மாதம் மும்மாரி பொழிகிறதா?

April 28, 2008

பகத் சிங் தனது தோழர். சுகதேவ்க்கு எழுதிய கடிதங்கள்

கோப்பு வகை: பகுக்கப்படாதது — குறிச்சொற்கள்:, , , , , — lightink @ 5:12 பிற்பகல்

 

                                                        காதல், தியாகம், தற்கொலை, மரணம் ஆகியவை குறித்து பகத்சிங் கொண்டிருந்த கருத்துக்களை அவர் சுகதேவுக்கும், படுகேஸ்வர் தத்துக்கும் எழுதிய கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன புரட்சியாளர்கள் எனப்படுவோர் ‘உணர்ச்சியற்ற எந்திரங்கள்’ என்ற அவதூறையும், ‘உணர்ச்சி வேகத்தில் அறிவிழந்த இளைஞர்கள்’ என்ற பித்ற்றலையும் ஒருங்கே முறியடிக்கின்றன இக்கடிதங்கள்.சுகதேவும், பகத்சிங்கும் மிகவும் நெருங்கிய தோழர்கள், வெடிகுண்டு வீசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவற்றை தீர்த்துவைக்கும் நோக்கத்துடன் பகத்சிங், சுகதேவிற்குக் கடிதம் எழுதினார். ஏப்ரல் மாதம் 11-ம் தேதியன்று சுகதேவ் கைது செய்யப்பட்ட சமயத்தில், இக்கடிதம் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. அதன்பின் அது வழக்கு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகிவிட்டது. அக்கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

அன்புள்ள சகோதரருக்கு,

இந்தக் கடிதம் கைக்குக் கிடைப்பதற்குள் நான் எனது இலட்சியம் நோக்கிய திசையிலே வெகுதூரம் சென்றிருப்பேன்। என்னை நம்பு; இப்பொழுதெல்லாம், நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறுதிப் பயணத்திற்குத் தயாராகிவிட்டேன்….. நானும் வாழ்க்கையின் ஆசைகளும் அபிலாஷைகளும் நிறைந்தவன் தான் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்; இருந்தாலும் வேண்டி வந்தால் எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிறேன். மெய்யாகவே தியாகம் செய்வேன். மனிதன் உண்மையான மனிதனாக இருக்கும் பட்சத்தில், இவை இடையூறாக இருக்கவே முடியாது. இதற்கான சான்று உனக்கு விரைவிலேயே கிடைக்கும்.
ஒரு மனிதனின் குணாதிசயங்களைப் பற்றி ஆராயும்போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விசயம் காதல் ஒரு மனிதனுக்கு, எங்காவது உதவியாக இருந்திருக்கிறதா என்பதுதான்। இதற்கான பதில் — ஆம், இருந்திருக்கிறது என்பதுதான். ஆம், அவர்தான் மாஜினி. தமது முதல் புரட்சியின் தோல்வியையும், தமது கடுமையான தோல்வியின் வேதனையையும், இறந்துவிட்ட தமது சகாக்களின் நெஞ்சைப் பிழியவைக்கும் நினைவுகளையும், அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தன என்று படித்திருப்பாய். ஆனால், அவருடைய அன்புக் காதலியிடமிருந்தான ஒரு கடிதம் மட்டும் வராமல் இருந்தால், அவருக்குப் பைத்தியமே பிடித்திருக்கலாம்; அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

இந்தக் கடிதம்தான், அவரை மற்றவர்களைப் போலவே வலிமையுள்ளவராக ஆக்கியது. சொல்லப்போனால் மற்றவைகளைவிட மிக வலிமையானவராகச் செய்தது.

காதலின் தார்மீக ரீதியான நிலையைப் பொறுத்தமட்டில், காதல் என்பது மனக்கிள்ர்ச்சி। அதாவது உணர்ச்சி வேகத்தைத் தவிர வேறெதுவுமில்லை என்றுதான் நான் கூறுவேன். அது ஒரு மிருக இயல்புணர்ச்சி அல்ல; ஆனால், இனியதோர் மனிதாபிமான மனக்கிளர்ச்சி. காதல் காதலாகவே இருக்கும் பட்சத்தில், மனித குணாதிசயங்களை, அது எப்போதுமே மேலான நிலக்கு உயர்த்துகிறது; கீழே சரிவதற்கு ஒரு போதுமே அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களைப் பைத்தியம் என்று ஒருபோதுமே கூறமுடியாது. நாம் திரைப்படங்களில் பார்க்கிறோமே – அங்கே அவர்கள் எப்போதுமே, மிருக இயல்புணர்ச்சியின் கரங்களில் தான் விளையாடுகிறார்கள்.
மெய்யான காதலை ஒருபோதுமே உருவாக்கிட முடியாது; அது தானாகவே வளருகிறது। எப்போது என்று யாருமே சொல்ல முடியாது.
இளம் ஆண்களும் பெண்களும், ஒருவரையொருவர் காதலிக்கலாம்। காதலின் துணையோடு அவர்கள் தங்கள் காமவெறிகளுக்கு உயரே உன்னதமான ஒரு நிலையை எட்டலாம்; தங்கள் நேர்மையையும் தூய்மையையும், மாசுபடாமல் வைத்திருக்கலாம் என்று நான் கூறுவேன்….
கடமையுணர்வின் அடிப்படையில் ஒரு மனிதன் முடிவெடுக்கும் போது காதலையும், வெறுப்பையும், வேறு எல்லா மன உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடிந்தால் அதுவே மிக உயரிய, இலட்சியப்பூர்வமான ஒரு மனநிலையாக அமையும்

ஒரு தனிநபருக்கு, இன்னொரு தனி நபரின்பால் ஏற்படும் காதலை, அதுவும் கூட, இலட்சியப்பூர்வமான செயல்பாடுகளைக் கோருகின்ற நிலைமைகள் இருக்கும் சூழ்நிலையில் ஏற்படுகின்ற காதலைத்தான் நான் கண்டனம் செய்துள்ளேன்। ஒரு மனிதன், ஆழ்ந்த காதல் உணர்வு கொண்டிருக்க வேண்டும்; அது, ஒரு தனி மனிதரிடம் மட்டுமே காட்டப்படாமல், உலகனைத்துக்குமே உரியதாய் அமைந்திட வேண்டும்

