சுவர் இடிக்கப்பட்ட பிறகு தலித்துகளின் முகத்திலா விழிப்பது என்று வீட்டைப் பூட்டி வெளியேறி வனவாசம் கிளம்பிய உத்தப்புரம் சாதிவெறியர்கள் வந்து ஆக்ரமித்த தோப்புகளும் தோட்டங்களும் தலித்துகளுடையது
சாதிக்கொழுப்பால் மெழுகிக் கட்டிய தங்கள் சுவரை இடித்துவிட்டார்களே என்ற கவலையில் அன்னம் தண்ணி ஆகாரமில்லாமல் காய்ந்து தீய்ந்து கருவாடாய்க் கிடக்கவில்லை பிள்ளைமார்கள். தலித்துகளின் மூத்திரத்தில் வளர்ந்திருந்த வேப்பந்தோப்பின் நிழலில் அண்டா அண்டாவாக ஆக்கி அவித்து தின்று கொழுத்தார்கள் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்
இருபதுஅடி சுவற்றை இடித்ததற்காக இன்னும் எதையெல்லாம் இடிக்கக் காத்திருக்கிறார்களோ…?
மலையடிவாரத்திலிருந்த தலித் வெள்ளையம்மாள் வீட்டையும் சூறையாடியிருக்கிறார்கள் பிள்ளைமார். எதையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பது இனிதான் தெரியும்
தலித்துகளின் கழிவுகளைத் தின்று வளர்ந்திருந்த நாட்டுக்கோழிகள் 150 ம் இப்போது பிள்ளைமார் வயிற்றில். றெக்கைகளை தின்ன முடியாதென்பதால் விட்டுப் போயிருக்கின்றனர்.
தலித் நாகராஜ் தோட்டத்தில் அடித்து உடைக்கப்பட்ட பாசன பைப்.
குடும்ப அட்டையை திருப்பித் தந்துவிட்டதற்காக குடிமக்கள் இல்லை என்றாகிவிடுமா? மலையடிவாரம் முழுக்க இறைந்து கிடக்கும் டாஸ்மார்க் ப்படுத்தப்பட்ட சாமந்தித் தோட்டம்
சோளநாத்தும் தப்பவில்லை
நாகராஜ் வீட்டையும் சூறையாடிப் போயுள்ளனர். அவர்கள் எடுத்துக் கொண்டு ஓடியதுபோக எஞ்சியப் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன