“விலைவாசி உயர்ந்து விட்டது என்று மக்களிடம் பீதி உண்டாக்கவேண்டாம்” என்று எதிர்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறார் மன் மோகன் சிங். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயரப்போகிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் அன்றாடம் மக்களிடம் பீதியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஒரு சுற்று உயரும். இதனால் ஏற்கனவே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். விலைவாசியை குறைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது. இனி என்ன நடவடிக்கை எடுக்கலாமென்று எதிர்க்கட்சிகள் யோசனை கூறட்டும் என்று எதிர்ப்பாட்டு பாடுகிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை குறைத்தால் விலை குறையும். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறும் யோசனையை பரிசிலிக்க ப. சிதம்பரம் பிடிவாதமாக மறுக்கிறார். இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.செவ்வாய்
அன்று நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்த பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களுக்கு ஏற்படும் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை தடுக்க பெட்ரோலியப் பொருட்கள் மீதான இறக்குமதி மற்றும் எக்சைஸ் வரியை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்தலாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்கம் ஆலோசித்து வருகிறது. இவ்வாறு உயர்த்ினால் எண்ணைய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில் நாள் ஒன்றுக்கு ரூ. 580 கோடி குறையும். ஆனால் அதே நேரத்தில் தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சதவீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருமானம் ரூ. 1380 கோடி. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் ஒரு சதவீதத்தை குறைத்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும். கச்சா எண்ணைய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமானம் கிடைக்கும் தற்போது விற்க்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ. 14.35 ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60 கலால் வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளது. இதை காரணம் காட்டி பெட்ரோல் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன எனவே அதை தனியாருக்கு விற்று விட ஒரு பக்கம் சிதம்பரம் முயற்சிக்கிறார்.தன்
பேரன் தயாநிதிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கவில்லை என்றவுடன் ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று மிரட்டிய கருணாநிதியும், தன் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது அமைச்சர் ஆனால் நடுத் தெருவில் கட்டி வைத்து செருப்பால் அடியுங்கள் என்று கூறிவிட்டு தன்னுடைய மகனை மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்கும் ராமதாஸ், ராமர் பாலம் இடித்ததன் மூலம் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டது என்று உச்ச நீதிமன்றம் வரை போராடிய புரட்சித் தலைவி செயலலிதாவும், இராம கோபாலனும், CIA உளவாளியான சுப்பரமணி சாமியும் வாயையும் இன்னமும் உடம்பில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டு மவுனம் சாதிப்பது ஏன்?