மாதம் மும்மாரி பொழிகிறதா?

ஜூன் 30, 2008

அபின் விளைச்சலில் பங்குபெறும் தலிபான்கள் 2007ல் 5 கோடி டாலர்கள் வருமானம்

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 6:00 பிற்பகல்

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கன் பகுதிகளில் அபின் விளைவிக்கும் விவசாயிகளிடம் பத்து சதவீத மதவரி மூலம் 2007ம் ஆண்டில் தலிபான்கள் 5 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர் என்று போதை மருந்து மற்றும் குற்றம் குறித்த ஐ.நா. அமைப்பின் தலைவர் அன்டோனியோ மரியா டி கோஸ்டா கூறியுள்ளார்.

மதவரி தவிர மேலும் இரண்டு வழிகளில் தலிபான்கள் பணம் திரட்டுகின்றனர். பாப்பி செடிகளில் இருந்து விளையும் விதைகளில் இருந்து அபின் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் அபின் மூட்டை களை எல்லைகளைத் தாண்டி அனுப்புவதற்கும் தலிபான்கள் கட்டணம் பெறுகிறார்கள் என்று டி கோஸ்டா தகவல் அளிக்கிறார்.

உலகின் தேவையை விட உபரியாக ஆப்கனில் அபின் விளைகிறது. கடந்த சில ஆண்டுகளில் 4 ஆயிரம் டன் அபின் உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஆப்கனில் 8000 டன் அபின் விளைந்துள்ளது. உபரி விளைச்சல் யாரிடம் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், இவை பல நூறு கோடி டாலர்களை பெற்றுத் தரக்கூடியது.

நாளாக நாளாக அபின் கெடுவதில்லை. மாறாக அதன் மதிப்பு கூடுகிறது. பதுக்கப்பட்டிருக்கும் அபின் பயங்கரவாதிகளிடம் இருந்தால் அது அவர்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்கு பயன்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டன் 25 கோடி பிரிட்டிஷ் பவுண்டு களை செலவழித்து போதை எதிர்ப்பு நிறுவனங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், காவல்துறை மற்றும் சட்டக் குழுக்களை அமைத்து வருகிறது. 

ஜூன் 23, 2008

ஒபாமாவிடம் பிடல் காஸ்ட்ரோ எழுப்பிய சில கேள்விகள்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 1:53 பிற்பகல்

அமெரிக்கக் குடியரசுத்தலைவர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறவுள்ளது. அத்தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளில் ஒன்றாகிய ஜனநாயகக்கட்சி தனது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடை முறையை கடந்த சில மாதங்களாக அரங்கேறிவந்தது. பாரக் ஒபாமாவும், ஹிலாரி கிளின்டனும் இதற்காக தங்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி வந்தனர். இப்போட்டியில் பாரக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது பிரச்சாரத்தில் கியூபாஅமெரிக்க தேசியக் கழகம் என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசினார். கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறியுள்ள கியூபாமக்களிடையே பேசும் போது கியூபாவை பற்றி வெறுப்பை காட்டியுள்ளார் ஒபாமா. அதில்எனது வாழ்நாள் காலம் முழுவதும் கியூபாவில் அநீதியும், ஒடுக்கு முறையுமே நிலவி வந்துள்ளன. எனது ஆயுட்காலத்தில் ஒருபோதும் கியூபா மக்கள் சுதந்திரம் என்பதையே அறியவில்லை. கியூபா மக்களின் இரண்டு தலைமுறையினர் ஜனநாயகம் என்பதை அறிந்திருக்கவில்லை, அரை நூற்றாண்டு காலமாக பயங்கரமான சோகமயமான இந்த நிலை தான் மாற்றமின்றித் தொடர்கிறது. தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியமாகவும் நடைபெற்றதில்லை. இந்த அநீதிக்கு ஆதரவாக நான் இருக்கமாட்டேன். நீங்களும் ஆதரவாக இருக்கமாட்டீர்கள். நாம் இருவரும் இணைந்து நின்று கியூபாவின் சுதந்திரத்துக்காக பாடுபடுவோம்.”கியூபா புரட்சியை ஏற்றுக்கொள்ளாமல் கியூபாவை விட்டு ஓடிவந்து அமெரிக்காவின் கைக்கூளிகள் போல செயல்பட்டு வரும் குடியேறிகளின் ஆதரவைக் கோருவதற்கு வந்த ஒபாமா இவ்வாறு பேசியதில் வியப்படைய எதுவுமில்லை. இப்பேச்சை கேட்ட புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ ஒபாமாவிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஒபாமா தமது உரையில் புலம் பெயர்ந்த் கியூபர்களின் அமைப்பின் ஒரு முக்கிய புள்ளியாகிய ஜோஸ்ஹேர்னாண்டஸ் என்பவரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இவர் யார் தெரியுமா? வெனிசுலாவுக்கு கடல் மார்க்கமாக நவீனரக தானியங்கி துப்பாக்கி ஒன்றையும் வேறு சில பயங்கர ஆயுதங்களையும் கடத்தியவர். வெனிசுலா நாட்டின் மார் கரிட்டா நகரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவைக் கொல்லும் சதித்திட்டத்தை அரங்கேற்றவே இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டது. இந்த சதி முறியடிக்கப்பட்டது. இந்த செய்தி பல அமெரிக்க நாளிதழ்களில் வெளிவந்து இவருடைய மானம் கப்பலேறியாது.

