமது மகனைத் துவக்கத்தில் புகழ் பெற்ற டாக்டர் பட்லர் பள்ளியில் (Doctor Butler’s School) சேர்த்தார். அங்கு சார்லசின் கவனமெல்லாம் வர்ஜில், ஹோமர் ஆகியோரின் கவிதைகளில் ஈடுபடவில்லை; மாறாக ஆப்பிள் பழங்களைத் திருடித் தின்பது, மீன் பிடிப்பது, பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பது ஆகியவற்றிலேயே அவர் ஆர்வம் காட்டினார். ஒருமுறை வீட்டின் பின்புறம் சார்லஸ் தனது அண்ணனோடு ரகசியமாக வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அதைப் பார்த்துவிட்ட டாக்டர் பட்லரின் கடுஞ் சினத்திற்கு டார்வின் ஆளானார். தனது 18ஆம் அகவையில், அதாவது 1825இல் சார்லஸ் டார்வின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள எடின்பரோவுக்கு அனுப்பப்பட்டார். மருத்துவச் சொற்பொழிவுகளிலும், அறுவைச் சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆனால் அமெரிக்க வனவிலங்கு ஆர்வலர் ஆடுபென் (Auduben 1785-1851) அவர்களின் சொற்பொழிவைக் கூர்ந்து கவனித்து வந்த சார்லஸ் டார்வினுக்கு, அத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது; பாறை நீரூற்றுகளைச் சுற்றி நடப்பதிலும், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிப்பதிலும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவழித்தார்.

சார்லசின் இச்செயல்களெல்லாம், அவரது தந்தைக்குப் பெரும் ஏமாற்றத்தை விளைவித்தன; பின்னர் இங்கிலாந்து திருச்சபையில் சார்லஸைப் பாதிரியாராக ஆக்குவதற்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் மகனைச் சேர்ப்பித்தார். ஒரு வழியாக அப்பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்லஸ் டார்வின் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய இரண்டொரு நாட்களில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியர் பீகாக் (Prof. Peacock) அவர்களிடமிருந்து சார்லசுக்குக் கடிதம் ஒன்று வந்தது. பீகிள் (Beagle) என்ற கப்பலில் இவ்வுலகம் முழுவதையும் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்வதில் விருப்பம் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் சிலர் பெயரைப் பரிந்துரைக்குமாறு பேராசிரியர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்; இவ்வாய்வில் பங்கேற்கும் ஆர்வம் உள்ளதா எனக் கேட்டுச் சார்லசுக்குப் பேராசிரியர் கடிதம் வரைந்திருந்தார். தமது தந்தைக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என்பதை அறிந்த சார்லஸ் மனமுடைந்து போனார்; தமது இயலாமையைக் குறித்து வருத்தத்துடன் பேராசிரியருக்கும் பதில் எழுதினார். இவற்றையெலாம் கேள்வியுற்ற சார்லசின் சிற்றப்பா, சார்லசின் தந்தையிடம் கூறி இப்பயணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்தார்.

1831ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் சார்லஸ் டார்வின், பீகிள் கப்பலில் ஆய்வுப் பயணத்தைத் துவங்கி 1836 அக்டோபர் 8இல் இங்கிலாந்து திரும்பினார். ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய டார்வின் புத்தறிவு பெற்றவராக விளங்கினார்; ஏராளமான ஆய்வு முடிவுகளும், உண்மைகளும் அவரது குறிப்பேட்டில் இடம் பெற்றிருந்தன. பல்வேறு புதுமைக் கண்டுபிடிப்புகளையும், பயணத்தின் போது கிடைத்த மாதிரிகளையும் சுமந்துகொண்டு டார்வின் ஊர் திரும்பினார். தென் அமெரிக்காவில் கண்ட பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தைய, நான்கு கால் விலங்கு ஒன்றின் எலும்புக்கூடு, மனித இனத்தின் துவக்க காலம் பற்றிய ஐயங்களை அவர் உள்ளத்தில் தோற்றுவித்தது. இம்மண்ணுலகின் பல்வகை உயிரினங்களும் இயற்கையினது பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியவையே என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். பழங்காலப் பாறைப் படிவங்களில் ஆய்வு மேற்கொண்டு, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்நிலையை அடைந்துள்ளன என்றும், அண்டத்தில் நிகழ்ந்த மாறுதல்களின் சுழற்சியே அதற்குக் காரணம் என்றும் டார்வின் முடிவெடுத்தார்.

