மத்திய அரசின் பித்தலாட்டாம்

மே 29, 2008

தியாக சீலரா எடியூரப்பா?

கோப்பு வகை: R.S.S, அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 7:51 மு.பகல்

கர்நாடக தேர்தல் முடிவு எடியூரப்பாவின் தியாகத்திற்கும், கவுடாகுமாரசாமி குடும்பத்தின் துரோகத்திற்க்கும் கிடைத்த முடிவு என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவும், தேவ கவுடா கட்சியும் ஆளுக்கு பாதி என்ற அடிப்படையில் ஆட்சியமைத்தன. முதலில் முதல்வரான குமாரசாமி தமது பதவிக் காலம் முடிந்தவுடன் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தார்.

எடியூரப்பா உடனடியாக பதிவியை தியாகம் செய்கிறேன் என்று அறிவிக்கவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் சென்று தேவகவுடா குடும்பத்தின் மீது மணல் வாரி தூற்றினார். இனிமேல் பாஜகவினர் கோயிலுக்கு செல்லும் பொழுது, தேவகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இடையில் கவுடா கட்சி திடீரென்று பல்டி அடித்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. உடனடியாகதியாக சீலர்எடியூரப்பா ஓடோடிச் சென்று முதல்வர் நாற்காலியை கைப்பற்றினார். ஒரு வார காலம் தான் அவரது ஆட்சி நீடித்தது. ஒரு நாளேனும் முதல்வராக இருந்தால் போதும் என்று ஆலாய்ப் பறந்தவர் எப்படி தியாக சீலர் ஆனார் என்று புரியவில்லை. சந்தர்ப்பவாதத்தின் கடைக்கோடிக்கு சென்றது கவுடா கட்சி மட்டும் அல்ல பாஜகவும் தான்.

எடியூரப்பா குறுகிய காலம் ஆட்சியில் இருந்த போதும், அந்த இடைக்காலத்தில் புரிந்த சாதனையை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி என்ன எடியூரப்பா ஒரு வார காலத்தில் சாதனை செய்தார் என்பது தான் புரியவில்லை. அடுத்ததாக நம்மூர் இல. கணேசன்கர்நாடக முதல்வராக பொறுப் பேற்றுள்ள எடியூரப்பா ஒரு அப்பழுக்கற்ற தேச பக்தர் என்றும், அவர் நிச்சயம் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு இடையூறு செய்யமாட்டார் என்று கூறுகிறார். ஓகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தம் என்று முதன் முதலாக கிளப்பி விட்டதே எடியூரப்பா தான். அப்போது இல. கணேசன்பாவம் எடியூரப்பா விபரம் தெரியாதவர், அவரை யாரோ ஓகே நக்கலுக்கு சுற்றுலா போகலாம் என்று அழைத்து வந்து விட்டார்கள் என்று கூறினார்.

இப்படி யார் கூப்பிட்டாலும் எங்கு வேண்டுமானாலும் சென்றும் போராட்டம் நடத்தும் எடியூரப்பா நாளை குஜ்ஜார் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ராஜஸ்தான் சென்றாலும் ஆச்சரியம் இல்லை. பாவம் கர்நாடக மக்கள்.

மே 28, 2008

சிதம்பரத்தின் பிடிவாதம்

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 8:18 மு.பகல்

விலைவாசி உயர்ந்து விட்டது என்று மக்களிடம் பீதி உண்டாக்கவேண்டாம்என்று எதிர்கட்சிகளுக்கு அறிவுரை கூறுகிறார் மன் மோகன் சிங். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயரப்போகிறது என்று மத்திய ஆட்சியாளர்கள் அன்றாடம் மக்களிடம் பீதியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஒரு சுற்று உயரும். இதனால் ஏற்கனவே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். விலைவாசியை குறைக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விட்டது. இனி என்ன நடவடிக்கை எடுக்கலாமென்று எதிர்க்கட்சிகள் யோசனை கூறட்டும் என்று எதிர்ப்பாட்டு பாடுகிறார் மத்திய நிதியமைச்சர் . சிதம்பரம்.