இதோ அவர் கேட்டுள்ள கேள்விகள்:

உலகிலுள்ள எந்த ஒருவரையும் எந்த ஒரு காரணத்திற்காகவும் கொலை செய்துவிட உத்தரவிடும் உரிமை அமெரிக்க ஜனாதிபதிக்கு உண்டா?
மற்ற மனித உயிர்களை சித்திரவதை செய்திட அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிடுதல் அறநெறியின் பாற்பட்டதா?
உலகில் அமைதியை நிலை நாட்டுவதற்குக்காக அரசு பயங்கரவதத்தை ஒரு கருவியாக அமெரிக்கா பயன் படுத்தலாமா?

மிகவும் ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த சிறந்த விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் அமெரிக்காவுக்கு ஈர்க்கப்படுவதும் ஒரு வகையான திருட்டு அல்லவா? இது தருமமா நியாயமா?

அமெரிக்கப் பெருநிலப்பரப்பிலுள்ள எந்த நாட்டிலும் ஐரோப்பிய வல்லரசுகள் தலையிட அமெரிக்கா அனுமதிக்காது என்ற மன்றோ கொள்ளையை பெருமையுடன் வலியுறுத்திள்ளீற்கள். அதேசமயம் உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா தலையிடுவதற்கான உரிமையும் வலியுறுத்தினீர்கள்? இதற்காகத் தானே நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்களை உலகம் முழுவதிலும் அமெரிக்கா பராமரித்து வருகிறது. கடற்படை, விமானபடை போன்றவைகளை உலகெங்கிலும் நிறுத்தி வைத்துள்ளது? இதுதான் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் நடை முறையா?

60க்கும் மேற்பட்ட இடங்களை உலகின் கருப்பு மூளைகளென்று அறிவித்துவிட்டு அவற்றை வலியச் சென்று தாக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக புஷ் அறிவித்துள்ளாரே அது நியாயமா? யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்து குவிப்பதற்காக கோடிக்கணக்கான டாலர் பணத்தை ராணுவத் தொழில்துறையில் முதலீடு செய்வது ஆரோக்கியமானத்தா? மதிப்புமிக்க செயலா? உலக உயிர்களைப் பலமுறை அழிக்கக்கூடிய அளவுக்கு ஆயுதங்களைத் தயாரிப்பது நியாயமா?