நீண்டகாலக் கடற்பயணம் டார்வினுக்குக் கசப்பான அனுபவங்களை அளித்தது; பல்வகைக் கடல் நோய்களுக்கு அவர் ஆட்பட நேர்ந்தது. இத்தகைய இன்னல்களுக்கு இடையிலும், கப்பலின் மேல் தளத்தில் மணிக்கணக்கில் நின்றுகொண்டு, கடல் வாழ் உயிரினங்களை ஆய்வு செய்வதில் டார்வின் தளர்ச்சியடையவில்லை. பெண்டகோனியா (Pentagonia) என்னுமிடத்தில், பனிப்பகுதி சார்ந்த மிகப் பெரும் உருவமுடைய மெகாதரம் (Megatherum) போன்ற மிருகங்களை புவியின் ஆழத்தில் கண்டு பிடித்தார். இவ்வுயிரினங்கள் பின்னங்கால்களால் நிற்கக்கூடியவை; மற்றும் கிளைகள், இலைகள் வழியே தவழ்ந்து மர உச்சிக்குச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தியராவின் (Tierra) அடர்ந்த காடுகளில் வாலில்லா மனிதக் குரங்கு ஒன்று தன் குட்டிக்குப் பாலூட்டுவதை டார்வின் காண நேர்ந்தது; பனிக் கட்டிகள் அதன் உடல் மீது விழுந்து உருகிச் செல்வதையும் பார்த்தார். இவற்றைக் கண்ட டார்வின் மனித உயிரினம் மற்ற விலங்கினங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தார். கடல்வாழ் உயிரினமான நத்தைகள் கடல்மட்டத்திலிருந்து 13000 அடி உயரமுள்ள ஆண்டெஸ் (Andes) மலையின் உச்சியில் இருப்பதைக் கண்ட டார்வின் வியப்பில் ஆழ்ந்து போனார்.

தென் அமெரிக்காவின் பழங்காலப் பாறைகளைக் கண்ட சார்லஸ் டார்வின் அவர்களால், உயிரினங்களின் தொடர்ந்த, படிப்படியான மாற்றங்களுக்கான இணைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் பயணம் செய்த கப்பல் கோலா பேஜஸ் (Gola pages) தீவுகளை அடைந்தபோது டார்வின் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தார்: “இவ்வுலகில் வாழும் உயிரினங்களில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வந்துள்ளது; மாறுதல்களுக்கு உட்படும் இவ்வுயிரினங்களே மனித இனத்தின் மூதாதையர்களாகும்” என்பதே அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாயிற்று. அத்தீவுகளில் இருந்த நத்தைகள், பல்லிகள், பல்வகைத் தாவரங்கள், பருந்து வகைகள் ஆகியன இந்நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக விளங்கின.

இவ்வாறு தாம் கண்டறிந்த மறுக்கமுடியாத பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, மனிதனின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை டார்வின் எழுதத் துவங்கினார். இந்நிலையில் 1858ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் ரசல் வாலஸ் (Alfred Russel Wallace) என்ற அறிவியலார் ஒருவரின் கட்டுரையை டார்வின் படிக்க நேர்ந்தது. இக்கட்டுரையில் பல்லாண்டு ஆய்வுக்குப் பின் டார்வின் கூறிய பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டிருந்தது; ஆனால் வாலசின் கட்டுரையில் இதற்கான அடிப்படைகள் விளக்கப்படவில்லை; இருப்பினும் இக்கட்டுரைக்குக் குறுக்கே நிற்க டார்வின் விரும்ப வில்லை. எனவே தமது கட்டுரை வெளியாகாத நிலையிலும் வாலசின் கட்டுரையை வெளியிடுவதற்கு டார்வின் இசைவளித்தார். இருவரின் கட்டுரைகளைப் பற்றியும் சங்கத்தினர் அறிந்திருந்தனர். எனவே இவர்கள் இருவருமே தமது கட்டுரைகளை லினென் (Linean) சங்கத்தில் வாசிக்கலாம் என அறிவித்தனர். இவ்வாறு ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கான அடித்தளம் அமைக்கப்பட்டதெனலாம். இக்கொள்கையின் திருப்புமுனையாக விளங்கிய “இயற்கைத் தெரிவின் வழி உயிரினங்களின் தோற்றம் (The Origin of Spices by Means of Natural Evaluation)” என்னும் நூலை 1859 நவம்பர் 24இல் டார்வின் எழுதி வெளியிட்டார். முதல் பதிப்பில் வெளியான 1250 படிகளும் அன்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நூலின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஆல்ஃபிரெட் நியூட்டன் (Alfred Newton) பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; ஹென்ரி ஹக்ஸ்லி (Henry Huxley) என்னும் மற்றோர் அறிஞர் டார்வினின் தலைமை மாணாக்கராகவே மாறிவிட்டார்.