பெட்ரோலியப் பொருட்களுக்கான வரியை குறைத்தால் விலை குறையும். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறும் யோசனையை பரிசிலிக்க . சிதம்பரம் பிடிவாதமாக மறுக்கிறார். இடதுசாரி கட்சிகள் மட்டுமின்றி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.செவ்வாய்

அன்று நிதியமைச்சர் . சிதம்பரத்தை சந்தித்த பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்களுக்கு ஏற்படும் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை தடுக்க பெட்ரோலியப் பொருட்கள் மீதான இறக்குமதி மற்றும் எக்சைஸ் வரியை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்தலாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்கம் ஆலோசித்து வருகிறது. இவ்வாறு உயர்த்ினால் எண்ணைய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில் நாள் ஒன்றுக்கு ரூ. 580 கோடி குறையும். ஆனால் அதே நேரத்தில் தற்போது அமலில் உள்ள கலால் வரியில் ஒரு சதவீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருமானம் ரூ. 1380 கோடி. டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் ஒரு சதவீதத்தை குறைத்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்து 270 கோடி வருமானம் கிடைக்கும். கச்சா எண்ணைய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 699 கோடி வருமானம் கிடைக்கும் தற்போது விற்க்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் ரூ. 14.35 ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60 கலால் வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.சர்வதேச

சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளது. இதை காரணம் காட்டி பெட்ரோல் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன எனவே அதை தனியாருக்கு விற்று விட ஒரு பக்கம் சிதம்பரம் முயற்சிக்கிறார்.தன்

பேரன் தயாநிதிக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கவில்லை என்றவுடன் ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று மிரட்டிய கருணாநிதியும், தன் குடும்பத்தை சேர்ந்தவர் யாராவது அமைச்சர் ஆனால் நடுத் தெருவில் கட்டி வைத்து செருப்பால் அடியுங்கள் என்று கூறிவிட்டு தன்னுடைய மகனை மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்கும் ராமதாஸ், ராமர் பாலம் இடித்ததன் மூலம் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டது என்று உச்ச நீதிமன்றம் வரை போராடிய புரட்சித் தலைவி செயலலிதாவும், இராம கோபாலனும், CIA உளவாளியான சுப்பரமணி சாமியும் வாயையும் இன்னமும் உடம்பில் உள்ள அத்தனை ஓட்டைகளையும் அடைத்துக் கொண்டு மவுனம் சாதிப்பது ஏன்?

மே 23, 2008

உத்தமபுரம் பிள்ளைமர்களின் காட்டுமிரண்டித்தனம்

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 6:31 பிற்பகல்

                                                                           சுவர் இடிக்கப்பட்ட பிறகு தலித்துகளின் முகத்திலா விழிப்பது என்று வீட்டைப் பூட்டி வெளியேறி வனவாசம் கிளம்பிய உத்தப்புரம் சாதிவெறியர்கள் வந்து ஆக்ரமித்த தோப்புகளும் தோட்டங்களும் தலித்துகளுடையது

                              சாதிக்கொழுப்பால் மெழுகிக் கட்டிய தங்கள் சுவரை இடித்துவிட்டார்களே என்ற கவலையில் அன்னம் தண்ணி ஆகாரமில்லாமல் காய்ந்து தீய்ந்து கருவாடாய்க் கிடக்கவில்லை பிள்ளைமார்கள். தலித்துகளின் மூத்திரத்தில் வளர்ந்திருந்த வேப்பந்தோப்பின் நிழலில் அண்டா அண்டாவாக ஆக்கி அவித்து தின்று கொழுத்தார்கள் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்

                                                 இருபதுஅடி சுவற்றை இடித்ததற்காக இன்னும் எதையெல்லாம் இடிக்கக் காத்திருக்கிறார்களோ…?  