அன்புள்ள சகோதரா,

உன் கடித்தத்தை, நான் மிகுந்த கவனத்துடன் திரும்பத் திரும்பப் படித்தேன்। மாறியுள்ள சூழ்நிலைகள் நம்மை வெவ்வேறான விதத்தில் ஈர்த்திருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். நீ சிறைக்கு வெளியே இருந்த காலத்தில் வெறுத்து ஒதுக்கிய விசயங்கள் இப்பொழுது உனக்கு இன்றியமையாதவை ஆகியுள்ளன.அதுபோல, நான் சிறைக்கு வெளியே இருந்தபோது ஆதரித்துவந்த விசயங்கள் இப்பொழுது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரியவில்லை. உதாரணமாக, இதற்கு முன்னர், தனிமனிதரின் காதலுக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தேன்; ஆனால் இப்போதோ, அந்த காதலுக்கு, என் இதயத்திலும் மனதிலும் குறிப்பிட்ட இடம் எதுவுமே இல்லை. வெளியில், நீ அதை வன்மையாக எதிர்த்தாய், ஆனால் இப்போதோ, இதுபற்றிய உன் கருத்துக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன; மானுட வாழ்க்கையில், காதல் இன்றியமையாத பகுதி என்றும் இப்போது நீ கருதுகிறாய்। இந்த அனுபவம் உனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.
தற்கொலையைப்பற்றி நான் ஒருநாள் உன்னிடம் பேசியது, உனக்கு நினைவிருக்கலாம்। குறிப்பிட்ட ஒருசில சந்தர்ப்பச் சூழ்நிலைகளில், அது சரியாகவே இருந்திருக்கலாம் என்று நான் அப்போது கூறினேன். ஆனால், நீ எனது கருத்துக்களை எதிர்த்தாய்.
இத்தகைய கோழைத்தனமான செயலை, நியாயமானது என்று கருதவே முடியாது என்று நீ பரிகாசமாக கூறினாய்। ஆனால், இந்த விஷயத்தைப் பற்றியதான உன் கருத்துக்களும்கூட, இப்பொழுது முழுக்க முழுக்க மாறிவிட்டன என்பதை நான் உணருகிறேன். இப்போது, குறிப்பிட்ட ஒரு சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் கீழ், அது நியாயமானது மட்டுமல்ல இன்றியமையாதது என்றும் நீ கருதுகிறாய்.
ஆனால், தற்கொலை என்பது முற்றிலும் கோழைத்தனமான, வெறுக்கத்தக்க குற்றம் என்றும் நீ முன்னர் கூறிய அதே கருத்துக்களை ஒத்தவையாகவே எனது கருத்துகளும் இன்று அமைந்துள்ளன। எந்த ஒரு மனிதனுமே, அதனை நியாயமானதாகக் கருதமுடியாது. அப்படியிருக்க, புரட்சியாளர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?….இதுதவிர, தங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் என்றே நம்மில் சிலர் நம்புகிறார்கள். அவர்கள் விசயத்தில், மரண தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் பின்னர், மரண தண்டனையும் நிறைவேற்றப்படும்வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அது ஒரு அழகான இனிய சாவாகவும் இருக்கும்
ஆனால், தற்கொலை செய்து கொள்வது என்பது, குறிப்பிட்ட சில இன்னல்களையும் துன்பங்களையும் விட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயிரை விடும் கோழைத்தனம்। இன்னல்கள், ஒரு மனிதனை முழுமையாக்குகிறது என்பதை நான் உனக்குக் கூற விரும்புகிறேன். நானோ- நீயோ – நம்மில் யாருமே இன்னும் இன்னல்களை அனுபவிக்கவில்லை; நமது வாழ்க்கைகளின் இந்தப் பகுதி இப்பொழுதுதான் தொடங்குகிறது….
புரட்சியாளர்களாக” இருந்து வருவதில், பெருமைகொள்ளும் நம் போன்ற மக்கள், தாங்களாகவே தொடங்கியுள்ள போராட்டங்கள் வாயிலாக வரவழைத்துக் கொண்டிருக்கும், இன்னல்களையும் இடர்பாடுகளையும், வேதனையையும், துன்பங்களையும் பொறுத்துக் கொள்வத்ற்குத் தயாராகவே இருக்க வேண்டும்….
சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் வரை துன்பங்களை அனுபவித்த ஒரு மனிதர், அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்னர் கொண்டிருந்த அதே கருத்துக்களையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்று நீ எழுதுகிறாய்। சிறைச்சாலைச் சூழ்நிலைகள், அவரது சிந்தனைகள் அனைத்தையும் நொறுக்கி பொடியாக்கிவிடும் என்றும் காரணம் காட்டுகிறாய்.
சிறைக்கு வெளியே நிலவும் சூழ்நிலை, நமது கருத்துக்களுக்கு இசைவானதாக இருக்கிறதா என்று நான் கேட்கட்டுமா? தோல்விகளின் காரணமாக, நாம் அவற்றைக் கைவிட்டிருக்க முடிந்திருக்குமா? இந்தத் துறையில் நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பித்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்!
கம்யூனிசத்தின் படைப்பாளியான கார்ல் மார்க்ஸ், இந்தச் சிந்தனையை உருவாக்கிடவில்லை என்றும் நான் கூறுவேன்। குறிப்பிட்ட சில சிந்தனையாளர்களை உருவாக்கியதே ஐரோப்பாவில் தோன்றிய தொழில்துறைப் புரட்சிதான்! அவர்களில் கார்ல் மார்க்ஸும் ஒருவராக இருந்தார். காலச்சக்கரத்துக்கு, ஓரளவிற்கு, குறிப்பிட்ட ஒரு உந்துதலை அளிப்பதில் கார்ல் மார்க்ஸ் தம் சொந்த முறையிலே மிகவும் உதவியாக இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த நாட்டில், கம்யூனிசம் மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு, நான் (ஏன் நீயும் கூட) உயிர் கொடுக்கவில்லை। மாறாக, நமது காலங்கள் மற்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகள், நம்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவுதான் அது. இந்தக் கருத்துக்களை எங்கும் பரப்பிடச் செய்வதில் நாமும் எளிமையான அளவில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இந்தப் பொறுப்பான பணியின் சுமையை நாம் நம்மீது சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதால், அப்பணியைத் தொடர்ந்து நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நான் கூறுகிறேன். கஷ்டங்களைத் தவிர்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பது மக்களுக்கு நல்வழி காட்டாது; மாறாக, அது ஒரு பிற்போக்குச் செயலாகவே அமையும்….