டார்வினின் கொள்கை இவ்வுலகில் ஒரு புரட்சியையே உண்டாக்கிவிட்டதெனலாம். மக்கள் தங்கள் மரபு வழிப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்; ஆனால் அவரது கொள்கை கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருந்தது. 1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்றது; அதில் கலந்துகொண்ட பழமையில் ஊறிய பாதிரியார் வில்பர்ஃபோர்ஸ் (Wilberforce) டார்வினின் கொள்கையை முற்றிலும் புறக்கணித்தார். டார்வின் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவிலலை. ஆனால் ஹக்ஸ்லியை நோக்கிப் பாதிரியார் இவ்வாறு கேட்டார்: “டார்வினைப் போன்றே, உமது மூதாதையர்களும் குரங்குகளாக இருந்தவர்களா?”. ஹக்ஸ்லி உறுதியாகக் கூறிய விடை இதுதான்: “வஞ்சனையும், பயனற்ற அறிவும் கொண்ட இம்மனிதர்களோடு ஒப்பிடுகையில், குரங்குகளை என் மூதாதையராக ஏற்றுக்கொள்வதில் எவ்வித அவமானமும் இல்லை.” பாதிரியார் பேச ஏதுமின்றி வாயடைத்துப் போனார். காலப்போக்கில் டார்வினின் கொள்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் அடிபட்டுப் போனது. எனவே, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (Evolutionism) உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும், தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன என்பதை டார்வின் நிரூபித்தார். இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல என்பதும் அவரது கொள்கையாகும். வாழ்க்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப ஒத்துச் சென்ற உயிரினங்கள் வாழ்ந்தன; அவ்வாறு ஒத்துச் செல்ல இயலாத மற்றவை மறைந்தன. டார்வின் தமது இக்கொள்கைகளையெல்லாம் “இயற்கையின் தெரிவுமுறை (Natural Selection)”, தகுதியுள்ளவற்றின் தொடர் வாழ்க்கை (Survival of the Fittest)” என்னும் இரு தலைப்புகளில் வெளியிட்டார்.

டார்வின் அவர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை இன்று உலகில் மிகுந்த நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மரபியல் (Genetics), கருவியல் (Embryology) மற்றும் புதைபொருள் ஆய்வியல் (Palaeonology) ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பரிமாண வளர்ச்சிக் கொள்கைக்கு மேலும் வலுவூட்டின. தொல்பழங்காலத்தில் இவ்வுலகம் முழுதும் சடப்பொருளாயிருந்து, பின்னர் அதிலிருந்தே மனிதர் உட்பட எல்லா இயற்கை உயிரினங்களும் மலர்ந்தன என்ற உண்மை புலப்பட்டது.

இயற்கையின் தெரிவுமுறை சுற்றுச்சூழலைப் பொறுத்தது என்பதை டார்வின் மிகத் தெளிவாக வலியுறுத்தினார். ஒரு பச்சைநிற வெட்டுக்கிளியை மஞ்சள் நிறப் புல்வெளியில் விட்டால் அது எளிதில் பறவைகளுக்கு இரையாகிவிடுகிறது; ஆனால் பச்சைப்புல் வெளியில் விடும் போது அவ்வெட்டுக்கிளி காப்பாற்றப்படுகிறது. இச்சோதனை வாயிலாக சுற்றுச்சூழலின் வலிமையை நிரூபித்தார்.

அடுத்து மெண்டலின் விதிகளும் (Mendel’s Laws), தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ள பெரிதும் துணை நின்றன. பயறு வகைச் செடிகளில் ஆய்வு மேற்கொண்ட மெண்டல் வியப்பூட்டும் முடிவுகளைக் கண்டறிந்து வெளியிட்டார். ஏற்கனவே பெட்டாசன், திப்ராய் ஆகியோர் இத்துறையில் ஆய்வுகள் நடத்தியபோதும் அவர்களால் இயற்கையின் தெரிவு முறை பற்றி ஐயத்திற்கிடமின்றி முடிவுகளை வெளியிட இயலவில்லை. ஆனால் மரபியல், குரோமோசாம்கள், மரபணுக்கள் ஆகியன பற்றிய மெண்டல் விதிகளுக்கான அடிப்படைகளை மோர்கோன் அவர்கள் தெளிவுபடுத்தி ஐயங்களைப் போக்கினார்.

பெற்றோரின் மரபியற் குணங்கள் பிள்ளைகளிடம் அல்லது அவர்களது வழித்தோன்றல்களிடம் இருப்பது பாலில் நீர் கலந்திருப்பது போன்றதாகும் என டார்வின் கருதினார். அது மட்டுமல்லாமல் இந்த அண்டத்தில் வாழும் பல்வகைப்பட்ட உயிரினங்களுக்குள், வேற்றுமைகளுக்கிடையில் பல ஒற்றுமைகளும் உள்ளன என்பதும் அவரது கருத்தாகும்.

 

 

 

குறிச்சொற்கள்:

அபிநவ் பாரத்தின் நோக்கங்கள் என்ன?

கேள்வி: அபிநவ் பாரத்தின் நோக் கங்கள் என்ன?

பதில்: பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதும், உண்மையான பயங்கரவாதிகள் யாரென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பயங்கரவாதத்தை எப்படி எதிர்ப்பது என்று கற்பிப்பதும் எங்களது நோக்கங்கள். இதை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டது. அரசாங்கம் செயல்படத் தவறிவிட்டதால் எதிர்வினை தேவையாக இருக்கிறது. சாத்வி பிரக்ஞயாசிங் மற்றும் இதரர்கள் பற்றியும் காவல்துறை சொல்வது உண்மையாக இருந்தால், அது உண்மையான பயங்கரவாதத்துக்கு எதிரான வினையே…..