 

                  மலையடிவாரத்திலிருந்த தலித் வெள்ளையம்மாள் வீட்டையும் சூறையாடியிருக்கிறார்கள் பிள்ளைமார். எதையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பது இனிதான் தெரியும்

                                                     தலித்துகளின் கழிவுகளைத் தின்று வளர்ந்திருந்த நாட்டுக்கோழிகள் 150 ம் இப்போது பிள்ளைமார் வயிற்றில். றெக்கைகளை தின்ன முடியாதென்பதால் விட்டுப் போயிருக்கின்றனர்.
                                                                 தலித் நாகராஜ் தோட்டத்தில் அடித்து உடைக்கப்பட்ட பாசன பைப்.
                                                     குடும்ப அட்டையை திருப்பித் தந்துவிட்டதற்காக குடிமக்கள் இல்லை என்றாகிவிடுமா? மலையடிவாரம் முழுக்க இறைந்து கிடக்கும் டாஸ்மார்க்                                                                                                                                                                              ப்படுத்தப்பட்ட சாமந்தித் தோட்டம்                                        சோளநாத்தும் தப்பவில்லை                                               நாகராஜ் வீட்டையும் சூறையாடிப் போயுள்ளனர். அவர்கள் எடுத்துக் கொண்டு ஓடியதுபோக எஞ்சியப் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன

மே 21, 2008

ஜாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளுக்கு

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 12:02 பிற்பகல்

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்’ என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி’ என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் “பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்’ என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் “பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்’ என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை “அபிதானகாசம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.

(30.11.1930 அன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய‘குடிஅரசு’ தலையங்கம்)

மே 16, 2008

அன்புமணியின் (தடுப்பூசி)ஊழல்

கோப்பு வகை: மருத்துவம் — குறிச்சொற்கள்: — lightink @ 8:39 மு.பகல்

பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடக் கூடாது என்று தடை விதித்து, அவற்றைத் தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்திட அனுமதிக்கப்பட்டிருப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு உள்ள தொடர்பை டில்லியிலிருந்து வெளிவரும் தி பயனீர்நாளிதழ் படம்பிடித்து காட்டியுள்ளது.

இது தொடர்பாகதி பயனீர்நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு மிகவும் நெருங்கிய சகாவான ஒருவரின், சென்னையை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள தனியார் கம்பெனி ஒன்றுக்கு தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்வதற்கு 14 கோடி ரூபாய் வங்கி ஒன்றின் மூலம் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி மருந்துகளை நாட்டில் உள்ள மூன்று பொதுத்துறை நிறுவங்களும் உற்பத்தி செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகத்தால் தடை விதிக்கப்பட்ட தேதிக்கு இரு வாரங்களுக்கு முன்பு தான் இவ்வாறு இந்தத் தனியார் நிறுவனம் வங்கியிடமிருந்து கடன் பெற்றிருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சரான அன்புமணி ராமதாஸ், 2007 ஜூனில் வெளியான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, தடுப்பூசி மருந்துகளை இதுநாள் வரையில் இந்தியாவில் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவங்களான குன்னனூர் பாஸ்டியர் ஆராய்ச்சி மையம், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடம் மற்றும் கௌசாலி மத்திய ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்று நிறுவங்களும் இனிமேல் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யக்கூடாது, மூடிவிட வேண்டும் என்று இந்த ஆண்டு ஜனவரி 27 அன்று ஆணை பிறப்பித்தார்.

இவ்வாறு வங்கிக் கடன், கொடுப்பதற்கு, மேற்படி தனியார் நிறுவனம் எத்தனை பிணையமாக (Hypothecate)வைத்திருக்கிறது தெரியுமா? இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்த, மூன்று நிறுவனங்களின் ஒன்றான பிசிஜி தடுப்பூசி ஆய்வகத்துடன் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தையே வங்கியில் கடன் பெறுவதற்கு பிணையமாக வைத்திருக்கிறது. இவ்வாறு ஒரு தனியார் நிறுவனம் 14 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனத்தையே அடகு வைத்திருக்கிறது.

கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனத்தின் உரிமையாளர்களும், அன்புமணி ராமதாசும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி. சுந்தரபரிபூரணம் என்பவர் அரசியல்வாதியாக இருந்து வணிகராக மாறியவர். இந்த நிறுவனம் 2005 நவம்பரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்திடலாம் என்று 2007 டிசம்பரில் அதாவது அன்புமணி ராமதாஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்த போதுதான் முடிவு செய்திருக்கிறது.

