அமெரிக்க சிறைகளைப் பற்றிப் பல தகவல்கள் படித்திருப்போம். அமெரிக்காவில் உள்ள சிறைக் கைதிகளைப் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் 2.3 மில்லியன் மக்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின் இருக்கிறார்கள். உலகத்தில் இவ்வளவு அதிகமான கைதிகளை கொண்ட நாடு வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறது “மனித உரிமை கண்காணிப்பு” என்கிற அமைப்பு.
1960
களில் அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்களுக்கு 110 சிறைக் கைதிகள் என்ற விகிதம் இருந்தது. தற்போது ஒரு லட்சத்திற்கு 1100 என்கிற விகிதத்தில் உயர்ந்து உள்ளதாம். இது போன்று பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கு 152, கனடாவில் 108, பிரான்சில் 91. இவற்றை பார்க்கும் போது உலகத்தில் மிகப்பெரிய ‘ஜெயிலராக’ அமெரிக்கா திகழ்வது தெரிகிறது. அமெரிக்கக் கைதிகளில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உயர்கிறது.
கைதிகளில் 70 சதம் படிக்காத மக்கள், கைதிகளுள் ஏழை மக்கள், மனநிலை பதிக்கப்பட்டோர், போதைப்பழக்கத்திற்கு அடிமையானோர், குடிக்ாரர்கள், போதை மருந்து விற்பவர்கள் தான் அதிகம். இவர்களில் 25 சதம் பெண்கள். வெள்ளை இன மக்களை விட, கருப்பு இன மக்கள் தான் அதிகம் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள் என்பது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல். இன்றைக்கு அமெரிக்கா சிறை தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு, அவை ஒருசில பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக மாறிவருகிறது.
ஃபோர்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை விட அமெரிக்க சிறைச்சாலை தான் அதிக அளவு வேலைக்கு ஆள் எடுக்கிறது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்பட அனைத்து குடியரசு நாடுகளை விட அமெரிக்காவில் மட்டும் சிறை கைதிகள் ஏன் அதிகம் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். பிற நாட்டு மக்களின் பாதுகாவலானத் தன்னை சித்தரிக்கும் அமெரிக்காவில் சிறைகள் நிரம்பி வழியும் மர்மம் தான்என்ன?