வாழ்வு, மரணம் போன்ற விசயங்களிலும் நாம் முற்றிலும் உலகாயத முறையிலேயே சிந்திக்க வேண்டும்। ஒருமுறை, நான் தில்லியிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்ட போது, உணவு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், இந்த விசயத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். எந்த ஒரு ரகசியத்தையும் வெளியிட நான் தயாராக இல்லாத்தாலும், என் உயிரைக் காப்பதில் நாட்டம் காட்டாததாலும், நான் வாழ்க்கையில்விரக்தி அடைந்து விட்டேன் என்பதை அது நிரூபித்து விட்டதாக அவர்கள் கூறினார்கள். என் மரணம் ஒரு தற்கொலைக்கு ஒப்பாகவே இருக்கும் என்பது அவர்களின் தர்க்கம்.
அதற்கு நான் சொன்ன பதில்: “என் போன்று திடமான நம்பிக்கையும் எண்ணங்களும் கொண்ட ஒருவன், வீணாக இறந்துபோவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டான்। வாழ்க்கையை அதிக அளவு பயன்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். முடிந்தவரை மானுட நல்ன்களுக்குத் தொண்டு செய்வதே எங்கள் நோக்கம். குறிப்பாக, துயரமோ கவலையோ இன்றி வாழும் மனிதன், தற்கொலையைப் பற்றி சிந்திப்பதே முறையற்றது என்றுதான் கருதுவான். அப்படியிருக்க, அச்செயலில் எப்படி இறங்குவான்?” அவர்களுக்குச் சொன்ன அதே பதிலைத்தான் உனக்கும் சொல்ல விரும்புகிறேன்.
உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்கிறாயா? எனக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை; இதுவிசயத்தில், தண்டனைக் குறைப்போ அல்லது முழு அளவிற்கான மன்னிப்போ அளிக்கப்படும் என்பதில் எனக்குச் சற்றும் நம்பிக்கை இல்லை। அப்படியே பூரண மன்னிப்பு அளிக்கப்பட்டாலும்கூட, அது அனைவருக்கும் அளிக்கப்படமாட்டாது. அதிலும் எனக்கு மன்னிப்பு கிடைக்காது; இருந்தும்கூட நமக்கு விடுதலையளிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
மக்கள் கிளர்ச்சியாக நமது இயக்கம் மலர்ந்து உச்சகட்டத்தை அடையும் சமயத்தில் நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்வது என்பது விருப்பம்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.

 


April 26, 2008

ஸ்ரீசாந்த்துக்கு ‘பளார்’

கோப்பு வகை: பகுக்கப்படாதது — lightink @ 9:22 மு.பகல்

இந்த முறையும் ஹார் பஜன்சிங் மீண்டும் தனது கோபத்தை இந்திய வீரர்ரிடமே காட்டி இருக்கிறார். எப்போதும் ஆட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கோபமாக காணப்படும் ஸ்ரீ சாந்த் வெற்றியை கொண்டாடும் சந்தோஷத்தில் எதிரணி கேப்டன் ஹர்பஜன் காதில் ஏதோ கூறியுள்ளார். இதில் கடுப்பான ஹர்பஜன் ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த், அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

கிரிக்கெட்டில் இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே பாகிஸ்தான் அணியை சேர்த்த ஆஷிப்பும் ஆக்தரும் கட்டி புடித்துக் கொண்டு அடித்துக் கொள்ளாத குறைத்தான். இந்த சம்பவம் பற்றி ஹர்பஜனிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் சொல்லாமல், கிரிக்கெட் பற்றி ஏதாவது கேளுங்களேன் என்று நழுவிவிட்டார்.அறைவாங்கிய ஸ்ரீசாந்தும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. விளையாட்டில் இப்படி நடப்பதெல்லாம் சகஜம். மோசமாக ஒன்றும் ஆகிவிடவில்லை. நான் வருத்தப்படவில்லை என்று கூறி உள்ளார்.

ஆனால், இது ஓர் அசிங்கம் என்று பஞ்சாப் அணி கேப்டன் யுவராஜ்சிங் கூறி உள்ளார். ஹர்பஜன் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில்இது ஒரு மோசமான சம்பவம். வெற்றி பெற்று சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது மைதானத்துக்கு வெளியே இப்படி நடந்து கொள்வதை யாரும் விரும்பமாட்டார்கள். இந்த சம்பவம் எனக்கு வருத்தமளிக்கிறது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் இதுஎன்றார். நடந்த சம்பவத்தை பார்த்தால் இருவரும் ஒருவருக் ஒருவர் நாகரிக அற்ற முறையில் நடந்துகொண்டு உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

திறமைக்கான விளையாட்டு என்ற நிலை மாறி பணத்திற்கான விளையாட்டு என்று மாறியதால் வந்த வினை இது.

April 23, 2008

இந்திய பட்ஜெட்டில் முதலாளிக்கு 3,80,655 கோடி தள்ளுபடி

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 4:27 பிற்பகல்

சமீபத்தில் நண்பர் வீட்டுக்கு சென்ற போது அங்கு குப்பை தொட்டியில் போட்டுவதற்காக வைத்திருந்த துக்ளக் புத்தகத்தை படிக்க நேர்த்து. அதில் சோ விவசாய கடன் தள்ளுபடி பற்றி தனது கவலையை தெரிவித்து இருந்தார். அதில், “இப்படிக் கடன் தள்ளுபடி ஆவது, பொருளாதாரத்திற்கு நல்லதல்ல; கடன் வாங்கினால், நாளை அது தள்ளுபடி என்ற வழக்கம், ஊதாரிதனத்தையும், நேர்மையின்மையும் வளர்க்கும்; பொருளாதாரத்தையும் நசுக்கும்.” என எழுதிருக்கிறார். ஆனால், இந்தசோவும் மற்ற பத்திரிகைகளும் அரசாங்கத்தின் மற்றொரு புறத்தில் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிக்கு அரசாங்கம் தரும் சலுகைகளும், கடன் தள்ளுபடி பற்றி எழுத துப்பு இல்லை.