திடீரென்று பி. சுந்தரபரிபூரணம் வணிகராக மாறுவதற்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியில் கொஞ்சகாலம் நிர்வாகியாக இருந்துருக்கிறார். அப்போதே ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது உண்டு. மதுரை மீனாட்சி மருத்துவ கல்லூரிக்கு சில உபகரணங்களை விநியோகம் செய்ததிலும், தமிழகத்தின் சில கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேபணை இல்லா சான்றிதழ்கள் (no objeection certificate) பெற்றதிலும் முறைகேடுகள் செய்திருப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த பி. சுந்தரபரிபூரணம் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கும் அவரது மைத்துனரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத்துக்கும் நெருங்கிய கூட்டளியாவார்.

தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும், சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் முன்பு இயக்குநராக இருந்த டாக்டர் என். இளங்கேஸ்வரன், அன்புமணி ராமதாசின் ஆசைப்படி இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்வதை நிறுத்தி, அவற்றை மூடச் செய்வதற்கு, உறுதுணையாக இருந்துருக்கிறார். இவரது மனைவி . சாந்தி, சுந்தரி பரிபூரணம் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான மற்றொரு கம்பெனியான வாட்சன் பயோ பார்மா என்னும் நிறுவனத்தில் பெரிய அளவில் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த கம்பெனியும் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது.

தற்சமயம் டாக்டர் என். இளங்கேஸ்வரன் சென்னையில் உள்ள மத்திய அரசு சுகாதரப் பணிகள் அலுவலகத்தில் சீனியர் ஸ்பெஷலிஸ்ட் (மைக்ரோபயலஜி) ஆகப் பணியாற்றி வருகிறார். இவர் மீது இப்போது ஆட்களைத் தேர்வு செய்தது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி மருந்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு இளங்கேஸ்வரன் குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்திலும் சென்னை பிசிஜி தடுப்பூசி ஆய்வுக் கூடத்திலும் அதிகாரியாகப் பணியாற்றிய சமயத்தில் முழுமையாக உதவி புரிந்துள்ளார். கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனம் இளங்கேஸ்வரனை இது தொடர்பாக கலந்தாலோசனை செய்தது தொடர்பாக மின் அஞ்சல்களின் நகல்களை சாட்சியமாக வைத்திருக்கிறோம்.

உலக சுகாதார ஸ்தாபனம், மேற்படி பொதுதுறை நிறுவனங்களை மேம்படுத்திட உதவதற்கு முன்வந்தததை, மத்திய சுகாதார அமைச்சர் வேண்டும் என்றே உதாசீனம் செய்துவிட்டார். மேற்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் நாட்டின் தேவையில் 90 சதவீத தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வந்தன. இவ்வாறு தி பயனீர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்திய மக்களுக்கு தடுப்பூசியை மற்ற பன்னாட்டு கம்பெனிகள் விலை அதிகமாக விற்று கொண்டு இருக்கும் வேளையில் விலை மலிவாக தரும் இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களை மூடிவிட்டு தனியருக்கு தாரைவார்கிறார் அன்புமணி. இவரது தந்தையோ இந்திய மக்களின் மேல் அக்கறை கொண்டவர் போல் சிகேரெட் பிடிக்க வேண்டாம், மது அருந்த வேண்டாம் என்று நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார். உண்மையில் உலக சுகாதார நிறுவனம் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் தான் அறிவுறுத்தி இருக்கிறதே தவிர மூடச்சொல்லவில்லை.

மே 13, 2008

அணு சக்தி ஒப்பந்தம் பெப்பே!!!

கோப்பு வகை: டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 10:17 மு.பகல்

இந்தியா அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு சாத்தியம் என்பது நிச்சயம் இல்லை. இதற்காக அமெரிக்கா அப்துல் கலாம் முதல் ஆயா வரை இறக்கி பார்த்து விட்டது. இன்னமும் பல அமெரிக்க பொருளாதார அடியாட்களை இறக்கினாலும் வேலைக்கு ஆவாது. காரணம், இந்த உடன்பாடு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேமாத இறுதிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கவேண்டும். மேலும், அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இறுதி வாக்கெடுப்புக்கு செல்லும், முன்பாக சர்வதேச அணுசக்தி கழகத்துடன் இந்தியா இன்னமும் பேச வேண்டியுள்ளது.
அத்துடன் அணு எரிபொருள் வழங்கும் 45 நாடுகளுடன் பேச வேண்டியுள்ளது. ஆக எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் ஒப்பந்தம் நிறைவேறும் என்று காத்திருந்த அமெரிக்க முதலாளிகள் கண்கள் சிவந்தது தான் மிச்சம். இதை அறிந்த புஷ்யும், காண்டலிசாவும் இந்தியர்கள் மேல் தனது வெறுப்பை காட்ட தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடு தான் இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.

