ராஜாவின் புதிய ஊழல்

பெப்ரவரி 26, 2008

டாலர் வீழ்ச்சியும், சில உண்மைகளும்

கோப்பு வகை: டாலர் — lightink @ 9:34 மு.பகல்

அமெரிக்காவில் டாலர் வீழ்ச்சி ஏற்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கபடுகிறது. இந்த டாலருக்கும் இந்தியாவும் என்ன சம்ந்தம்? அமெரிக்காவிற்கு வயிறு வலி என்றால் உடனே இந்தியா மருந்து சாப்பிடுகிறது. ஏன் இந்த நிலமை, இதன் பின்னே உள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை பற்றி ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக அமெரிக்க மக்கள் எல்லா மனித உறவுகளையும் சந்தை உறவுகளாக என்னும் பண்பாட்டில் ஊறிப் போனவர்கள். அமெரிக்காவின் சந்தை பல வகைப்படும். சப்-பிரைம் மார்க்கெட் நம்மூர் கந்து வட்டியை தான் இப்படி அழைக்கிறார்கள். அவர்கள் பாஷையில் முதன்மை சந்தையின் கீழ் சந்தை(அல்லது உப-சந்தை) என்று பொருள். கடத்தலை ஓரங்கட்ட அழைக்கப்பட்ட சந்தை பெரி-பெரல்-மார்க்கெட், விபசாரத்தை பாலியல் சந்தை (செக்ஸ்-மார்க்கெட்), ஏலம் போடுவதை நியாயவிலை சந்தை (பயர்-பிரைஸ்-மார்க்கெட்), வேலை இல்லாத் திண்டாட்டத்தை தொழிலாளர் சந்தை (லேபர்-மார்க்கெட்) என்கின்றனர். இது தான் நடை முறையில் நெருக்கடி கொண்டு வருகிறது. அதன் விளைவாக அமெரிக்க மக்களில் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும், உழைபோருக்கும் அமெரிக்காவை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும் நிலையற்ற பொருளாதாரம் ஏற்படுகிறது. இதில் அமெரிக்காவின் சப்-பிரைம் மார்க்கெட்டை பற்றி நாம் இங்கே அலசுவோம். அதற்கு முன் டாலர் வரலாரை நாம் தெரிந்துக் கொள்வோம்.

டாலர் என்பது அமெரிக்க நாணயம், அதுமட்டும் அல்ல இன்று உலகில் பெரும்பான்மை நாடுகளில் அந்நிய செலவானியாக பண்படுத்தும் பொது நாணயமும் ஆகும். 60 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் முடிந்த தறுவாயில் உருவான உலக அரசியல் நிலவரத்தால் டாலர் பொது நாணயமாக ஆகியது. டாலர் பொது செலவானியாக ஆனதால் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் ஏற்றுமதி மூலம் டாலர் சம்பாதிக்க வேண்டும். அல்லது உலக வங்கியிடம் கடன் வாங்காக வேண்டும். அமெரிக்க விருப்படி டாலரை எவ்வளவு வேண்டுமானாலும் அச்சு அடித்துக் கொள்ளலாம் என்ற நிலை உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் ஆளும் வட்டாராத்திற்கு கடனையும், வட்டியையும் வைத்து உலக அரசியலை தான் விருப்பப்படி வளைக்க முடியும் என்ற நப்பாசையை வளர்க்க உதவியது. உலக வங்கியின் கடனும், வட்டி விகிதமும்
நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது. சந்தை விதிகள் அதற்கு பொருந்தாது! இதனால் வட்டியை நிற்னைப்பது அரசியல் ஆக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் வட்டி விகிதங்ககள் மாறின.ஏழைக்கு ஒன்று, பணக்காரனுக்கு ஒன்று,வருங்கால வைப்பு நீதிக்கு ஒன்று, விவசாயிக்கும், வருமானம் குறைந்தோருக்கும் ஒரு வட்டி என்று தடி எடுத்தவன் எல்லாம் தன்டல் காரணக மாற்றியது. உலக வங்கிக் கடனில் ஒரு நிபந்தனை உண்டு, அந்நிய செலவானியாக ஏற்ற நாடுகள் தங்களது சேமிப்புகளை அமெரிக்க அரசாங்காக வங்கியிலே டெபாஸிட் செய்ய வேண்டும்.அதற்கு அரசு நிற்னைக்கின்ற வட்டி வழங்கப்படும். இன்று ஏழை நாடுகளின் இந்த டெபாஸிட் மலைப் போல் வளர்ந்து அமெரிக்கா அரசிற்கு கடன் சுமை அதிகமாக ஆகிவிட்டது. அடுத்து அதனுடைய ராணுவச் செலவிற்கு, யுத்தத்தை தொடர்வதற்கும் ஏராளமான டாலர் தேவைப்படுகிறது. பகா சூர நிதி நிறுவனங்கள் முன் பேர வர்தகத்திற்கும், பங்கு சந்தை சூதாட்டத்திற்கும் பல கோடி டாலர் தேவைப்படுகிறது. இதன் உடன் விட்டுக்கடன் தவனை முறையும் சேர்ந்து டாலர் மதிப்பை மேலும் வீழ்ச்சி அடைய செய்துவிட்டது.