கடந்த (2007-08) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அள்ளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் மட்டும் 58,655 கோடி ரூபாய்.

பங்கு நிறுவங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச் சலுகை ரூபாய். 4,000 கோடி.
தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகை ரூபாய். 38,000 கோடி
தொழில் நிறுவங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச்சலுகை ரூபாய். 88,000 கோடி
சுங்க வரி விதிப்பில் கோடுக்கப்பட்ட சலுகை ரூபாய். 1,48,000 கோடி
பெரு முதலாளிகள் இந்திய அரசு வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாமல் மத்திய அரசால் வாராக்கடன் என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய். 44,000 கோடி.

ஆக, மொத்தம் மத்திய அரசால் (2007-08) பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய். 3,80,655 கோடி.

இந்தியாவின் ஓட்டு மொத்த பட்ஜெட்டில் 3,80,655 கோடி தள்ளுபடி என்ற பெயரால் இந்திய மக்களின் வரி பணத்தை முதலாளிக்கு வரி வழங்கும் சிதம்பரம், விவசாயிக்கு 66,000 கோடி (இதுவே ஒரு பிராடு) தள்ளுபடி செய்ததை பெரிதாக பீற்றிக் கொள்கிறார்.

April 20, 2008

மும்பை கலவரமும் காங்கிரசின் பாசிசமும்

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 4:52 பிற்பகல்

மும்பை கலவரம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கலவரத்தை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டப் பல பேரை குற்றவாளிகள் என அடையாளம் காட்டியிருக்கிறது. எனினும், அரசியல் செல்வாக்கு மிக்க குற்றவாளிகள் ஒருவர் கூட இன்று வரை தண்டிக்கப்படவில்லை. குறைந்த பட்சம் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாகக் கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவோம்” என்ற வாக்குறுதியை அள்ளி வீசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி. ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன் எப்போதும் போல தான் அளித்த உறுதிமொழியை மறந்துவிட்டது. இது ஏதோ ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு அல்ல. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ள போது தான் மும்பை கலவரம் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது கலவரம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் மொத்தம் 2256. இதில் 1,371 வழக்குகள் போலீஸ் விசாரணையின் போதே குழி தோண்டி புதைக்கப்பட்டன. 539 வழக்குகள் நீதிமன்றத்ால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். 253 வழக்குகள் நீதிமன்ற விசாரணை என்னும் நாடகத்தில் சிக்கி தவிக்கின்றன. 93 வழக்குகள் நீதிமன்றதிற்கு அனுப்பப்படாமல், அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் மும்பை கலவரம் தொடர்பாக, சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே மற்றும் அக்கட்சியின் நாளேடுசாம்னாமீதும் ஒன்பது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மூன்று வழக்குகள் அராசலே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. நான்கு வழக்குகளில் குற்றப் பத்திரிகை வினையப்படாததால்(Framing of Charges) பால் தாக்கரேயும், பிற குற்றவாளிகளும் அவ்வழக்குகளில் இருந்து 1996-ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும், பால் தாக்கரே நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட போது மகாராஷ்டிரா உயர் நீதி மன்றத்தால் கடந்த ஆண்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பழைய வழக்குகளை மீண்டும் தோண்டுவதால் நீதி வழங்கிவிட முடியாது; மாறாக, அது மதரீதியான இருக்கத்தைத் தான் உருவாக்கும். ஏற்கனவே காலம் கடந்து விட்டது. இத்தகைய சூழ்நிலையில், பால் தாக்கரேயை விடுதலை செய்து விசாரணை நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் தவறு காண முடியாது” என ஒரு தத்துவார்த்தா விளக்கம் வேறு அளித்தது உயர்நீதி மன்றம்.

மும்பை கலவரத்தின் பொழுது, பால் தாக்கரேயின் தளபதியாகச் செயல்பட்ட மதுக்கர் சர்போத்தர் கலவர சமயத்தில் இராணுவத்திடம் பிடிபட்ட பொழுது அவர் பயணம் செய்த ஜீப்பில் இருந்து உரிமம் பெறாத இரண்டு துப்பாக்கிகள், கொலை வாட்கள், ஹாக்கி மட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பதியப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து மதுக்கர் 1998-99 ஆம் ஆண்டு நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார். “மேல் முறையீடு செய்வதற்கு தகுதியற்ற வழக்குகள் இவைஎன உச்சநீதி மன்றத்திடம் கூறி, மதுக்கருக்கு நிரந்தரமாக விடுதலை வாங்கி தந்தது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.இப்படிப்பட்ட நிலையில் மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசு சமீபத்தில் உச்சநீதி மன்றத்தில் மும்பை கலவரம் தொடர்பாக இறுதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில்பால் தாக்கரே மீதான மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததில் தவறு காண முடியாதுஎன குறிப்பிட்டு உள்ளது. மேலும், கலவரம் நடந்த சமயத்தில் பைகுல்லா போலீசு நிலைய ஆய்வாளராக இருந்த வாஹாலே என்ற மிருகம் தான் ஷாநவாஸைச் சுட்டுக் கொன்றான் என்பது ஊருக்கே தெரிந்த உண்மை. ஆனால், வாஹாலே ஷாநவாஸை சுடவில்லை; அவருக்கும் இக்கொலைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை, இதற்கு எந்த சாட்சியும் இல்லை என்பதால் போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு உள்ளது.அடுத்துஸ்டார் மெட்டல்என்ற ஆலை வளாகத்தில், கலவரத்தின் பொழுது 11 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் 1996-ஆம் ஆண்டே தடா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இவ்வழக்கிலும் மேல் முறையீடு செய்ய முடியாது. என்று பிரமாணப் பத்திரத்தின் மூலம் மறுத்துள்ளது காங்கிரஸ் அரசு.