கேள்வி கேட்டது அவுட்லுக் இதழின் சைகத் தத்தா. பதில் சொன்னது அபிநவ் பாரத்தின் தலைவர் ஹிமானி சாவர்க்கர். அவர் இந்து மகாசபையின் தலைவரும் ஆவார். 61 வயதான இந்தப் பெண்மணி, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயின் புதல்வி. இந்துத்துவ தத்துவத்தின் பிதா மகன் வீ.டி.சாவர்க்கரின் சகோதரர் மகனை மணந்தவர்.

அவர் இதோடு நிறுத்தவில்லை. குண்டுவெடிப்புக்குப் பதில் குண்டு வெடிப்பாகுமா என்கிற கேள்விக்கு, ஏன் கூடாது என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார். (அவுட்லுக், 17 நவம்பர், 2008).

சங்பரிவாரின் எண்ணற்ற விஷக் கொடுக்குகளில் ஒன்றான ஏபிவிபி (மாணவர் அமைப்பு)யின் முன்னாள் செயலாளரான சாமியாரிணி பிரக்ஞயாசிங் மராட்டிய மாநிலம் மாலேகாவில் கடந்த செப்டம்பர்29ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என்பது அம்பலமானவுடன் சிவசேனையின் தலைவர்களில் ஒருவரான மனோகர் ஜோஷியும் இப்படித்தான் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதபோது இப்படித் தான் நடக்கும் என்றார்.

இந்நிலையில்தான், எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று தொகாடியா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் சாதிக்கிறார்கள். அதாவது, மாலேகாவில் இஸ்லாமிய மாணவர் இயக்க அலுவலகத்தினருகே குண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சாமியாரிணி பிரக்ஞயாசிங் தாகூர் பயங்கரவாதி இல்லையாம். அதாவது, அவர் குண்டு வைக்கவில்லையாம். இத்தனைக்கும் அம்மணி சாதாரண ஆளில்லை. தான் ஏற்பாடு செய்த குண்டு வெடிப்பில் வெறும் ஆறு பேர்தான் பலியானார்கள் என்பது தெரிந்து மிகவும் விசனப்பட்டிருக்கிறார். ஏன் பலி எண்ணிக்கை இவ்வளவு குறைவாக இருக்கிறது என்று தன் சகாவிடம் கேட்டாராம். அவ்வளவு நல்லவர்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பிறப்பால் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்று மதச் சார்பற்ற சக்திகளெல்லாம் கூறியபோது இந்துத்துவவாதிகள் அதை ஏற்கவில்லை. பயங்கரவாதிகளெல்லாம் முஸ்லிம்களே என்று வெறுப்பை வளர்த்தனர். பயங்கரவாதத்தை முஸ்லிம் மதத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்தினர். நாட்டில் மாவோயிஸ்டு, உல்பா, போடோ போன்றவை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இருக்கின்றன. இப்போது அதே போல் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட இந்துக்களை இந்து பயங்கர வாதிகள் என்று அழைத்தால், குய்யோ முறையோ என்று குதிக்கின்றனர். பயங்கர வாதத்துக்கு மதம் கிடையாது என்று மதச்சார்பற்றவர்கள் சொல்லி வந்ததை இப்போது மதவாதிகள் ஒப்பிக்கின்றனர். மதச்சார்பற்ற கட்சிகள்தான் பயங்கரவாதத்தை மதத்தோடு சம்பந்தப்படுத்துகின்றன என்று கூறிவந்த இந்துத்துவவாதிகள் கையும் குண்டுமாக பிடிபட்டுவிட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார்கள். அதுவும் ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நேரத்தில் இனியும் அப்பாவி இந்துக்களை ஏமாற்ற முடியாதபடி அம்பலப்பட்டுப் போய்விட்டோமே என்ற பதட்டத்தில் முன்னுக்குப் பின் முரணாக உளற ஆரம்பித்துவிட்டார்கள். முதலில் பிரக் ஞயா சிங்கிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்றவர்கள், பின்னர் அவர் பயங்கரவாதியே இல்லை என்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர் பயங்கரவாதி தான் அதிலென்ன தப்பு என்றும் சிலர் பேசுகிறார்கள்.

எப்படியாயினும் ஆர்எஸ்எஸ் கூட்டம் ஒரு பயங்கரவாதக் கூட்டம்தான். காந்தி படுகொலை மற்றும் பிரிவினைக் கலவரங்கள் போன்றவற்றில் துப்பாக்கியைப் பயன்படுத்தினார்கள். பின்னர் இதுநாள் வரை வெட்டுக்கத்திகள், வீச்சரிவாள்கள், திரிசூலங்கள் போன்றவற்றால் சிறுபான்மையினரைக் கொன்று குவித்தவர்கள் சமீப காலமாக வெடிகுண்டுகளை வீச ஆரம்பித்துள்ளனர். அதுவும் சக்தி மிக்க ஆர்டிஎக்ஸ், அதுவும் ராணுவத்தரம் வாய்ந்த ஆர்டிஎக்சைப் பிரயோகித்துள்ளார்கள். அதைக் கொடுத்தவர் பதவியிலிருக்கும் ராணுவ லெப் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்.