இப்படிப்பட்ட நச்சென்ற கேள்விகளை எழுப்பியுள்ள பிடல் காஸ்ட்ரோ இவை எவற்றுக்கும் தாம் பதில்களை எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றையெல்லாம் பதிவு செய்யும் நோக்கத்துடன் மட்டுமே தாம் இவற்றை எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜூன் 22, 2008

எதியூரப்பாகாக 34,000 கோவில்களில் தினசரி பூஜை

கோப்பு வகை: R.S.S, அரசியல், ஜக்கி வாசுதேவ் — குறிச்சொற்கள்: — lightink @ 7:00 மு.பகல்

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நலமுடன் இருப்பதற்காக கோவில்களில் தினசரி பூஜை நடத்த வேண்டும் என்று அம்மாநில அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாஜக அரசில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவியேற்றிருப்பவர் கிருஷ்ணயா ஷெட்டி. இவர் மாநில அறநிலையத்துறை ஆணையர் டி.ஷாம் பட்டை அழைத்து, முதல்வர் நலமாக இருக்க வேண்டி, அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் தினசரி பூஜை நடத்த உத்தரவிடுமாறு கூறினார்.அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகங்ளுக்கு உத்தரவு அனுப்பினார்.

அதன்படி, 34,000 கோவில்களில் தினசரி முதல்வர் பெயரில் பூஜை நடத்த உத்தரவு போனது. இதற்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தின.

மேலும், கர்நாடக சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிவர்மகுமாரின் மகளும்,வக்கீலுமான பெல்லி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த கோயில்களில் பூஜை செய்வதற்கு உண்டான செலவு அத்தனையும் மக்கள் தலையில் தான் விழும். மக்களின் வரிப்பணத்தில் பல சமுதாய செயல்களையும், வளர்ச்சி திட்டத்தை செய்யாமல் இது போன்ற செயல்களை பாஜக செய்வது ஒன்றும் வியப்பெதும் இல்லை. இது வெறும் ஆரம்பம் மட்டுமே!

ஜூன் 12, 2008

புதிய பொருளாதாரம் என்றால் என்ன?

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 11:04 மு.பகல்

 

 

 

விலைவாசிகள் விண்ணைத் தொடுமளவுக்குப் பறக்கின்றன. பண வீக்கமோ அரசின் கட்டுப்பாட்டை மீறிப்போய்க் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 3ம் தேதி பண வீக்கம் 7.83 சதவிதமாக இருந்தது. கடந்த 44 மாதத்தில் இதுதான் அதிகம் என்கிறது மத்திய அரசு. 5 சதவீதம் வரை அனுமதிக்கலாம். அதற்கு மேலே போனால் நாடு தங்காது என்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர்.

பிரதமர் மன்மோகன் சிங் சிமெண்ட் உற்பத்தி செய்யும் முதலாளிகளிடம் கெஞ்சி பார்த்தார் அவர்களும் முட்டைக்கு ஏழரை ரூபாய் வரை குறைபதாக சொல்லியிருக்கிறார்கள். உருக்கு விலையை குறைக்க அவர்கள் காலிலும் விழுந்து எழுந்ததினால் அவர்களும் விலையை குறைப்போம் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள். உயர்த்தும் போது ஏகத்தாளமாக உயர்த்திவிட்டு குறைக்கும் போது கடுகளவுக்கு குறைக்கிறார்கள். இதனால் பண வீக்கம் எப்படி குறையும்? விலைவாசி எப்படி குறையும்?

இந்த விலை உயர்வுக்கும்-பண வீக்கத்துக்கும் அடிப்படை காரணம் எது?

உலகமயக் கொள்கை தான். உலக பொருளாதாரத்துடன் இந்திய பொருளாதாரத்தை இணைத்ததால் ஏற்பட்ட கேடு இது. அப்படி இணைத்ததால் சர்வதேச பகாசுரர்களின் பணம்-நிதி முதலீடு என்ற பெயரில் நமது நாட்டுக்குள் நுழைந்தது. நுழைக்கிறது. இப்படி உலகம் முழுவதும் தங்கு தடையின்றிப் பாயும் பணம் ஊக வாணிபத்தில் ஈடுபடுகிறது. அது தான் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. விலைகளை உயர்த்துகிறது. இந்த பணத்தை கொண்டு கொள்ளையடிக்க முடியாது என்று தெரிந்தாலோ, அரசு அதற்குக் கட்டுப்பாட்டு விதித்தலோ இந்த முதலீடு ஓடி மறைந்துவிடும். அப்போது அந்த நாட்டுப் பொருளாதாரம் படுத்துவிடும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அண்மை அனுபவம் இது.

இந்த நிதி அல்லது பணம் தொடர்ந்து இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பகாசுரர்கள் எதிர் பார்க்கிறார்கள்?