ஹரி மசூதிக்குள் போலீசு படையோடு நுழைந்து அங்கு தொழுகை செய்து கொண்டிருந்த ஏழு முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற நீக்கில் காப்ஸே என்ற போலீசு ஆய்வாளர் மீது துறை ரீதியாகக் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும், பிராமணப் பத்திரத்தில், “இவ்வழக்கை விசாரிக்க மையப் புலனாய்வுத் துறையை ஏற்கனவே அணுகியதாகவும், சி.பி.., விசாரிக்க மருத்துவிட்டதாகவும், தற்சமயம் இவ்வழக்கை சி.பி.., வசமே ஒப்படைக்க ஆணை பிறப்பிக்க ஆலோசித்து வருவதாகவும்கூறி தனது மெத்தனத்தை நியாப்படுத்தியிருக்கிறது, காங்கிரஸ் கூட்டணி.

ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை மீண்டும் மலம் துடைக்கும் காகிதமாக ஆனது தான் மிச்சம்.

சுருக்கமாக சொன்னால், மும்பை கலவரம் தொடர்பான வழக்குகளில் தாமதமாகவாவது நீதி கிடைக்கும் என்று யாராவது நம்பிக் கொண்டுருந்தால் பிரமாணப் பத்திரத்தின் மூலம் அந்த நம்பிக்கையில் நெருப்பை அள்ளிப் போட்டுவிட்டது, மதச் சார்பற்ற காங்கிரஸ் காட்சி.

April 17, 2008

குஜராத்தில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் – ன் அராஜகம்

கோப்பு வகை: R.S.S — குறிச்சொற்கள்: — lightink @ 1:13 பிற்பகல்

குஜராத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது நாட்டை துண்டாட அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இனிமேல் செஞ்சிலுவை சின்னத்திற்கு பதிலாக ஹிட்லரின் நாஜிக்கள் பயன்படுத்திய ஸ்வஸ்திக் சின்னத்தை பயன்படுத்தும் படி மருத்துவர்களை மிரட்டிக்கொண்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். கீழ் இயங்கும் ஆரோக்கியபாரதி என்னும் அமைப்பு இதற்கென ஒரு பிரச்சார குழுவை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அமைப்பின் பெயர் ஜன அந்தோலன். இதன் தலைவராகபிரவீன் பவாஸ்ர் இருக்கிறார். நேற்று இவர் செய்தியாளர்களை சந்தித்த போது குஜராத்தில் சுமார் 18,000 மருத்துவர்கள் இருக்கிறார்கள் இதில் 10 ஆயிரம் பேர் செஞ்சிலுவை சின்னத்திற்கு பதிலாக ஸ்வஸ்திக் சின்னத்தை அணிய முன்வந்திருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் மீதி உள்ள மருத்துவர்கள் தாங்களாகவே முன் வந்து சின்னத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் அவ்வாறு செய்யாவிடில் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பகிரங்கமாகவே மிரட்டுகிறார். மேலும் மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் ஸ்வஸ்திக் சின்னங்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

1920-ல் நடந்த நாஜிக் கட்சியின் சால்பர்க் மாநாட்டில் தான் ஸ்வஸ்திக் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் நாஜிகள் யூதர்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்ததை மனித குலம் உயிர் உள்ளவரை மறக்க முடியாது. அதேபோல குஜராத்தில் நடந்த இனபடுகொலையை அரங்கேற்றியது இதே ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான். தனது உண்மையான முகத்தை இப்போது ஸ்வஸ்திக் வழியாக உறுதி செய்துள்ளது.

பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் டாக்டர் என்றாலே செஞ்சிலுவை சின்னம் தான் ஞாபகம் வரும். இந்த சின்னத்தை ஜாதி, இனம், மதம் கடந்து அனைவரும் உபயோகித்து வருகின்றனர். இந்த சின்னத்தை தான் இந்திய மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளது. எப்படி ஒரு தன்னிச்சையான அமைப்பு இந்திய அரசியல் அமைப்புக்கு எதிராக இப்படி சின்னத்தை மாற்ற முயல்கிறது. இப்படிபட்ட அராஜகம் குஜராத்தில் நடந்து வருவதால் குஜராத் மருத்துவர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது. இந்த அராஜகத்தை குஜராத் அரசு கைகட்டி, வாய் மூடி வேடிக்கை பார்க்கிறது. காங்கிரஸோ இதைப் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. இந்த துறைக்கு அமைச்சராக இருக்கும் அன்புமணி ராமதாஸ்க்கு இதை பற்றி தெரியுமா?

மீண்டும் ஒரு இனக் கலவரம் நடப்பதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்ாவிட்டால் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் செங்கோட்டையில் உள்ள தேசிய கொடியை கீழே இறக்கி விட்டு ஸ்வஸ்திக் கொடியை ஏற்றிவிடுவார்கள்.

April 10, 2008

திட்ட ‘கமிஷன்’

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 10:41 மு.பகல்

பொது துறை வங்கிகளில் தற்போதுள்ள 70 சதவிகித அரசுப் பங்குகளை 33 சதவீதமாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய திட்ட குழு விபரீத யோசனை கூறியுள்ளது. மேலும் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று திட்ட குழு கூறியுள்ளது.

உலகமய கொள்கையின் உபசகர்களில் ஒருவரான மாண்டேக் சிங் அலுவாலியா மத்திய திட்ட குழு துணைத் தலைவராக பொறுபெற்ற பிறகு இத்தகைய யோசனைகளைத் தான் அந்த அமைப்பு கூறி வருகிறது.

ஏற்கனவே பொதுத் துறை வங்கிகளை குட்டிச் சுவராக்க நரசிம்மம் குழு பல பரிந்துரைகளை கூறியது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக செயல்படுத்தப் படவில்லை என்ற போதும் கொஞ்சம் கொஞ்சமாக நரசிம்மம் குழு பரிந்துரைகளை ரிசார்வ் வங்கியின் துணையொடு மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நரசிம்மம் குழுவின் பரிந்துரைகளை ஒரேயடியாக செயல்படுத்தப் படாதது குறித்து திட்ட குழு கண்ணீர் வடித்துள்ளது.