ராணுவத்தில் மதவாதிகள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ அளிக்கக் கூடிய செய்தியே அல்ல. அந்த உண்மை இப்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருக்கிறது, அவ்வளவுதான். கடந்த தேர்தல்களில் பாஜகவின் சார்பில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் போட்டியிட்ட போதே அது எதிர் பார்க்கப்பட்டதுதான். ஓய்வு பெற்றதும் பாஜகவில் சேர்கிறார்கள் என்றால் பதவியிலிருக்கும் போதும் மதவாதிகளாகத் தானே இருந்திருப்பார்கள்?

புனேயில் மகாராஷ்டிரா மிலிட்டரி பவுண்டேஷன் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற கர்னல் ஜெயந்த் சித்தாலே. “என்னுடைய ஆட்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ராணுவத்தின் முப்படைகளிலும் பணியில் உள்ளனர். ஒவ்வொருவரும் என்னால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். செய்ய வேண்டியது என்னவென்றும், அதைச் செய்வதற்காக உறுதியும் பூண்டவர்கள். தேசத்துக்காக எதுவும் செய்வார்கள்’’ என்று பெருமையாகக் கூறுகிறார். ஸ்ரீகாந்த் புரோகித் இங்கு பயிற்சி பெற்றவர் தான். தேசத்துக்காக எதுவும் செய்வார்கள் என்று சித்தாலே சொன்னதன் அர்த்தம் என்னவென்று புரிந்திருக்கும்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று குஜராத்திலுள்ள அசிமானந்த் என்பவர் மீது காவல்துறை சந்தேகிக்கின்றனர் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகின. இந்த செய்திகள் வெளியானதிலிருந்து அசிமானந்த் குஜராத்தில் தென்படவில்லை. ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான வனவாசி கல்யாண் பரிசத் என்ற அமைப்பின் தலைவரான இந்த அசிமானந்த் அந்தமானுக்கு தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த போலி சாமியார் அசிமானந்த் குஜராத்தைச் சேர்ந்தவர் அல்ல. அந்தமானிலிருந்து 1997 ஆம் ஆண்டு இங்கு வந்துள்ளார். ஒரு ஆண்டுக்குள்ளேயே மத ரீதியான மோதல்கள் அதிகமாகின. இவரின் மதவெறிப்பிரச்சாரங்கள் அதற்குப்பெரிய காரணமாக இருந்தது. 1998 ஆம் ஆண்டில் அவர் இருந்த டாங்ஸ் மாவட்டத்தில் மட்டும் 38 முறை கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2006 ஆம் ஆண்டு இவர் நடத்திய பெரிய விழா ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிசத் ஆகியவற்றின் உதவியோடு நடத்தப்பட்டது. அதில் குஜராத் முதல்வர் மோடி மற்றும் வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரக்ஞாசிங் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர்.

பயங்கரவாதத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடைமுறையில் இரட்டை அணுகுமுறையை குஜராத் அரசு கடைப்பிடிக்கிறது. முஸ்லிமாக இருந்தால் எந்தக் கேள்வியும் கேட்காமல் வேறு மாநில காவல்துறையுடன் அனுப்பி வைத்து விடுகிறார்கள். ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்த மதவெறியர்களாக இருந்தால் பிற மாநில காவல்துறை கொண்டுவரும் ஆவணங்களில் ஏதாவது குறைகூறி திருப்பி அனுப்பும் உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். இவர்களின் மூலமாகத்தான் அசிமானந்த் அந்தமானுக்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதன் இடையில் கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டம் வடக்கு போயிலூரில் நவ.10அன்று செருவாஞ்சேரியில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் பிரதீபன் மற்றும் திலீபன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் அதே பகுதியிலேயே மேலும் 18 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சதித் திட்டம் பெரியதாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட காவல்துறை கண்ணூர் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறது.

இதில் தற்போது 125 குண்டுகள் சிக்கியுள்ளன. கொளவல்லூர் காவல் நிலையத்தின் பகுதியில் அமைந்துள்ள வடக்கு போயிலூரில் இவை கிடைத்தன. நான்கு சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன் போலீஸ் படை விரைந்துள்ளது.

இவை அத்தனையும் வெடித்திருந்தால் எத்தனை அப்பாவி மக்கள் உயிரெழந்து இருப்பார்கள். இத்தனைக்கும் மேல் காங்கிரஸ் அரசு RSS VHP  மற்றும் பஜராங் தள் இயக்கங்கலை தடை செய்யாமல் இருப்பது தானும் ஒரு மதம் சார்ந்த காட்சி என்றே நிறுவுகிறது.

 

குறிச்சொற்கள்:

ஆர்எஸ்எஸ் தலைவர் வீட்டில் குண்டுக் குவியல்

கேரள மாநிலம் தலைச் சேரியில் ஆர்எஸ்எஸ் தலை வரின் வீட்டு முற்றத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிக வெடிப்புச்சக்தி யுள்ள குண்டுக் குவியல் கைப்பற்றப்பட்டது.