இப்போது சப்-பிரைம் மார்க்கெட்டை(விட்டுக்கடன் தவனை முறை) பார்ப்போம். அமெரிக்காவில் உள்ள வருமானம் குறைதோருக்கு எளிய தவனையில் வீட்டு கடன் வழங்கும் திட்டம். இதை பெரும்பாலும் தனியார் நிறுவங்கள் தங்களுக்கு உள்ளே போட்டி போட்டுக் கொண்டு வட்டியை குறைத்து கொண்டு வாரி வாரி மக்களுக்கு கடன் வழக்கின. இதில் பலபேர் சொந்த வீடு என்னும் வலையில் வீழ்ந்தனர். தங்களால் அசலையும், வட்டியையும் திருப்பி செலுத்த முடியுமா என்பதை பற்றி கவலை படாமல் கையோபம்மிட்டுள்ளனர் உண்மையில் அவர்களுக்கு நிதி சம்மந்தமான கல்வி அறிவு இல்லை. இதனால் வட்டி கட்ட முடியாத நிலமையில் சொந்த வீட்டை இழந்தனர். வாடகை வீட்டை தெடுவோர் எண்ணிக்கை அதிகமானது. இதில் மருத்துவ செலவால் வீட்டை அடகு வைக்க வந்தோறையும் நிதி நிறுவங்கள் கடன் வலையில் சிக்க வைத்தது. வீட்டு கடனோடு அநியாய வட்டி தீட்டும் கீரெடிட் கார்டும் சேர்த்து கொண்டது.

2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு 3 -ஆம் தேதியிட்ட போஸ்டன் குளோபல் என்ற அமெரிக்க பத்திரிகை “தகுதி நியதிகளை தளர்த்தி வழங்கிய கடனின் இருண்ட பக்கம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியது. வீட்டு கடன் கொடுப்பதில் திருப்பிகொடுக்கும் திறனை கணக்கிடும் நியதிகளை வங்கிகள் தளர்ியதால் வீடு விற்பனை சந்தையிலிருந்த தேக்கம் போய்விட்டது. 69 சத அமெரிக்க குடும்பங்ககள் சொந்த வீடு பெற கடன் பெற்றன. அதே நேரம் வீடுகளுக்கு கேற்பட்ட கிராக்கியால் ரியல் எஸ்டேட் பிசினலும், அடுக்கு மாடிகள், வீடுகள் விற்பனையிலும் விலைகள் தாறுமாறாக ஏறி விட்டன. கடன் சுமையும், வட்டியும் தாங்க முடியாது போய் தவணை கட்ட முடியாமல் தவிப்போரின் வீடுகளை கடன் கொடுத்த நிறுவனங்கள் கைப்பற்றும் எண்ணிக்கை பெருகி வருகிறது” என்று எச்சரித்தது.அமெரிக்க நிதி புழக்கத்தை நெறிப்படுத்தும் மைய அரசின் அதிகாரி (அட்டார்னி ஜெனரல்) நடத்திய புலனாய்வில் “நிதி நிறுவனங்கள் கடன் பெறத் தகுதி படைதோருக்கு அதாவது வருவாய் மிகுந்தொருக்கு 5.7 சத வட்டி வீதிக்கப்படுகிறது. ஆனால் வருவாய் குறைந்தோருக்கு 10 முதல் 14 சதம் வரை வட்டியை திட்டி உள்ளனர்” அதற்கு அவர்கள் கூறுகிற காரணம் கடன் முழுவதும் அடைபடாது என்ற ஆபத்து இருப்பதால் கூடுதல் வட்டி விதித்து நட்டத்தை சரி கட்டுகிறோம். அதோடு சந்தை நிலவரத்தால் மாறும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வட்டியை வசூல் செய்வோம் என்ற ஒப்பந்தமும் போடபட்டுள்ளத்தையும் அவர் கண்டார்.

அடுத்து பிப்ரவரி 17, 2007 வால் ஸ்ட்ரிட் ஜர்னல் என்ற பத்திரிகை அலறியது: சப்-பிரைம் மார்க்கெட்டில் கடன் தவணை தவறியதால் ஏற்படும் முன் மூட்டுதல் கடன் தவணை சந்தையில்அழிவை கொண்டு வந்து விட்டது. ஏறத்தாழ 12 லட்சம் வீடுகளை கடன் தவணை தவறியதால் நிதி நிறுவங்கள் கைப்பற்றியுள்ளன. அதாவது 92 குடுபங்களில் ஒன்று மாட்டிக் கொண்டது. சுமார் 80 சத கடன்கள் ஏ.ஆர். எம். வகையாகும். இந்த வருடம் ஜனவரி 3 தேதியிட்ட கார்டியன் என்ற நடு நிலை இதழ் கத்தியது: அமெரிக்காவில் வறுவாயில் தாழ்ந்த நிலையில் இருப்போருக்கு தகுதிக்கு மீறிய அளவு கடன் வாங்க தூண்டியதால் வந்த வினையிது. இதனால் பிரிட்டன் வங்கிகள் 140 ஆண்டுகளில் காணாத நெருக்கடியை சந்திக்கின்றன. 2007 ம் ஆண்டு பணக்காரர்களுக்கு நல்ல ஆண்டாகத் தான் துவங்கியது. பங்குச் சந்தையில் கடந்த ஆறு ஆண்டில் இல்லாத உற்சாகம் இருந்தது. ஆனால் இந்த வருடம் அவ்வாறு இருக்கும் என்று சொல்ல முடியாது என்று கை கழுவியது.

சுருக்கமாக சொல்வதென்றால் இன்று அமெரிக்க விரித்த கடன் வலையில் தானே மாட்டிக் கொண்டது. எப்படி பங்கு சந்தையில் உள் ஆள் வர்த்தகத்தை கிரிமினால் குற்றம் என அமெரிக்கா சட்டம் போட்டது போல் கந்து வட்டி கொடுப்பதும், அதை வாங்குவதும் குற்றம் என்று சட்டம் போடத வரை டாலர் வீழ்ச்சி என்பது தொடர்ந்து ஏற்படும்.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.