திட்ட குழு இத்துடன் நிற்கவில்லை கல்வியை மேம்படுத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க எந்த வரம்பையும் அரசு நிர்ணயிக்ககூடாதுதாம். கட்டணம் வசுலிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் தனியார் கல்வி நிறுவனங்களிடமே விட்டுவிடவேண்டும் என்பது தான் திட்டக் குழுவின் யோசனை.

கல்வித்துறையை தனியார் மாக்குவதற்கு அனுசரணையாகவே நீதித்துறையின் சமீபத்திய தீர்ப்புகள் அமைத்துள்ளன. கல்வித்துறை என்பது ஒரு சேவைத்துறை. ஆனால் இது ஒரு வணிகத் துறையாக மாற்றப்படுகிறது. லாபம் கொழிக்கும் தொழிலாக இது மாறியுள்ளத்தால் காளன்கள் போல தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

இதே போல வங்கிதுறை என்பது வசதி படைதோருக்கு மட்டுமே என்று மாறிவருகிறது. மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதில் அரசு மந்த நிலையிலே உள்ளது. இதனால் மாணவர்கள் உயர் கல்வி படிப்பது என்பது எட்டா கானியாகவே உள்ளது. விவசாயிகளுக்கு அரசு உடமை ஆக்கபட்ட வங்கிகளில் கடனை செலுத்த முடியாமல் போனால் அந்த கடனை அரசு தள்ளுபடி செய்ய மறுகிறது. மறுபுறம் பல கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத தொழில் அதிபர்களின் பெயரை வெளியிட அரசு மறுக்கிறது.

இது போன்று மோசமான திட்டங்களை தொடர்ந்து போடும் திட்ட கமிஷனை மக்கள் திட்டம் போட்டு வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை.

April 8, 2008

ஜக்கியின் பின்னால் செல்லும் மூடர்களே

கோப்பு வகை: ஜக்கி வாசுதேவ் — lightink @ 6:54 மு.பகல்

ஜக்கி வாசுதேவ் அவர்களின் பார்வையில் மாதம் தோறும் வெளிவரும் காட்டுப் பூ என்னும் புத்தகத்தை படித்தால் உங்களுக்கு கண்டிப்பாக தலை சுற்றும். தமிழகத்தில் காணாமல் போன எழுத்தாளர்களான பட்டுக்கோட்டை
பிரபாகர், சுபா போன்றவர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டு இவர் விடும் கரடி இருக்கிறதே அதற்கு அளவே இல்லை. ஜக்கி போடும் பிச்சை காசுக்காக தங்களுடைய எழுத்தை விற்று விட்டார்கள்.

காட்டுப் பூ பத்திரிகையில் வெளிச்சம் வருகிறது! என்ற கட்டுரையை எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதி வருகிறார். அதில், பிப்ரவரி மாத வெளியீட்டில் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியான லிங்கத்தின் பிரதிஷ்டை எப்படி நிகழ்ந்தது என்பதை விளக்குகிறார். இதை நீங்கள் அறிய விரும்பினால் சராசரி தர்க்க அறிவை தாண்டி அருளியலில் ஆழ்ந்த அறிவியல் வழிகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்! என்று எடுத்தவுடன் நமது மூளையை கழற்றி வைத்துவிட சொல்கிறார். அருளியலில் ஆழ்ந்த அறிவியல் என்று புதியதாக ஒரு அறிவியலை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் பிரபாகர் அவர்கள்.

தியான லிங்கம் என்பது மூன்று ஜென்மக் கனவாம். ஸ்ரீ பழனி சுவாமிகள் அவர்களின் அன்பான உத்தரவாம். அவர் கனவை நனவாக்க ஜக்கி வாசுதேவ்க்கு மூன்று பிறப்புகள் தேவைப்பட்டதாம்!

ஸ்ரீ பழனி சுவாமிகள் கண்ட கனவு ஜக்கி வாசுதேவ்க்கு எப்படி தெரியும்? ஸ்ரீ பழனி சுவாமிகள் கண்ட கனவு அவரால் ஏன் நிறைவேற்ற முடியாமல் போனது? அதை தடுத்தது யார்? சரி, ஜக்கி வாசுதேவ்க்கு முதல் பிறவி எடுத்த போது தெரியாதா? தன்னால் தியான லிங்கத்தை பிரதிஷ்டை செய்யமுடியாது என்று? சரி, அவ்வாறு மூன்றாவது பிறவியில் தான் தன்னால் முடியும் என்றால் நேரடியாக மூன்றாவது பிறவி எடுக்க வேண்டியது தானே. இடையில் இரண்டு பிறவி எடுத்து காலத்தை கடத்தாமல் நேரடியாக மூன்றாவது பிறவி எடுப்பதன் மூலம் ஸ்ரீ பழனி சுவாமிகள் அவர்களின் கனவை மிக விரைவாக நிறைவேற்றி இருக்க முடியும். எதனால் காலம் கடத்தினார் என்று தெரியவில்லை.

ஜக்கி வாசுதேவ் அவர்களின் முதல் பிறவிபில்வாவில் தொடங்கியது. 370 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் வாழ்ந்தராம் பில்வா. முக்காலும் உணர்ந்த ஞானி ஜக்கி அவர்களுக்கு தன்னுடைய பிறந்த ஊரை குறிப்பிடவில்லை. தேதியையும் குறிப்பிடவில்லை. ஒரு வேலை ஜக்கியின் ஞானத்தால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

அடுத்து இவர் பரம்பரை தொழிலை குறிப்பிடுகிறார். விடியற்காலை வேளையில் வீதிகளில் முரசு அடித்து கொண்டு வருவார்களாம். அவ்வாறு வரும் போது உள்ளுணர்வில் தோன்றும் செய்திகளைச் சொல்லுவார்கள் அல்லது கடவுளைப் போற்றிப் பாடிவிட்டுப் போவார்கள்.

அட, நம்மவுரு குடுகுடுப்காரன் பரம்பரை பா!