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்திக்கும், வரிக்கும் இடையே உள்ள விகிதச்சாரம் குறைவாக இருக்கவேண்டும். அதாவது லாபத்துக்கு ஏற்ப வரி இருக்கக்கூடாது என்று அர்த்தம். வரி வருவாய் குறையும்போது அரசின் செலவினங்களும் குறையும். மக்கள் நலத் திட்டங்கள் வெட்டப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறையும். நலிவற்றோர் நலத் திட்டங்கள் இரக்கமின்றி குறைக்கப்படும். இதைத் தான் இந்திய அரசு செய்கிறது.

இந்த பகாசுரர் பணத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அடுத்த நிபந்தனை என்ன?

உள்நாட்டு உற்பத்ியை முடக்குதல் அல்லது அழித்துவிடுவது. இன்று இந்தியாவில் உள்நாட்டுப் பொருள் எதையாவது பார்க்க முடிகிறதா? எல்லாமே இறக்குமதி. உள்நாட்டு உற்பத்தி இல்லை. அதனால் வேலை வாய்ப்பு சுருங்கிவிட்டது. இப்படி குவியும் மூலதனம் வளரும் நாடுகளில் பங்கு மார்க்கெட் மூலதனம் குவியக் குவிய அது புகுந்து விளையாடும். அதன் விளைவாக அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். அதுதான் இப்போது நமது நாட்டிலும் நடந்துகொண்டுருக்கிறதது.

ஆடம்பரப் பொருள் இறக்குமதி அதிகரிப்பதால் மக்களிடையே அவற்றின் மீது மோகம் அதிகரிக்கும். அதற்காக குறுக்கு வழியில் பெரும் பொருளிட்ட திடீர் பணக்காரர் ஆகிவிட ஆசை வரும். இப்போது நாம் காணும் தங்கக்காசு மோசடி உள்ளிட்ட மோசடிகளுக்கெல்லாம் அதுவே அடிப்படை. இது கலச்சார சீரழிவின் முதல் கட்டம். இதன் காரணமாக உள்நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பு குறைந்து அதன் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு தொழில்கள் நசியும்.

அடுத்த அம்சம் என்ன? சிறு வணிகர்கள்சிறிய தொழில்களை பெரு முதலைகள் கபளீகரம் செய்வார்கள். அந்நிய முதலீடு இதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் சிறு வியாபாரிகள்விவசாயிகள் எல்லோரும் அழிவார்கள். மக்களின் வாங்கும் சக்தி குறையும். இது உற்பத்ியை மேலும் அழுத்தும். இதன் விளைவாக அந்த நாடு ஏதாவது வளர்ச்சி அடைந்த நாட்டை நம்பியிருக்கும். இப்போது காலனி ஆக்காமலே ராணுவ பலத்தைப் பிரயோகிக்காமலேயே ஒரு நாட்டை அடிமைப் படுத்திட முடியும்.

ஆனால் மன்மோகன் சிங் அரசு வேறு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. It is late than never என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. என்றுமே செய்யாமல் விடுவதை விட தாமதமனாலும் செய்து விடுவது சிறந்தது என்று இதற்கு பொருள். இப்போது தாமதமாகிவிட்டது என்றாலும் நாட்டை மீட்டெடுக்க தேவையான அவகாசம் உண்டு. செய்யுமா மன்மோகன், சிதம்பரம் கும்பல்?

ஜூன் 10, 2008

சிறைக்குள் ஒரு நாடு

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 4:28 பிற்பகல்

அமெரிக்க சிறைகளைப் பற்றிப் பல தகவல்கள் படித்திருப்போம். அமெரிக்காவில் உள்ள சிறைக் கைதிகளைப் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் 2.3 மில்லியன் மக்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின் இருக்கிறார்கள். உலகத்தில் இவ்வளவு அதிகமான கைதிகளை கொண்ட நாடு வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறதுமனித உரிமை கண்காணிப்புஎன்கிற அமைப்பு.