தலைச்சேரியைச் சேர்ந் தவர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பிபின்தாஸ். இவரது வீட்டு முற்றத்தில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதிக வெடிப் புச் சக்தியுள்ள 20 குண்டு களைக் கைப்பற்றினர். வீட் டின் முற்றத்தில் பிளாஸ் டிக் பக்கெட்டுக் குள் குண்டுகள் ஒளித்து வைக்கப்பட் டிருந்தன.

 

குறிச்சொற்கள்:

வழக்குரைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சங் பரிவார்

உத்தரப்பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தில் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர்கள் சார்பாக வழக்குரைஞர்கள் யாரும் வழக்காடக் கூடாது எனத் தடுக்கப்படுகிறார்கள். மீறினால் வழக்குரைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த இழிசெயலில் ஈடுபடுகிறவர்களும் வழக்குரைஞர்கள்தான். ஆனால் ஒரு வித்தியாசம், “சங் பரிவார்” கூட்டத்தைச் சேர்ந்த “கருப்பு கவுன்” அணிந்த இதயத்தால் மட்டும் காவிக்கறையாகிவிட்ட வழக்குரைஞர்கள்தான் இந்த இழிசெயலில் ஈடுபடுகிறார்கள். வழக்குரைஞர்களை வகுப்புவாத ரீதியில் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். காவல்துறையும் இவர்களின் அட்டூழியத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் கவலை தரும் நிகழ்ச்சியாகும்.

முகமது ஷோயாப் என்ற வழக்குரைஞர், பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப் பட்டவருக்காக வழக்காடி, அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலையானார். காவல்துறையும் கூட தவறுதலாக ஆள்மாறாட்டம் நடந்துவிட்டது, இவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது என்று ஒப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. முகமதுஷோயாப் இந்த வழக்கை கைவிடவேண்டும் என்று ஏற்கனவே வகுப்புவாத வழக்குரைஞர்கள் நிர்ப்பந்தித்தார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதோடு குற்றவாளி நிரபராதி என்றும் விடுதலையாகிவிட்டார். இஸ்லாமியர் நிரபராதி என்று விடுதலை ஆகிவிட்டதால் சீற்றம் கொண்ட சிறுமதியாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று வெறித்தனமாக கூச்சலிட்டு “பாகிஸ்தான் கைக்கூலி ஒழிக” என்று கூறியபடியே முகமது ஷோயாபை இழுத்துப் போட்டுத் துவைத்தார்கள். அவரது உதவியாளர் முகமது ரிஸ்வானையும் நையப்புடைத்தார்கள். தாக்குதலுக்கு உள்ளான வழக்குரைஞர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் பதிவு செய்யப்படவில்லை. அடிவாங்கியது இஸ்லாமியர்தானே. எதற்கு எஃப்ஆர்ஐ பதிவு செய்யப்பட வேண்டும் என்பது காவலர்களின் சித்தாந்தம் போலும்.

அடியாட்களாக செயல்படும் இந்த வகுப்புவாத வழக்குரைஞர்களுக்கு, வெறி அதோடு அடங்கிவிடவில்லை. அடுத்து ஏ.எம் பஃரிடி என்னும் லக்னோ உயர்நீதி மன்ற வழக்குரைஞர் மீதும் காட்டுமிராண்டித்தனமாக பாய்ந்து தாக்கினார்கள். காரணம் இவரும் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வழக்காடி விடுதலை பெற்றுத்தந்தார். காரணம் இதுவும் பொய் வழக்கே! அபாண்டமாக பழி சுமத்தப்பட்ட வழக்கு!

ஏற்கனவே, முகமது ஷோயாப் கொடுத்த புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததோடு, நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் மனம் நொந்து போன அவர் லக்னோவின் மூத்த காவல்துறை மேலாண்மை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார் மனு அனுப்பியிருக்கிறார். இப்படி ஒரு புகார் மனு அனுப்பப்பட்டது மதவெறியர்களுக்கு, அந்த வழக்குரைஞர்களுக்கு மாபாதகமாகத் தெரிந்து உடனே ஒரே பாய்ச்சலாய் விரைந்து சென்று முகமது ஷோயாப்பை அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து மறுபடியும் தாக்கினார்கள். நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கினார்கள். மாறி, மாறி முகத்திலும் உடம்பிலும் குத்துகள் விழுந்தன. “உன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள்” என்று சொல்லித்தான் அடித்தார்கள். அவருடைய ஆடைகள் அவிழ்க்கப்பட்டன. மேலாடை, உள்ளாடையின்றி அந்த இஸ்லாமிய வழக்குரைஞர் நீதிமன்ற கட்டிடத்தைச் சுற்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டார்.