இவருக்கு பிடித்தது இரண்டு விஷயம். அது சிவனும் பாம்பும். இவர் பிடிக்கும் பாம்புகள் மகுடிக்கு மயங்கியதோ இல்லையோ ஒரு பெண் இவரை பார்த்து மயங்கி விட்டராம். அவள் உயர் சாதி பெண் வேறு. இந்த விஷயம் தெரிந்த பெண் வீட்டார் பில்வாவை மரத்தில் கட்டி வைத்து பாம்புகளை கொண்டு கடிக்க செய்த போது விஷம் தலைக்கேறியஉடன் ஞானம் பிறந்து சிவயோகியாக ஆகிவிட்டாராம்.

இனிமேல் யாராவது சிவயோகியாக வேண்டுமா? பாம்பை விட்டு தீண்ட செய்தால் நீங்கள் சிவயோகி ஆகிவிடுவீர்கள். சிவயோகி ஆவதற்கு தவம் செய்வது, கோயிலில் கருப்பு பணத்தை உண்டியலில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆன்மீக அன்பர்களே, ஜக்கியின் வழியை பின்பற்றினால் உங்கள் பணமும், நேரமும் மிச்சப்படும். உடனடியாக நல்ல பாம்பை வளர்த்து அதை தீண்ட செய்தால் நீங்கள் சிவயோகி ஆகிவிடுவீர்கள்.சிவயோகி ஆனவுடன் நேராக பழனி அருகில் இருந்த ஸ்ரீ பழனி சுவாமிகள் என்கிற தன்னை உணர்ந்த ஞானியின் பால் ஈர்க்கப்பட்டார். தன் குருவை பார்த்த சிவயோகி தனக்கு சிவனே வந்து ஞானம் தர வேண்டும் என்று கருதினர். அதனால் சிவன் வடிவத்திலேயே காட்சி தந்து, ஒரு கோலால் சிவயோகியின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள ஆக்ஞாவைத் தொட்டார். அந்த வினாடி சிவயோகி தன்னை உணர்ந்தார்.

எனக்கு தெரிந்த வரை இது போன்றதொரு திருவிளையாடலை சிவன் எப்போது நிகழ்த்தினர் என்று தெரியவில்லை அப்படியே நிகழ்ந்து இருந்தாலும் இதற்கு ஆதாரங்கள் உண்டா? சிவ புராணத்தில் எங்கேயாவது இது போன்று ஒரு நிகழ்வு ஏற்படும் என்று முன் அறிவிப்பாவது உண்டா? ஏன் நமது முன்னோர்கள் தெரிவிக்காமல் சென்று விட்டார்கள்?அப்போது தான் தியான லிங்கத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான தொழில் நுட்பத்ையும் அவர்தான் அருளினார். குருவின் உத்தரவை செயல்படுத்த துவங்கிய சிவயோகிக்கு போதிய வாய்ப்புகளும், ஆதரவும் இல்லை அதனால் இன்னொரு பிறவி எடுக்க விரும்பிய சிவயோகி சத்குரு ஸ்ரீபிரம்மாவாகப் பிறப்பை எடுத்தார்.

தியான லிங்கத்தை உருவாவதற்கான அடிப்படைதொழில் நுட்பத்ை வழங்கிய ஸ்ரீ பழனி சுவாமிகள் அப்படியே அதற்கு உண்டான பொன்னும், பொருளையும் கொடுத்து விட்டு சென்று இருக்கலாமே, தேவை இல்லாமல் இன்னொரு பிறவி எடுக்க வேண்டிய வேலை மிச்சம் ஆகியிருக்கும். இல்லை, அதற்கு உண்டான ஞானம் அவரிடம் இல்லையா? இந்த வேலையை ஏன் ஸ்ரீ பழனி சுவாமியால் செய்ய முடியவில்லை? அதற்கு தடையாக இருந்தது யார்?சத்குரு ஸ்ரீபிரம்மாவிடம் தீவிரம் இருந்த அதே அளவுக்கு கோபமும் இருந்ததாம். தியான லிங்கம் அமைக்க பலரின் ஆதரவும், ஆத்மா சாதனைகளும் தேவைப்பட்டதாம். அதுவும் இவருக்கு இப்பிறவியில் கிடைக்கவில்லை. நொந்து போன சத்குரு ஸ்ரீபிரம்மா நடந்து நடந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் ஒரு ஆலயத்திற்கு போய் சேர்ந்தாராம். அப்போது தான் அவருக்கு தெரிந்ததாம் அவரால் இப்பிறவியில் தன்னால் தியான லிங்கத்தை உருவாக்க இயலாது என்பது.

பிறகு சதானந்தர் என்ற பாலயோகி தன் உடலை விட்டு பிரிந்து இருந்தார். ஜக்கி வாசுதேவ் அவர் உடலில் புகுந்து கொண்டு தனது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றார். முடியவில்லை, கடைசியாக அவர் உடலையும் துரந்து விட்டு வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது உச்சியை அடைந்து தன் உடலில் ஏழு சக்கரங்களின் வழியாக உடலை விட்டு விண்ணில் கலந்தாராம். கடைசியாக கர்நாடாகத்தில் பிறந்த ஜக்கியால் தான் தியான லிங்கம் நிறுவப்பட்டது என்பதை மார்ச் மாத இதழில் விளக்குகிறாராம் பட்டுக்கோட்டை பிரபாகர்.