1960

களில் அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்களுக்கு 110 சிறைக் கைதிகள் என்ற விகிதம் இருந்தது. தற்போது ஒரு லட்சத்திற்கு 1100 என்கிற விகிதத்தில் உயர்ந்து உள்ளதாம். இது போன்று பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கு 152, கனடாவில் 108, பிரான்சில் 91. இவற்றை பார்க்கும் போது உலகத்தில் மிகப்பெரிய ‘ஜெயிலராக’ அமெரிக்கா திகழ்வது தெரிகிறது. அமெரிக்கக் கைதிகளில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உயர்கிறது.

கைதிகளில் 70 சதம் படிக்காத மக்கள், கைதிகளுள் ஏழை மக்கள், மனநிலை பதிக்கப்பட்டோர், போதைப்பழக்கத்திற்கு அடிமையானோர், குடிக்ாரர்கள், போதை மருந்து விற்பவர்கள் தான் அதிகம். இவர்களில் 25 சதம் பெண்கள். வெள்ளை இன மக்களை விட, கருப்பு இன மக்கள் தான் அதிகம் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள் என்பது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல். இன்றைக்கு அமெரிக்கா சிறை தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு, அவை ஒருசில பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக மாறிவருகிறது.

ஃபோர்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை விட அமெரிக்க சிறைச்சாலை தான் அதிக அளவு வேலைக்கு ஆள் எடுக்கிறது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்பட அனைத்து குடியரசு நாடுகளை விட அமெரிக்காவில் மட்டும் சிறை கைதிகள் ஏன் அதிகம் என்று மக்கள் சிந்திக்கவேண்டும். பிற நாட்டு மக்களின் பாதுகாவலானத் தன்னை சித்தரிக்கும் அமெரிக்காவில் சிறைகள் நிரம்பி வழியும் மர்மம் தான்என்ன?

ஜூன் 9, 2008

தமிழக கோமாளியா விஜயகாந்த்?

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 4:18 பிற்பகல்

நாமக்கல்லில் பல்வேறு கட்சிகளில் இருந்து பலர் தேமுதிகவில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
அதில் விஜயகாந்த் பேசுகையி்ல்,

நன்றாக சிந்தித்து பாருங்கள். காமராஜர் 3 முறையும், எம்.ஜி.ஆர். 2 முறையும் தொடர்ச்சியாக முதல்வர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது திமுக, அதிமுக ஆட்சி தொடர்ச்சியாக இருப்பதில்லை. ஏன்?.

அது

நாங்க பண்ண தப்பு இல்ல; எங்க முன்னோர்கள் பண்ணது?

தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை மாற்ற ஆட்சி மாற்றம் வேண்டும். மக்கள் தான் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

அப்ப

உங்க ஆட்சி வராதூன் சொல்றீங்க!

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 1998ம் ஆண்டு ரூ. 450 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது. அப்போது நிறைவேற்றாததால் இந்த திட்ட மதிப்பு இன்று ரூ. 1,300 கோடியாக உயர்ந்துவிட்டது.

நீங்க

அப்பவே குரல் குடுத்து இறுதிங்கினா திட்டம் நிறைவேறி இருக்குமே? என் குடுக்கல? ! ஐம் வெரி சாரி நீங்க அப்ப கட்சி ஆரம்பிக்கல இல்ல!!!

நாமக்கல் கோழி, முட்டை உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது. ஆனால் கோழித் தீவன மூலப்பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு தீவனம் கிடைப்பதில்லை.

இதேபோல் விவசாயிகளுக்கு உரம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

எப்படி

பெட்ரோல் விலை குறைய பழநியில் தங்கதேர் இழுத்ிங்களோ இதுக்கும் ஒரு வாட்டி தங்கதேர் இழுத்ிங்கினா விலை குறையும் தலைவா!

நான் சட்டசபையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடையில் நின்றுவிடும் நிலை உள்ளதாகக் கூறினேன். அப்போது மறுத்தவர்கள் இன்று அதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மார்க் குறைவாக பெறுகிறார்கள். அதற்கு காரணம் நிர்வாகம் சரியில்லாதது தான். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம்.

ஆமாம்

தலைவா உங்கள மாதிரி அவங்களும் கோடி கோடியா வாங்குறாங்களா? இல்ல, ஆசிரியர்களுக்கு எப்ப சம்பளத்த உயர்த்ினாங்க?

