மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஜூன் 3, 2008

வாசுந்தரா ராஜே சிந்தியாவின் அராஜகம்

கோப்பு வகை: R.S.S, அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 9:04 மு.பகல்

                             

குஜ்ஜார்களை பழங்குடி பட்டியலில் சேர்த்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் பாஜகவினர் அளித்த பொய்யான உறுதிமொழி தற்போது பெரும் போராட்டத்தைக் கிளப்பிவிட்டது. தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பிரச்சனைகள் எழும் போதெல்லாம் மக்களை அலட்சியமாகக் கருதியே வாசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளுக்காக ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2006ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் எழுச்சியுடன் போராடியபோது தயக்கமின்றி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஆறு அப்பாவி விவசாயிகள் குண்டு துளைத்து உயிர்ழந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு அதே விவசாயிகள் தண்ணீர் திறந்து விடக்கோரி போராட்டம் நடத்தினார். அப்போது அவர்களை மாபியா (கொள்ளை கும்பல்) என்று குறிப்பிட்டார். ஆனால் இதே பிரச்சனைகளை
மையமாக வைத்து மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராட்டம் நடத்துமாறு விவசாயிகளை பாஜக தூண்டி வருகிறது.

2008 இறுதியில் பதவிக்காலம் முடிவதால் அதற்குள் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு ஆதாயம் தரும் வேலை ஒன்றைச் செய்யவும் பாஜக அரசு முனைந்துள்ளது. அவசர நிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வுதியம் தரப்போகிறார்கள். மே மாதம் முதல் வாரத்தில் இதற்கான அரசானை வெளியிட்டுவதற்கான வேலை நடைபெற்றது. இத்தகைய ஆலோசனை வந்தவுடனே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நெருங்கிய சகாவான சித்தராஜ் தத்தா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக வழங்கப்படும் தியாகிகள் ஓய்வுதியத்தையே இவர் வழங்கவில்லை. இதை அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அவசரநிலைக் காலத்தில் சிறையில் இருந்தவருமான ஓம் சைனி, “31 ஆண்டுகள் கழித்து இவர்கள் ஏன் இதைக் கொண்டு வரவேண்டும்? இதற்கு முன்பு மூன்று முறை ஆட்சியில் இருந்துருக்கிறார்கள். தற்போது தேர்தல் வரும் வேளையில் ஆர்எஸ்எஸ்காரர்களை திருப்திப்படுத்தவே இதைக் கிளப்பியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

தனது நான்கு ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 80க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துருக்கிறார். நாம் எல்லோரும் இந்து என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் இந்துகளை கொள்வார்கள்

 

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.