370 ஆண்டுகளுக்கு முன் இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு கொண்டு இருந்தது. இந்திய நாடு பல்வேறு வகையிலும் துன்பப்பட்டு கொண்டு இருந்தது. இதையெல்லாம் விட்டு விட்டு சமுதாயத்திற்கு துளியும் உதவாத ஒரு தியான லிங்கம் அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார் ஜக்கி வாசுதேவ். அதற்காக மூன்று பிறவிகளை எடுக்கிறார், கூடுவிட்டு கூடு பாய்கிறார், அதில் தோல்வியும் காண்கிறார். இந்த கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை வைத்துக் கொண்டு அப்போது இருந்த ஆங்கிலேயர் உடம்பில் புகுந்து அவர்கள் மனத்தை மாற்றி இந்தியாவை விட்டு ஓட செய்து இருந்தால். இந்திய மக்கள் பூமி உள்ள வரை ஜக்கியை மறக்க மாட்டார்கள். ஏன் அவரால் செய்ய முடியவில்லை? ஒரு தியான லிங்கம் அமைப்பதன் மூலம் அடிமைபட்டுக் கொண்டு இருந்த இந்த இந்திய சமுதாயம் விடுதலை பெருமா? பெரும் என்றால் இந்திய விடுதலைக்கு பாடுபட்டுக் கொண்டு இருத்த தலைவர்களிடம் இதை தெரிவித்து இருக்கலாமே? ஏன் ஜக்கி அவர்கள் தெரிவிக்கவில்லை?

சரி, இப்போது தியான லிங்கம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த பூமியில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்து இருக்கிறதா? இல்லையே, இன்னும் 80 கோடி மக்கள் தினமும் ஒரு வேலை மட்டும் உணவு அருந்தி விட்டு வாழ்கிறார்கள். இளைஞ்ர்களுக்கு வேலை இல்லாமல் தவறான பாதையை நோக்கி போகிறார்கள். பெண்கள் முதிர் கன்னிகளாவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தியானம் என்பது நமது உடலைஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு கலையே தவிர சமுதாயத்தில் உள்ள ஒட்டு மொத்த பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. போராடுவதன் மூலமே நமது உரிமைகளை பெற முடியும். அத்தனைக்கும் ஆசைப் பட்டு ஜக்கியின் பின்னால் செல்லும் மூடர்களே தயவு செய்து அனைத்தையும் சந்தேகப்படுங்கள்.

April 1, 2008

பறவை காய்ச்சலும், அமெரிக்காவின் சூழ்ச்சியும்

கோப்பு வகை: டாலர் — lightink @ 11:05 மு.பகல்

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கப்பட்டு பல லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன, ஆனால் ஒருவர் கூட இந்நோய் தாக்கி இறக்கவில்லை என்பது உண்மை. ஆனால் பறவை காய்ச்சல் இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பரவியதாக செய்திகளும், ஊடகங்களும் மக்களுக்கு தெரிவித்தன. இந்தியாவில் பறவை காய்ச்சல் பரவுவதற்கு முன்பே இந்திய அரசு 2005ல் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஷ் என்ற கம்பெனியிடமிருந்து சுமார் 5.8 கோடி ரூபாய் மதிப்பிலா டெமிப்ளு எனும் பறவை காய்ச்சல் வந்தால் மனிதர்கள் ஊட்கொள்ளும் மருத்தினை வாங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், பெருமளவு பங்குகளை வைத்திருப்பவர் அமெரிக்க ராணுவ செயலாளர் டொனால்டு ரம்ஸ்பெல்டு.

அந்த சமயத்தில் இந்தியாவில் பறவை காய்ச்சலுக்குகான அறிகுறியே இல்லை. ஏன் மனிதர்களையும், பறவைகளையும் அது தாக்கவில்லை. ஆனால் நமது மத்திய அரசு ஒரு பன்னாட்டு நிறுவனத்திடம் பல கோடி ரூபாய்க்கு அதுவும் அதிக விளையுள்ள மருத்துகளை வாங்கியுள்ளது. மார்ச் 19, 2006 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நீலோல்பால் பாசு இந்த மோசடியை பகிரங்கமாக வெளியிட்டார். உடனே மத்திய சுகாதார துறை ஒரு அறிக்கையின் மூலம் இது வரை 70 ஆயிரம் டோஸ் மருத்துகள் வாங்கப்பட்டுள்ளது இனி கொள்முதல் நிறுத்தப்படுகிறது மேலும் இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று அறிவித்தது.

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் 16 நாடுகளில் 350 பேருக்கு பறவைக் காய்ச்சல் தோன்றியுள்ளது. 2003ல் 217 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இந்த நோய் மனிதனை பாதிக்கவில்லை. பறவை காய்ச்சல் உண்டாக்கும் கிருமிகள் 70 டிகிரி சென்டிகிரெட் வெப்பத்தில் இறந்து விட கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் இக்கிருமிகள் ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றும் தன்மை கொண்டதல்ல. ஆகவே இந்தியர்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று தெரிவித்தது.

சந்தை கிடைத்தால் சாணியையும் விற்பது போல அமெரிக்கா 2006 ஜனவரி 23 அன்று இந்திய சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு தகவல் தருகிறது. அது என்னவென்றால் இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோயை குணப்படுத்துவதற்கு குறிப்பாக, குழந்தைகளுக்கு உண்டான டெமிப்ளு ஸிரப் போதுமான அளவு இருப்பு இருக்கிறதா என்பதை கவனியுங்கள் என்றும் ( டெலிகிராப் தினசரி) அடுத்து 29 அன்று இந்த தொற்று நோய் இந்தியாவில் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கின்ற வகையில் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தது. இத் தகவல்களை தனியார் தொலைக்காட்சிகளும், செய்தியாக வெளியிட்டு மக்களிடையே பீதியை கிளப்பியது. திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்ததன் பலன் அமெரிக்க ராணுவ செயலாளர் டொனால்டு ரம்ஸ்பெல்டுன் வங்கிக் கணக்கு நிரம்பி வழிய ஆரம்பித்தது.

இந்த மருந்தின் காப்புரிமை பெற்ற ரோஷ் நிறுவனம் 2003ல் பெற்றுத்த நஷ்டத்தில் இயங்கிவந்தது. ஆனால், 2005ல் 16 சதவீதம் நிகர லாபம் பெற்றுள்ளது. பொய் மற்றும் பீதி கிளப்பும் பிரச்சாரத்தின் மூலம் மூன்றாம் உலக நாடுகளை பயமுறுத்தி தன்னுடைய மருத்துகளை விற்று கொழுத்த லாபம் சம்பாதித்துள்ளது. இதே போன்ற பல்வேறு சூழ்ச்சிகளை உலக நாடுகள் முழுவதும் செய்வதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை கொழுக்க செய்வதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் ஆகும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.