முதலில் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும்.

ஆனா

காலேஜ் மட்டும் ஆண்டால் அழகர், வெங்கடேசுவரலா மட்டும் தான் படிக்கணும்.

கவர்ச்சிகரமான திட்டங்கள் வேண்டாம், வளர்ச்சிகரமான திட்டங்களை நிறைவேற்றுங்கள். பெண்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும். அதுபற்றி கேட்டால் கொள்கை ஒத்துப் போவதாக கூறுவார்கள்.

நீங்களும்

பல கட்சியோடு கூட்டணி பேசநீங்க ஆனா யாரும் ஒத்து வரல மக்களோடு மட்டும் தான் கூட்டணி சொன்னீங்க, நாளைக்கு யார் கூடயாவது கூட்டணி வைச்சா அதுக்கு தான் இந்த பதிலா( நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறும். அதுபற்றி கேட்டால் கொள்கை ஒத்துப் போவதாக கூறுவார்கள்)

நான் ஆட்சிக்கு வந்தால் சமச்சீர் கல்வி கொடுப்பேன். ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும். போலி ரேசன் கார்டுகள் ஒழியும். படிக்காத இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வேலை உத்தரவாதம் இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால் படிக்காத இளைஞர்களுக்கு வேலை கொடுப்பேன். என்னை பொருத்தவரையில் நாளை நமதே, நாற்பதும் நமதே.

இது

எல்லாம் கவர்ச்சி திட்டம் இல்லையா எல்லாம் கவர்ச்சி திட்டம் இல்லையா

?

பெட்ரோல், டீசல் விலை கடந்த 20 ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது. கரும்பில் இருந்து எத்தனால் தயாரித்து பெட்ரோலுடன் கலக்கும் தொழிற்சாலைகள் இல்லை. அவ்வாறு கலந்து விற்பனை செய்தால் நிச்சயமாக விலை குறையும்.

அப்ப

சக்கரைக்கு எங்க போறது?

ஜூன் 7, 2008

46 வழிகளில் விலையை அதிகரிக்கலாம்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 8:46 மு.பகல்

அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், காய்கறிகள், பயறுவகைகள், என அன்றாடம் பயன்படுத்தும் சகல பொருட்களின் விளைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த பொருட்களை வாங்க மளிகைக் கடைக்குச் செல்வோர், இவ்வளவு கொள்ளை லாபம் அடிக்கிறாரே என கடைக்காராரை சபிப்பது உண்டு. ஆனால் விலையை எப்படி உயர்த்துவது, அதுவும் விற்பனை குறையாமல், விலை உயர்வை திட்டாமல், நுகர்வோரை சிரித்துக் கொண்டே பொருளை வாங்க வைப்பது என கற்றுக் கொடுப்பதற்காகவே பெரிய நிறுவனங்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இங்கல்ல……. அமெரிக்காவில்!

உணவு தானியங்களின் பற்றாக்குறைக்கும், பதுக்கலுக்கும், அதன் மூலம் மிகக்கடுமையான விலை உயர்வுக்கும் காரணகர்த்தா அமெரிக்காவே என்பது அம்பலப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் விலையை எப்படி உயர்த்துவது என்பதற்காகவே பள்ளிக்கூடம் நடத்தி வருவது இப்போது அம்பலம் ஆகியுள்ளது. நுகர்வோரின் மனம் நோகாமல் விலையை உயர்த்துவதற்கு எளிமையான 46 வழிகள், விலையை உயர்த்தி உங்கள் லாபத்தை பல மடங்கு பெருக்க 52 வழிகள் என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் அமெரிக்காவில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் மெர்லின் ஜென்சென் என்ற பெண்மணி விலைஉயர்வை ஏற்க வைப்பதற்கான உளவியல் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் 11 பாகங்கள் உள்ளன. இவரது நூல் அமெரிக்காவில் வர்த்தகர்களிடையே பிரபலமாகியுள்ளது. இவரை மார்க்கெட் குரு என்று அழைக்கிறார்கள். இந்த குருவை பின்பற்றி இந்தியாவிலும் பல்வேறு பிசினஸ் குருக்கள் உருவாகி வருகிறார்கள்.