மே 8, 2008

403.3 டன் தங்கம் விற்பனைக்கு

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 5:27 பிற்பகல்

சர்வதேச நிதியமான .எம்.எப். (IMF) தன் வசமுள்ள தங்கத்தில் 12 சதத்தை விற்பதென முடிவு செய்துள்ளது. 1994ம் ஆண்டு பிரட்டன்வுட்ஸ் நகரில் துவங்கப்பட்ட ஐஎம்எப்-ன் நோக்கம் நாடுகளின் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியை அதாவது வர்த்தக பற்றாக் குறையை (TRADE DEFICIT) ஈடுசெய்வதே என்று சொல்லப்பட்டது. ஆனால் வளரும் நாடுகளை தங்கள் கடன் வலையில் வீழ்த்தி அந்நாடுகள் மீது கடும் நிபந்தனைகளை சுமத்தி, நாடுகளின் இறையாண்மையை பறிமுதல் செய்யும் ஏகத்திபத்திய கருவியாக உலக வங்கியும் ஐஎம்எப்பும் நடை முறையில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐஎம்எப் தன் வசமுள்ள தங்கத்தில் ஒரு கணிசமான பகுதியை விற்பதென முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 403.3 டன் எடையுள்ள தங்கத்தை ஐஎம்எப் விற்க இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலர் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1000 அமெரிக்க டாலர்களை தண்டிவிட்டது. ( ஒரு அவுன்ஸ் என்பது சுமார் 28 கிராம், அதாவது முன்றரை பவுன்), ஆனால் ஒரு அவுன்ஸ் 850 டாலர் விலையில் விற்கலாம் என்ற மதிப்பிட்டிலே 11 பில்லியன் டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக பெயர் குறிப்பிடாத ஒரு ஐஎம்எப் அதிகாரி கூறிஇருக்கிறார். இந்த நிதியைக் கொண்டு நிதியத்தின் நிதியதரத்தை மேம்படுத்தவும், பலவிதமான புதிய முதலிடுகளை மேற்கொள்ளவும், மேம்பட்ட முறையில் வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டுருப்பதாக ஐஎம்எப்-ன் நிர்வாக இயக்குநர் டாம்னிக் ஸ்ட்ராஸ் கான் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த அளவிற்கு ஐஎம்எப் இறங்கிவர முக்கிய காரணம், வெனிசுலா அதிபர் சாவேஸ் உலக வங்கிக்கு மாற்றாக தென்புல நாடுகளின் வங்கிஎன்ற அமைப்பு தோற்றுவித்தது தான். இந்த வங்கி நிபந்தனையற்ற கடன்களை மூன்றாம் உலக நாடுகள் பெற வழிவகுக்கும் யோசனையை முன் வைத்திருப்பதும், தென் அமெரிக்க கண்டத்தில் அர்ஜென்டினா, ஈக்வடார் போன்ற நாடுகள் ஐஎம்எப்பிலிருந்து வெளியேறியது இன்னொரு முக்கியமான காரணம். ஐஎம்எப் தனது தங்கத்தை விற்பனை செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனுமதி வழங்க வேண்டும். அப்படியே அனுமதி கிடைத்தாலும் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் இல்லாமல் தனது தங்கத்தை விற்க முடியாது.

சரி, சுமார் 403.3 டன் தங்கம் சந்தையில் திடீரென்று குவிந்தால், தங்கத்தின் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பும் நியமானது தான். ஆனால் இன்றைய சர்வதேச பொருளாதாரச் சூழலை உற்று நோக்கினால், தங்கத்தின் விலையில் பெரும் வீழ்ச்சி நிகழாது என்றே தோன்றுகிறது. 403 டன் தங்கத்தையும் ஒரே நாளில் ஐஎம்எப் விற்கப் போவதில்லை. அதை ஒரு குறிப்பிட்ட காலஅளவுக்கு நீடித்த வகையில் தான் செய்யப்போகிறது என்பது ஒரு காரணம்.

