மாதம் மும்மாரி பொழிகிறதா?

மே 3, 2008

நேற்று திடீரென்று கூடிய காங்கிரஸ் கூட்டத்தின் முடிவுகள்.

கோப்பு வகை: அரசியல் — lightink @ 4:26 மு.பகல்

நேற்று பல்வேறு தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் இந்தியாவின் பண வீக்கம் சுமார் 7.53 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டின. இதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நேற்று இரவு அவசரமாக தனது காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டியது.

இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் .சிதம்பரம், வருங்கால பிரதமர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய விவாதமாக இந்தியாவின் விலைவாசிக்கு முக்கிய காரணத்தை கண்டு அறிவது, அதை எவ்வாறு கட்டுபடுத்துவது, அதன்மூலம் உயர்ந்து வரும் பண வீக்கத்தை கட்டுபடுத்துவதை பற்றி பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் சுமார் அதிகாலை 3 மணி அளவில் முடிவடைந்தாக நம்பிக்கையான செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி டெல்லி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. உடனே பத்திரிகையாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வெளியுறவு துறை அமைச்சர் பிரானாப் முகர்சி கூட்டத்தின் முக்கிய முடிவுகளை செய்தியாளரிடம் தெரிவித்தார்.

1. விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் விலைவாசி தான்.
2. விலைவாசி உயர்வை பற்றி கவலை பட்டு வந்த மத்திய அரசு இனிமேல் இதைப் பற்றி அதிகமாக கவலைப்படும்.
3. பண வீக்கத்தை கட்டுபடுத்த ஓய்வு பெற்ற மருத்துவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்.
அந்த குழு தனது அறிக்கையை வரும் 2020குள் அளிக்கும். அப்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.                                                                    4.மேலும், வதந்’தீ பரவியுள்ள இடங்களில் மாநில அரசின் உதவியுடன் வதந்’தீ கட்டுப்படுத்தபடும். இதற்காக சுமார் 3000 தீ
அணைப்பு வண்டிகள் அமெரிக்காவிடம் வாங்கப்படும்

இவ்வாறு பிரானாப் முகர்சி தெரிவித்தார்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.