உங்களது உற்பத்ிப் பொருளின் தற்போதைய விலையில் ஒரு சதவீதம் அதிகரித்தால், 12 சதவீதம் லாபம் கிடைக்கும்; 5 சதவீதம் அதிகரித்தால் 60 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும், அதற்கான வழிகளையும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு இவர்கள் கூறுகிறார்கள். ஒரு பொருளின் விலையை அச்சிடுவதிலும் கூட நுகர்வோரை ஏமாற்ற முடியும் என்று இவர்கள் பகிரங்கமாக புத்தகம் அடித்து விற்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு பொருளின் விலை 9.90$ என்று குறிப்பிட்டிருக்கும்; அடுத்த பேட்ச்சில் அதே பொருளின் விலையை 9.98$ என்று குறிப்பிடலாம்;
அதற்கடுத்த பேட்ச்சில் 9.99$ என்று குறிப்பிடலாம். அச்சிடப்படும் இந்த நுண்ணிய எழுத்துகள் பொதுவாக
நுகர்வோர் கவனிப்பதில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் வாங்கும் பொருட்களில் 0.9 சதவீதம் அளவிற்கு விலையை அதிகரித்து விற்றல் கூட பல கோடி டாலர் கூடுதல் லாபம் பெரும் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.

இப்படித்தான் படிப்படியாக அனைத்து விதமான பொருட்களின் விளையும் திட்டமிட்டு அதிகரிக்கப்படுகிறது. அதை வாங்க வேண்டிய மனநிலையும் கட்டாயமும் நுகர்வோரிடம் உருவாக்கப்படுகிறது. முதலாளித்துவ மூலதனம் லாபத்தை தேடித்தேடி வெறியோடு அலைக்கிறது. அந்த லாபவெறிக்கு துணையாக இத்தகைய அமெரிக்க நிறுவனங்களும், முதலாளித்துவ பிசினஸ் குருக்களும் இடைவிடாமல் வேலை செய்கிறார்கள்.

ஜூன் 6, 2008

ஜெ-விஜய்காந்துக்கு தா.பாண்டியன் சூடு

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 3:46 பிற்பகல்

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நாளை தமிழகத்தில் பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்துக்கு சிஐடியுவுடன் இணைந்த ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பதால் தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஆட்டோக்கள் ஓடாது.

அதே போல சென்னை கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோக்களும் நாளை இயங்காது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊழியர் சங்கங்களும் பங்கேற்கவுள்ளனர். ஆனாலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளின் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பந்த்தில் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்துக் கொண்டே மறுபக்கம் இடதுசாரிகள் பந்த் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறுகையில்,

கேள்வி: மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்து கொண்டு மறுபக்கம் அரசை எதிர்த்து `பந்த்’ நடத்துவது சரியா?

பதில்: அதுதான் எங்கள் வழி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். எங்கள் வழி தனி வழி.

கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்கள் கட்சி நிலைப்பாட்டை கண்டித்துள்ளாரே?

பதில்: அவர் எங்களுக்கு வழி காட்டி அல்ல.

கேள்வி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் விமர்சித்துள்ளாரே?

பதில்: அவரிடம் பாடம் கற்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல என்றார்.

ஜூன் 3, 2008

வாசுந்தரா ராஜே சிந்தியாவின் அராஜகம்

கோப்பு வகை: R.S.S, அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 9:04 மு.பகல்

                             

குஜ்ஜார்களை பழங்குடி பட்டியலில் சேர்த்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் பாஜகவினர் அளித்த பொய்யான உறுதிமொழி தற்போது பெரும் போராட்டத்தைக் கிளப்பிவிட்டது. தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பிரச்சனைகள் எழும் போதெல்லாம் மக்களை அலட்சியமாகக் கருதியே வாசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளுக்காக ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2006ஆம் ஆண்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் எழுச்சியுடன் போராடியபோது தயக்கமின்றி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஆறு அப்பாவி விவசாயிகள் குண்டு துளைத்து உயிர்ழந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு அதே விவசாயிகள் தண்ணீர் திறந்து விடக்கோரி போராட்டம் நடத்தினார். அப்போது அவர்களை மாபியா (கொள்ளை கும்பல்) என்று குறிப்பிட்டார். ஆனால் இதே பிரச்சனைகளை
மையமாக வைத்து மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராட்டம் நடத்துமாறு விவசாயிகளை பாஜக தூண்டி வருகிறது.