பாவம் முகமது ஷோயாப்பை அடித்து உதைத்ததோடு “இந்துஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் வீழ்க” என பலமுறை கோஷமிட வைத்தார்கள். இவர் ஏதோ பாகிஸ்தான் உளவாளிபோல படம் பிடித்துக்காட்ட இப்படி பயன்படுத்தினார்கள். இதில் மேலும் சோகச் செய்தி, காவல் துறையினர் இந்த அசிங்கத்தை வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாய் இருந்தார்கள். ஒரு ஆறுதலான செய்தி. மாவட்ட நீதிபதி இந்தக் கொடுமையை-அவமானத்தை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கே.காந்த் அவர்களின் கவனத்திற்கு, மேல்நடவடிக்கைக்கு எழுத்து மூலமாக எடுத்துச் சென்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான ஓர் இயக்கம். வழக்குரைஞர்களையும் மற்றவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் ஓர் இயக்கம் Movement Against Terrorism (MAT) உடனடியாகக் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தூதுக் குழு ஒன்று மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரபானுவைச் சந்தித்து இரண்டு வழக்குரைஞர்களுக்கும் – முகமது ஷோயாப், ஏ.எம்.பஃரிடி – இந்து மதவெறி வழக்குரைஞர்களால் தாக்கப்பட்ட இந்த இருவருக்கும் பாதுகாப்பும், எஃப்ஐஆர் பதிவும் செய்யவேண்டும் என வேண்டிக் கொள்ளப்பட்டது. வேண்டுகோளுக்கு எந்த பலனும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. எஃப்ஐஆர் பதிவும் இல்லை.

“முஸ்லிம் பர்செனல் லா போர்ட்” சட்ட ஆலோசகர் சஃபரியாப் ஷிலானியும் அவரோடு சிலரும் சேர்ந்து வழக்கு பதிவு செய்ய லக்னோ உயர்நீதிமன்றம் சென்றார்கள். வெறிக்கும்பல் இவர்களையும் மடக்கித் தாக்கியது. அவர்களை தாக்கியதோடு , ஏ.எம்.பஃரிடியைக் கொல்ல அறையைத் தீயிட்டார்கள். பஃரிடி எப்படியோ உயிர்தப்பினார். இந்த அட்டூழியம் நடந்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னேதான் காவல்துறை அங்கு காலடி வைத்தது. காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுப்பது போல் நடித்தது. உண்மை என்னவென்றால் உதைவாங்கிய, அவமானப்படுத்தப்பட்ட ஷிலானி, பஃரிடி, ஷோயாப் ஆக மூன்று பேர் மீதும் எஃப்ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. லக்னோ பார் அசோஷியேசன் செயற்குழு தலைவர் திரிவேதி ஒரு மதவாதி . அவர் கொடுத்த புகார் மீதுதான் இந்த துரித நடவடிக்கை.

இவ்வளவு கொடிய சூழல்கள் நீடித்தாலும்! உத்தரப் பிரதேச பார் கவுன்சில் இதில் நிதானம் காட்டுகிறது. பார் கவுன் சில் தலைவர் ஏ.என்.சிங் “இந்த விஷயத்தில் பார் கவுன்சில் எந்த விதத்திலும் வளைந்து கொடுக்காது. உரிய விளக்கம் கேட்ட பிறகு குற்றம் செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தின் மரியாதையைக் காக்கவும், தொழிலின் மேன்மையைப் பேணவும் உறுதியோடு இருப்பதோடு, அதில் எந்த வித சமரசத் திற்கும் இடமில்லை.” என்று சொல்லி இருப்பது மன ஆறுதல் அளிக்கிறது.

அலகாபாத் மண்டல மனித உரிமைச் சட்ட அமைப்பு செயலாளர் கே.கே.ராய் “இந்தக் கொடுமை நன்கு திட்டமிட்ட வகையில் சங்பரிவாரத்தால் செய்யப்படுகிற செயலாகும். நீதி சமூகத்தை காவிமயமாக்கிடவும், மதவாத அமைப்பாக மாற்றிடவும் செய்யும் முயற்சியாகும்” என்று குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை யாகும்.

கூடுதல் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஆர்.பி.மேகரோத்ரா “இந்த செயல்பாடு முழுக்க முழுக்க குண்டாயிசம் ” பார் கவுன்சில் இவர்களிடம் விளக்கம் கேட்டு, பின் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதும் ஆறுதல் செய்தியாக உள்ளது.

இந்துத்துவா – இந்துமத வெறி, சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் போன்றோருக்கு மட்டும் எதிரானதல்ல. ஒரு கட்டத்தில் பெரும்பான்மையான இந்துக்களுக்கும் எதிரானதாக மாறும் இயல் புடையது. அனைவரையும் கடித்துக் குதறும் பாசிசம் என்று இதைத்தான் சொல்லுகிறோம்.

