பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடக் கூடாது என்று தடை விதித்து, அவற்றைத் தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்திட அனுமதிக்கப்பட்டிருப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு உள்ள தொடர்பை டில்லியிலிருந்து வெளிவரும் ‘தி பயனீர்‘ நாளிதழ் படம்பிடித்து காட்டியுள்ளது.
இது தொடர்பாக ‘தி பயனீர்‘ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
“மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு மிகவும் நெருங்கிய சகாவான ஒருவரின், சென்னையை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்வதற்கு 14 கோடி ரூபாய் வங்கி ஒன்றின் மூலம் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.
மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார்.
இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது.
கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர்களும், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.
திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.
தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி இ. சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.
தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியமாக வைத்திருக்கிறோம்.
உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன. இவ்வாறு தி பயனீர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.