2008 இறுதியில் பதவிக்காலம் முடிவதால் அதற்குள் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு ஆதாயம் தரும் வேலை ஒன்றைச் செய்யவும் பாஜக அரசு முனைந்துள்ளது. அவசர நிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வுதியம் தரப்போகிறார்கள். மே மாதம் முதல் வாரத்தில் இதற்கான அரசானை வெளியிட்டுவதற்கான வேலை நடைபெற்றது. இத்தகைய ஆலோசனை வந்தவுடனே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நெருங்கிய சகாவான சித்தராஜ் தத்தா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக வழங்கப்படும் தியாகிகள் ஓய்வுதியத்தையே இவர் வழங்கவில்லை. இதை அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அவசரநிலைக் காலத்தில் சிறையில் இருந்தவருமான ஓம் சைனி, “31 ஆண்டுகள் கழித்து இவர்கள் ஏன் இதைக் கொண்டு வரவேண்டும்? இதற்கு முன்பு மூன்று முறை ஆட்சியில் இருந்துருக்கிறார்கள். தற்போது தேர்தல் வரும் வேளையில் ஆர்எஸ்எஸ்காரர்களை திருப்திப்படுத்தவே இதைக் கிளப்பியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

தனது நான்கு ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 80க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துருக்கிறார். நாம் எல்லோரும் இந்து என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் இந்துகளை கொள்வார்கள்

 

ஜூன் 2, 2008

எடியுரப்பா ஆட்சிக்கு திடீர் ஆபத்து

கோப்பு வகை: R.S.S — குறிச்சொற்கள்: — lightink @ 9:29 மு.பகல்

கர்நாடக முதல்வராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா வெள்ளியன்று பதவி ஏற்றார். முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் மைசூர் சென்று வழிபாடு செய்தார். வெள்ளியன்று நள்ளிரவில் 2.30 மணிக்கு அவர் வீடு திரும்பினார். அவரது வீட்டில் ஓமகுண்டம் வளர்க்கப்பட்டு தடபுடலாக பூஜை நடந்தது. இதை தொடர்ந்து அவர் மல்லேசுவரம் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர் பதவியேற்பதற்கு சூரியநமஸ்கார பூஜை செய்தார். முதல்வர் அறைக்குச் சென்றவுடன் நாற்காலிக்கு பூஜை செய்வதோடு அங்கு சிறிய வடிவிலான விநாயகர் சிலையை வைத்தும் வழிபாடு நடத்தினார்.

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதன் பிறகு தான் எடியுரப்பாவிற்கு பிரச்சனையே. காரணம், அவரின் ஜோதிடர் கே. என். சோமையாஜி சொன்னதுவெள்ளை வேட்டியை பஞ்ச்சகச்சம் போல கட்டிக்கொண்டு, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பச்சை சால்வை அணியவேண்டும். இதற்கு மாறாக எடியுரப்பா பேண்ட், சட்டை அணிந்து கொண்டு பதவி ஏற்றுள்ளார். அடுத்து, சோமையாஜி சொன்ன நேரத்தில் பதவி ஏற்காமல் வேறொரு நேரத்தில் பதவி ஏற்றுள்ளார். இது அவரது பதவிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்து உள்ளார் ஜோதிடர் கே. என்.சோமையாஜி.

எனினும் வேறொரு ஜோதிடர் சொன்ன அடிப்படையில் தான் எடியுரப்பா பதவியேற்கும் போது பேண்ட், சட்டை அணிந்து இருந்தார் என்றும், நல்ல நேரத்தில் தான் பதவியேற்றார் என்றும் அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த விஷயம் பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது என்பதை பற்றி பேச எடியுரப்பாவை இன்று நடைபெறும் டெல்லி கூட்டத்திற்கு அவசியம் கலந்து கொள்ளும்மாரு பாஜக மேலிடம் எடியுரப்பாவிற்கு கட்டளை இட்டுள்ளது

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.