இன்னொன்று நீதி மூலதனத்தின் லாபத் தேவைகளை பங்கு சந்தை தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். அதனால் மேலும் தங்கத்தை வெளியிடுவதன் மூலம் தங்கம் விலை உயரத்தான் வாய்ப்பு உள்ளதே தவிர குறைய வாய்ப்பு இல்லை.

THE HINDU 19.4.2008

மே 6, 2008

எஸ்.ஆர்.எம்.யு. (SRMU) தொழிற்சங்க தலைவர் கைது

கோப்பு வகை: சத்குரு ஜக்கி வாசுத — குறிச்சொற்கள்: — lightink @ 11:14 மு.பகல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முதல் முறையாக எஸ்.ஆர்.எம்.யு. (SRMU) தொழிற்சங்க தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்தியாவில் பல்வேறு கட்சிகளும் தொழிற் சங்கம் நடத்தி வருகின்றன. சில பூஸ்வா சிந்தனை உள்ளவர்கள் தலையை ஆட்டும் மனிதர்களை வைத்துக் கொண்டு சங்கங்களை நடத்தி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு தொழிற்சங்கம் தான் எஸ்.ஆர்.எம். யு. இந்தியாவில் அதிகம் படித்த மக்கள் கொண்ட மாநிலம் கேரளா. இந்த கேரளா மாநிலத்தின் எஸ்.ஆர்.எம்.யு அமைப்பின் மாநில தலைவராக இருப்பவர் பிரசன்னா. இவர் திருவனந்தபுரம் ரயில்வேயில் சீனியர் டிக்கெட் பரிசோதகராக பணியற்றுக்கிறார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் உள்ளது. ஆனால், தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு,அடியாட்கள் பலம் இவற்றை வைத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி புகார்களை விசாரணை என்ற பெயரில் காலம் கடத்துவர். இல்லை, புகார் குடுத்வரை மிரட்டி புகரை வாபஸ் பெற வைத்து விடுவார். இவரை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டி இட முடியாது. இவர் நியமிக்கும் ஆட்கள் தான் சங்க நிர்வாகிகள் அப்படி ஒரு ஜனநாயக புலி இவர். இடம் மாறுதல், பதவி உயர்வு, வேலை நியமனம், புதிய பணி இடங்களில் ஆட்களை நியமித்தல் எல்லாம் இவர் கண் அசைவில் கண கச்சிதமாக நிறைவேறும்.

இதனிடையே பிரசன்னா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் சி.பி. அதிகாரிகள் கொல்லத்தில் உள்ள பிரசன்னா வீட்டை சோதனையிட்டனர். அப்போது இரண்டு கோடி ரூபாய் சொத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் கொல்லம் அருகே பரலுரில் புதியதாக கட்டியுள்ள அவரது வீடு, வங்கி கணக்கையும் சோதனை செய்ததில் மேலும் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இவர் மனைவியின் பெயரிலும் பல கோடி ரூபாய் சொத்தும் உள்ளது. அவையும் கணக்கிட சி.பி..க்கு உத்தரவு இடப்பட்டு உள்ளது. இவரைப் போல அதிகாரம் படைத்த பல தலைவர்கள் டாடா சுமோக்களில் தொண்டர்கள் புடை சூழ
வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் தான் தன்னுடைய பாவங்களை இரட்சிக்க வந்த கடவுள் என்று தொழிலாளி வர்க்கம் நம்பிக் கொண்டு இருக்கிறது

இறுதியாக பிரசன்னா இரும்பு கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார். பல தொழிலாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி கொழுத்த பிரசன்னாவை சுற்றி அவருடைய இரத்தத்தை உறிஞ்சுவதர்காக கொசு மட்டும் சுற்றி வருகிறது

மே 5, 2008

விஜயகாந்தின் உளறல்

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்:, — lightink @ 4:12 பிற்பகல்

தமிழ் சினிமாவில் அதிக வசனம் பேசுவது யார் என போட்டி வைத்தால் அதில் நிச்சயம் விஜயகாந்திற்கு முக்கிய இடம் இருக்கும்! அந்த அளவிற்கு அவர் போடும் கணக்குப் பட்டியல் மிமிக்ரி கலைஞ்சர்களின் நாவிற்கு தீனியாகிப் போனது. அந்த அளவு பேசுவார்!

