சர்வதேச தாதா அமெரிக்கா தைரியமாக இப்போது இந்தியாவை மிரட்டுகிறது அணுசக்தி உடன்பாட்டை உடனடியாக நிறைவேற்றவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார் நிகொலஸ் பர்னஸ். சென்ற மாதம் வரை இந்திய அரசிடம் அமெரிக்கா போனால் வராதது, பொழுது விடிந்தால் சிக்காது என்று நேயமாக பேசியது. ஆனால், இப்போது அணு சக்தி ஒப்பந்தம் சம்மந்தமாக இந்தியா துணிச்சலான முடிவு எடுக்க வேண்டுமென்கிறார். அமெரிக்கா சார்பாக இவர்தான் அணுசக்தி ஒப்பந்தத்தை கண்காணித்து வருபவர். இவர் அமெரிக்காவின் உள்துறை இணைஅமைச்சரும் ஆவார்.
உடன்பாடு என்பது நம்பிக்கை அடிப்படையில், நட்பின் அடிப்படையில் மலர வேண்டும். ஆனால் இங்கே ஏற்றுக் கொள்கிறாயா, இல்லையா என்று நெஞ்சுக்கு நேராக வாளை நீட்டுகிறது அமெரிக்கா. காரணம், அமெரிக்காவின் பொருளாதாரம் எல்லா துறைகளிலும் நொறுங்கி வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா மீது வலுக்கட்டாயமாக அணுசக்தி உடன்பாட்டை திணித்து தன்னுடைய வலிக்கு நிவாராணத்தை தேடிக்கொள்ள முயல்கிறது. இதுவரை எத்தனையோ நாடுகள் நமக்குஅணு உளைகளை அமைத்து தந்து இருக்கிறான. இவற்றில் ஒன்றுகூட அமெரிக்கா துளிகூட உதவியத்ில்லை. தற்சமையம் கூடங்குளத்தில் உள்ள அணு மின்நிலையம் எந்த ஒப்பந்தமும் போடாமல் ரஷ்யா நிறுவி தருகிறது.
அண்மையில் ரஷ்யாவிற்கு சென்ற நமது பிரதமர் எந்த அடிமை ஒப்பந்தமும் இல்லாது இன்னும் மூன்று அணு உலைகளை அமைத்து தர ரஷ்யா முன்வந்தது. ஆனால் அமெரிக்காவிற்கு பயந்து அந்த உடன்பாட்டில் கையெழுத்துப் போடாமலே வெறுக்கையோடு திருப்பி வந்தார் மண்மோகன் சிங். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாவு வாங்குவது இந்தியாவிற்கு அதிக லாபம் தரும். இந்த திட்டத்தை உருவாக்கியவர் அன்றைய பெட்ரோலிய துறை அமைச்சர் மணிசங்கர் ஐயர். அமெரிக்கவின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து அவரை மன்மோகன் சிங் அவரை வேறு துறைக்கு மாற்றினார்.
இதற்கு முன்பு இந்தியாவில் பல்வேறு அரசியல் வாதிகள் ஆட்சி புரிந்துள்ளார்கள். அப்போது எல்லாம் அமெரிக்கா தன் வாலை நுழைக்க முயற்சி செய்தது. அதன் பாட்சா பலிக்கவில்லை. இப்போது மன்மோகன் சிங் பிரதமர் ஆனதும் அமெரிக்கா துள்ளி குதிக்கிறது. காரணம் மன்மோகன் சிங் அரசியல்வாதி அல்ல. அமெரிக்காவின் உலகமாயம், தாராளமாயம், தனியார்மையம் போன்ற தத்துவங்களுக்கு விளக்கவுரை எழுதிய பொருளாதார மேதை. அமெரிக்காவின் அதிக்கத்தில் உள்ள உலக வங்கியில் தலைமை கணக்கராக இருந்தவர். எனவே அவர் சிந்தனை ஓட்டம் எப்படியிருக்கும் என்று சொல்ல தேவையில்லை.
“கடைசியாக அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்கு உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை கவனிக்காமல் அடுத்து வரும் ஜூன் மாதத்திற்குள் இந்தியா ஒரு முடிவை எடுக்க வேண்டும். எங்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா செயல்படுத்த வேண்டும்” என்று பர்ன்ஸ் கட்டளையிடுகிறார். இப்போது மன்மோகன் சிங் வாயே திறப்பதில்லை. அவருக்காக நாடாளுமன்றத்தில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜித் தான் பதில் சொல்கிறார். இதுவரை யாரும் இந்தியாவின் தேசியத்தை இப்படி அம்மனம் ஆக்கியத்ில்லை.