நன்றி: http://www.tehelka.com

 

குறிச்சொற்கள்:

எஸ்.ஆர்.எம்.யு. (SRMU) தொழிற்சங்க தலைவர் கைது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல் முறையாக எஸ்.ஆர்.எம்.யு. (SRMU) தொழிற்சங்க தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்சிகளும் தொழிற் சங்கம் நடத்தி வருகின்றன. சில பூஸ்வா சிந்தனை உள்ளவர்கள் தலையை ஆட்டும் மனிதர்களை வைத்துக் கொண்டு சங்கங்களை நடத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு தொழிற்சங்கம் தான் எஸ்.ஆர்.எம். யு. இந்தியாவில் அதிகம் படித்த மக்கள் கொண்ட மாநிலம் கேரளா. இந்த கேரளா மாநிலத்தின் எஸ்.ஆர்.எம்.யு அமைப்பின் மாநில தலைவராக இருப்பவர் பிரசன்னா. இவர் திருவனந்தபுரம் ரயில்வேயில் சீனியர் டிக்கெட் பரிசோதகராக பணியற்றுக்கிறார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் உள்ளது. ஆனால், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு,அடியாட்கள் பலம் இவற்றை வைத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி புகார்களை விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துவர். இல்லை, புகார் குடுத்வரை மிரட்டி புகரை வாபஸ் பெற வைத்து விடுவார். இவரை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டி இட முடியாது. இவர் நியமிக்கும் ஆட்கள் தான் சங்க நிர்வாகிகள் அப்படி ஒரு ஜனநாயக புலி இவர். இடம் மாறுதல், பதவி உயர்வு, வேலை நியமனம், புதிய பணி இடங்களில் ஆட்களை நியமித்தல் எல்லாம் இவர் கண் அசைவில் கண கச்சிதமாக நிறைவேறும்.

இதனிடையே பிரசன்னா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் சி.பி. அதிகாரிகள் கொல்லத்தில் உள்ள பிரசன்னா வீட்டை சோதனையிட்டனர். அப்போது இரண்டு கோடி ரூபாய் சொத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் கொல்லம் அருகே பரலுரில் புதியதாக கட்டியுள்ள அவரது வீடு, வங்கி கணக்கையும் சோதனை செய்ததில் மேலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவர் மனைவியின் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்தும் உள்ளது. அவையும் கணக்கிட சி.பி..க்கு உத்தரவு இடப்பட்டு உள்ளது. இவரைப் போல அதிகாரம் படைத்த பல தலைவர்கள் டாடா சுமோக்களில் தொண்டர்கள் புடை சூழ
வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் தன்னுடைய பாவங்களை இரட்சிக்க வந்த கடவுள் என்று தொழிலாளி வர்க்கம் நம்பிக் கொண்டு இருக்கிறது

இறுதியாக பிரசன்னா இரும்பு கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார். பல தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி கொழுத்த பிரசன்னாவை சுற்றி அவருடைய இரத்தத்தை உறிஞ்சுவதர்காக கொசு மட்டும் சுற்றி வருகிறது

 

குறிச்சொற்கள்:

மார்க்ஸ் – ஏங்கெல்ஸின் ஒப்புதல் வாக்குமூலம்

அந்த காலத்தில் பிரபலமானவர்கள் அல்லது தமக்கு பிடித்தவர்களிடம் வாழ்வியல் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் வழக்கம் இருத்தது. அவ்வாறு தந்த மார்க்ஸ்ஏங்கெல்ஸின் ஒப்புதல் வாக்குமூலம் தான் கீழே உள்ளது.. இதையும், இன்று உள்ள தலைவர்களும், நடிகர்களும், ஒப்புதல் வாக்குமூலங்களை ஒப்பிட்டு பாருங்கள்.

மார்க்ஸ் வாக்குமூலம்

பிடித்த குணம்:                                           எளிமை
உங்களது முக்கிய குணாதிசியம்: குறிக்கோளில் விடாப்பிடித்தன்மை
மகிழ்ச்சி:                                                       போராடுவது
வருத்தம்:                                                       சரணடைவது
மன்னிக்கும் தவறு:                                 ஏமாறுவது
மன்னிக்க முடியாத தவறு:               அடிமைத்தனம்
பிடித்தமான பொழுது போக்கு:        புத்தகப் புழுவாக இருப்பது
பிடித்த கவிஞ்சர்கள்:                             ஷேக்ஸ்பியர், கோதே, ஆஷ்லச்
பிடித்த கட்டுரையாளர்:                         டைட்ரோட்
பிடித்த கதாநாயகன்:                              ஸ்ப்பார்ட்டகஸ், கெபலர்
பிடித்த கதாநாயகி:                                 கிரெட்ஸ்சன்                                      பிடித்த நிறம்:                                             சிவப்பு
பிடித்த பெயர்:                                          லாவ்ரா, ஜென்னி
பிடித்த உணவு:                                        மீன்
பிடித்த மலர்:                                           டாஅக்னே ( புகழ்பெற்ற ஐரோப்பிய மலர் )
பிடித்த கூற்று:                                    மனித குலத்திற்கு பொருந்துகின்ற எதுவும் அந்நியமானது அல்ல
பிடித்த முழக்கம்
:ஓவ்வொன்றையும் சந்தேகப்படுடெஸ்கார்ட்டஸ்

 
 
Follow

Get every new post delivered to your Inbox.