சில மாதங்களுக்கு முன் நான் யாருடனும் தேர்தலில் கூட்டு வைத்துக் கொள்ளமாட்டேன், தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்தார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் வாங்கிய மரண அடியின் காரணமாக, தற்போது கண்டபடி உளற ஆரம்பித்து உள்ளார்.

டெல்லியில் தனது கட்சியின் அலுவலகத்தை திரந்து வைத்த போது இந்தியாவில் மதவாத கருத்துக்களை பரப்பி மக்களை கூறு போட்டு ஆட்சியில் அமர துடிக்கும் பாஜகவுடன் கூட்டு சேர தயார் என அறிவித்துள்ளார். இதோடு விட்டால் பரவ இல்லை, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்து உள்ளத்தால் தனது அரசியல் அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக் காட்டி உள்ளது. அதோடு விடாமல் கூட்டணி கட்சிகள் இவரிடம் எழுதி தரவேண்டுமாம்! விஜயகாத்தின் டில்லிப் பேச்சு காமெடி என்றால் சன் நியூஸ் அதைபிளாஷ் நியூஸ்என்று போட்டு பதட்டப்படுத்தியது சூப்பர் காமெடி.

அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக உள்ள பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து எதுவும் தெரியாமல் அறியாப்பிள்ளையாக அறிவித்துள்ள விஜயகாந்தின் கட்சிக்கு என்ன கொள்கை உள்ளது என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. இந்த அழைப்பு என்பது ஆட்சிக்காக எதையும் செய்ய தயார் என்று சொல்வதன் மூலம் இந்தியாவில் உள்ள ட்டு பொறுக்கி கட்சியில் தேமுதிகவும் சேர்ந்து விட்டது. தெய்வத்துடன் மட்டும் தான் கூட்டணி என்று சொன்ன விஜயகாந்த் இப்போது எந்த தெய்வம் கூட்டணி அமைத்து கொள்? என்று சொன்னது தான் தெரியவில்லை.

மே 4, 2008

விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம்-புஷ்

கோப்பு வகை: பகுக்கப்படாதது — குறிச்சொற்கள்: — lightink @ 4:12 பிற்பகல்

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் பேசுகையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம். இரு நாடுகளில் உள்ள மக்களும் அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். சத்தான உணவு வகைகளை அவர்கள் அதிகம் சாப்பிட விரும்புகின்றனர். இதனால்தான் உணவு தானியங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

நேற்று மிசெளரியில் அதிபர் புஷ் பேசுகையில், இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம். இந்திய நடுத்தர வர்க்கத்தினர் இப்போது சத்தான உணவு வகைகளையே அதிகம் விரும்புகின்றனர். இது அமெரிக்காவை பாதிக்கும் அளவுக்கு உள்ளது.

இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் தேவை அதிகம் என்பது, அமெரிக்காவின் தேவைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். தேவை அதிகரிப்பதால் விலைவாசியும் உயருகிறது. உணவுக்கு நெருக்கடியும் ஏற்படுகிறது.

மேலும், இந்தியாவில் உள்ளவர்கள் ஐந்து வேலை சாப்பிடுகிறார்கள். இந்தியர்களுக்கு இரண்டு வயிறு உள்ளது, இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ளத்தால் உடனடியாக போர் தொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்திய அரசாங்கம் எப்படி விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியாதோ அதேபோல் நடு தர மக்களையும் கடன் வலையில் சிக்கவைக்க வேண்டும்.இந்திய மக்கள் அமெரிக்க உணவான பீசா, பர்கர், கோக், பெப்ஸி, சேன்ட்வெஜ், போன்றவற்றை அதிகமாக சாப்பிடாமல், வெறும் அரிசி, கோதுமை, காய், கரிகலை அதிகமாக ஊட்கொல்கிறார்கள்.இந்திய மக்கள் 70 கோடி பேர் தினமும் ஒருவேளை மட்டும் 100mlக்கு கஞ்சி குடிக்கிறார்கள். என்று கூறியுள்ளார் புஷ்.

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.